புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


உலகக் கோப்பையுடன் ஜெர்மனி அணி நாடு திரும்பியது
பிரேசிலில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணி சாம்பியன் பட்டம் பெற்றது. ரியோடி ஜெனீரோவில் ஞாயிற்றுக்கிழமை நடந்த பரபரப்பான இறுதிப்போட்டியில்
ஜெர்மனி அணி 1–0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி, 4–வது முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அதேசமயம் வெற்றிக் கோப்பையுடன் வரும் வீரர்களை வரவேற்க இன்று காலை முதலே ரசிகர்கள் திரண்டு வர ஆரம்பித்தனர். பிரண்டன்பர்க் கேட்டில் லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டதால் எங்கு திரும்பினாலும் மக்கள் தலைகளாக காட்சியளித்தன.
இந்நிலையில் வெற்றிக்கோப்பையுடன் ஜெர்மனி வீரர்கள் இன்று நாடு திரும்பினர். அவர்கள் வந்த விமானம் ரியோ டி ஜெனிரோவில் இருந்து பெர்லின் விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய அவர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் வெளியில் வந்தபோது, விமான நிலையத்தின் வெளியில் வெள்ளமென திரண்டிருந்த மக்கள் வீரர்களை வாழ்த்தி கோஷமிட்டனர்.

ad

ad