புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014




ரந்து விரிந்து பிரமாண்டமாய் காட்சி தரும் சிங்கார சென்னையில் ஒற்றைப் பெயரை கேட்டால் ஒட்டுமொத்த பணக்கார வர்க்கமும் அதிர்ந்து போகிறது. அதேசமயம் வட சென்னையில் உள்ள ஏழை வர்க்கமோ அவரை ஹீரோவாக பார்த்து தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. இருமுகமாக காட்சிதரும் அவர்... பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் வழக்கறிஞர் ஆர்ம்ஸ்ட்ராங்க்.

இவரைச் சுற்றி எழும் சர்ச்சைகள், இவர் மீது விழுந்த பிம் பங்கள் என அனைத்துக்கு மான பதில்களை தேடி பெரம்பூரில் உள்ள அவரின் அலுவலகத்தில் பிரத்யேக பேட்டிக்காக சந்தித்தோம்...

சிரித்த முகமாய் இருக்கும் உங்கள் போஸ் டர்களை வடசென்னையின் சந்து பொந்தெல்லாம் பார்க்க முடிகிறது. குறுகிய காலத்தில் எப்படி, இப்படி ஒரு அரசியல் வளர்ச்சி?


என் அரசியல் வாழ்க்கை பல தடைகளைத் தாண்டிதான் வந்தது. எங்கப்பா தி.க.காரர். பத்து குழந்தைங்க. முதல் அஞ்சு பசங்களுக்கு தந்தை பெரியார்தான் பெயர் வைத்தார். எனக்கு அரசியல் குரு, அண்ணன், உயிர் எல்லாமே முன்னாள் எம்.எல்.ஏ. புரசை ரங்கநாதனும், பூவை மூர்த்தியும்தான். 2006-ல் சுயேட்சையா நின்னு பழைய 53-வது வார்டுல வெற்றி பெற்றேன். யானை சின்னத்தில் நின்னு போட்டியிட்டேன். "இது மாயாவதி மேடம் சின்னம்' என நண்பர்கள் சொன்னபோது... "இல்லை, இது பாபாசாகேப் சின்னம்' என்றேன். அதன்பின் என்னை உ.பி. கூட்டிச் சென்று மாயாவதி மேடத்தை சந்திக்க வைத்தார்கள். முதல் சந்திப்பிலேயே "என்ன யானை சின்னம் பி.எஸ்.பி. யோட சின்னமில் லையோ?'’ என கிண்டலாக கேட்டார்கள். பெரம்பூரில் பேசியது உ.பி.யில் கேட்டுள்ளது. மேடத்தின் கூர்மதிதான் பி.எஸ்.பி.யில் என்னை இணைத்தது. 


சிவகாமி ஐ.ஏ.எஸ்., செல்வப் பெருந்தகை பி.எஸ்.பியில் இருந்து பிரிந்தமைக்கு அரசியலில் உங்களுக் கென்று தனி அணி சேர்த்து அதிகாரம் செய்ததுதான் காரணம் என்றொரு கருத்து நிலவுகிறதே?

இல்லை... இல்லை. சிவகாமி என்றைக்கும் என் அக்காதான். செல்வப்பெருந்தகையைப் பொறுத்தவரை "வெறும் தலித்துக்கு மட்டும் உழைக்கத்தான் கட்சி' என்றார். "உ.பி.யில் அனைத்து சாதியினர் வாக்குகளையும் பெற்றுத் தான் ஆட்சியை அமைத்தாங்க மாயாவதி மேடம். எனவே அனைவருக்குமாக உழைக் கணும்' என்றேன். இதுதான் முரண்பட காரணமே தவிர வேறெந்த ஈகோவுமில்லை.

உங்களின் பாதுகாப்பில்தான் தர்மபுரி இளவரசன் இருந்தார். அப்படியிருக்க அவர் தனியாக போக விட்டிருக்கக்கூடாது. அதனால்தான் இறந்துவிட்டார் என சக அமைப்பினர் பேசுகின்றனரே?


எங்கள் அமைப்பு வழக்கறிஞர் ரஜினிகாந்த்தும் நானும் கவனமாகத்தான் பார்த்துக் கொண்டோம். இளவரசன் எங்கள் பேச்சைக் கவனிக்காமல் அலட்சியமாக இருந்தார். அதுவே அவர் பிரிய காரணமாகிவிட்டது.

தர்மபுரி சம்பவத்தை வைத்து நீங்கள் அரசியல் செய்வதாக கூறப்படுகிறதே?


மக்களை சாதி ரீதியாக பிளவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியது பா.ம.க. அன்புமணிதான். நாங்கள் இல்லை. இந்தப் பிரச்சினை நடக்கக் காரணமே அரசுதான். சின்ன உதாரணம் ... எத்தனையோ சிறைச்சாலை இருக்க புழலில் வந்து காடுவெட்டி குருவை அடைத்தார்கள். அங்கு உள்ளே இருக்கும் தலித் கைதிகள் அவரை எதாவது செய்ய வேண்டும்... அதை வைத்து இரு சமூகங்கள் என்றைக்கும் சேரவிடாமல் செய்ய வேண்டும் என அரசு கருதியது. ஆனால் நாங்கள் சுதாரித்து சரியாக நடந்துகொண்டோம். வன்னியர்கள் -தலித்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே எங்கள் ஆசை. இரு சமூகமும் வறுமையில்தான் உள்ளன. அனைத்து சமூகத்தையும் அணிதிரட்டி மேம்படுத்த வேண்டும் என்பதுதான் லட்சியம்.

