புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 ஜூலை, 2014


நான் வெளியேற்ற முன்னர் நீங்களாக அரசைவிட்டு வெளியேறிச் செல்லுங்கள்!- ஜனாதிபதி
"நான் வெளியேற்ற முன்னர் எம்முடன் உடன்படாதவர்கள் அரசிலிருந்து உடனே வெளியேறலாம்." இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் பொதுமுகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆகியோரை நோக்கி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது பொது தீர்மானங்களுக்கு உடன்படாதவர்கள் அரசைவிட்டு வெளியேறிச் செல்லுமாறு அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், நவீன் திஸாநாயக்க ஆகியோரைப் பார்த்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தெரிவித்துள்ளார் என சிங்கள, ஆங்கில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
காலை இழுப்போரும், சர்வதேச சமூகத்திடம் கோள் சொல்பவர்களும் அமைச்சரவையில் அங்கம் வகிக்க வேண்டியதில்லை எனவும் இதன்போது ஜனாதிபதி மஹிந்த கூறினார் என்று தெரிவிக்கபப்டுகின்றது.
தாம் பதவி விலக்குவதற்கு முன்னதாக தாங்களாகவே அமைச்சர் பதவிகளை இராஜினாமாச் செய்து கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் நாட்டில் இடம்பெறும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தன்னைச் சந்திக்கும் சர்வதேச சமூகப் பிரதிநிதிகளிடம் தெரிவித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அண்மையில் பெளத்த தீவிரவாத அமைப்பான பொதுபலசேனா அமைச்சர் ஹக்கீமை அரசிலிருந்து உடனடியாக ஜனாதிபதி வெளியேற்ற வேண்டும் என வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad