புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014


மகிந்த சென்ற விமானத்தை தரையிறங்க அனுமதிக்காத கனடா 
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கியூபாவிற்குப் பயணம் செய்த விமானம் மீள் எரிபொருள் நிரப்புவதற்காக கனடாவில் இறங்குவதற்கு அனுமதி கோரப்பட்ட போது, அந்நாட்டு அரசாங்கத்தினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
[
1983 கறுப்பு ஜுலை தமிழர்களின் அரசியலில் ஒரு அங்கமாகியது. அத்தோடு தமிழர்களின் வாழ்வியலை மாற்றியமைத்தது. குறிப்பாக உலகின் பார்வையைத் தமிழர்களின்பால் திருப்பிய தொடுபுள்ளியாக இந்த இனக்கலவரம் அமைந்து விட்டது.
புலம்பெயர்ந்த மக்கள் ஒரு மாறுதலை மேற்குலகில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மேற்குலகைப் பொறுத்தவரை இரண்டு விடயங்களிற்காக இனப்பிரச்சினை தீர்வை வலியுறுத்தின. ஆனால் பிரச்சினை தீர்க்கப்படாதவரை புகலிடக் கோரிக்கையும் தொடர்ந்து கொண்டேயிருக்கும் என்பது தான் உண்மை. 
தற்போதைய அரசியற் செயற்பாடுகள் கனடாவில் தமிழர்களிற்கு வெற்றியானவை தமிழர்களின் பலம் புரியப்பட்டிருக்கிறது. தமிழர்கள் கனடாவின் ஓர் அங்கம் என்பதை விட கனடாவின் வளர்ச்சியின் பங்காளர்கள் என்பது தெளிவாக உணரப்பட்டிருக்கிறது.
250 ஆயிரம் தமிழர்கள் கனடாவில் இருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் சொல்லுமளவிற்கு நிலைமை வளர்ந்துள்ளது. இங்குள்ள தமிழர்களின் சனத்தொகை தொடர்பாக சகல கட்சிகளும் வேறு வேறு கருத்தைக் கொண்டிருந்தன.
2009ம் ஆண்டு இறுதிப் போர் இலங்கையில் முடிவுறும் வரை கனடா தமிழர் விவகாரத்தில் மிக எச்சரிக்கையாகச் செயற்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்களிற்குக் கூட அரச கட்டமைப்பு 2009ம் ஆண்டு வரை கனடா வருவதற்கு விசாக்கள் வழங்கப்படவில்லை.
இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கனடிய அரசின் உத்தியோகபூர்வ குழு இலங்கை சென்றிருந்த போது அந்த குழுவை இராஜதந்திர வரையறைகளை மீறி அவமதித்து அனுப்பினார். அதன் பலனை இலங்கை இப்போதும் கனடாவிடமிருந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இது போன்ற இதுவரை வெளியுலகின் பார்வைக்கு வராத பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் குறித்த கருத்துக்களையும், தரவுகளையும் அவர் பகிர்ந்து கொண்டார்தமிழ்வின் 

ad

ad