இன்று சென்னை சிட்டியில் கிரைம் நடவடிக்கையில் ஈடுபட்டு கைது செய்யப் படுகிறவர்கள் பெரும்பாலானோர் "நான் அண்ணனோட ஆள்'’ என உங்கள் பெயரைத்தானே பயன்படுத்துகி றார்கள்?
 ஏங்க, நான் என்ன ஆளும்கட்சிக்காரனா? அதிகாரம் செய்ய... இது வதந்தி. யாராக இருந்தாலும் தப்பு செஞ்சா சட்டப்படி நடவடிக்கை எடுங்க.

சென்னை அம்பேத்கர்  சட்ட கல்லூரி மாணவர்கள் மோதலில் தலித் மாணவர்களை தூண்டிவிட்டதாக உங்கள் மீது வழக்கு போட்டார்களே?


எனக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் கால் செய்து "பசங்க பிரச்சினை பண்றாங்க... ப்ளீஸ் தடுங்க'’என்று சொல்லி அருகில் இருந்த மாணவன் யாரோ ஒருவனிடம் மொபைலை கொடுக்க, ‘"படிக்கப் போனா படிக்கணும், வம்பு தும்பு பண் ணக்கூடாது'னு சொன்னேன். அடுத்து கல்லூரி முதல்வர் பேச... நான் உடனே, என் நண்பர் சத்யாவிடம் "என் காரை எடுத்துகிட்டு போயி உடனே அங்க என்ன நடக்குதுன்னு பாரு'ன்னு சொன்னேன். என் கார் அங்க போகவும் நான்தான் அங்கு பிரச்சினையைத் தூண்டினேன் என பொய்யாக ஜோடித்தனர். உண்மையில் அன்று இரவு டி.வி பார்த்துதான் எனக்கே விஷயம் தெரியும்.

சென்னையில் பரவலான இடங்களில் நில அபகரிப்பு சம்பவங்களில் உங்கள் பெயரும் அடிபடுகிறதே? போலி டாகுமென்ட்கள் மூலம் வம்சாவளி நிலத்தை அபகரிக்க நீங்கள் உறுதுணையாக இருப்பதாக பேசப்படுகிறதே? பெரம்பூர் பத்மநாபா தியேட் டர் விவகாரம் உதாரணம்.

முன்பு அண்ணன் பூவை மூர்த்தி மேல கூட இப்படிதான் ரெட்டி, நாயுடு நிலத்தை எல்லாம் பிடிங்கிட்டார்னு சொன்னாங்க. ஆனா அவர் தலித்களின் பஞ்சமி நிலத்தைதான் மீட்டார். அப்ப டித்தான் நான் தலித் மக்களின் பஞ்சமி நிலத்தை மீட்க சட்டப் படி போராடியுள்ளேனே தவிர எந்த நில அபகரிப்பும் செய்ய வில்லை. அப்படிச் செய் பவர்களுக்கு துணை போனதுமில்லை. அந்த திரையரங்க விவகாரம் கோர்ட் தலையீட்டில் முடிந்துவிட்டது. அதில் நான் தலையிடவேயில்லை.

பிற்படுத்தப்பட்ட மக்க ளுக்கு எதிராக தலித் மக்க ளை நீங்கள் தூண்டிவிடுவ தாக சொல்லப்படுகிறது. அது உங்களுக்கு தெரியுமா?


அப்படியிருந்தால் பொது தொகுதியில் நின்ற நான் 2400 வாக்கு வித்தியாசத்தில் எப்படி அன்று ஜெயித்து கவுன்சிலர் ஆகியிருக்க முடியும்?! 

காவல்துறையோடு உங்க ளுக்கு நெருங்கிய தொடர்பு இருப் பதாக சொல்லப்படுகிறதே?


ஆயிரம் ரூபாய் வழிப்பறி செய்தேன், ஆட்டோ ஓட்டுனரை மிரட்டினேன் என்றெல்லாம் என் மீது பொய் வழக்கு போட்டவர் கள் அவர்கள். அதை எதிர்த்து நீதிமன்றத்தில் சட்டபோராட்டம் செய்து வென்றவன் நான். அவர் களோடு கள்ள உறவு வைத்துக் கொள்பவன் நான் இல்லை. 

மொத்தத்தில் நீங்கள் யார்? டானா? அரசியல் தலைவரா?


ஒருவன் கிரைம் செய்ய கார ணமே காவல்துறைதான். முன் பெல்லாம் வயசுப் பசங்க தப்பு செய்தால் அவர்களை அடித்து அவங்க பெற்றோர்களை கூப் பிட்டு பசங்களை கண்டித்து வைங்க என எழுதி வாங்கி விட்டு காவல்துறை அனுப்பும். இன்றோ உடனே அவர்களை கைது செய்து சிறையில் தள்ளு கின்றனர். உள்ளே அவனுக்கு சகல விசயங்களையும் செய்து கொடுக்கின்றனர். கஞ்சா அடிப் பதும், பல ஊர் ரவுடியின் தொடர்பும் கிடைப்பதால் வெளியே வந்து கிரைம் செய்கி றான். இப்படிதான் கிரைம் ரேட் ஏறுது. இதை மாற்ற பாபா சாகேப் வழிகாட்டியது போல, என் இளைஞர்களுக்கு கல்வி கொடுக்க முயற்சித்து பயிற்சி வகுப்புகள் வீதி தோறும் நடத்தி வருகிறேன். கல்வியால் மட்டுமே கட்டப் பஞ்சாயத்து ரவுடியிசம் ஒழிக்க முடியும். இப்போ சொல்லுங்க நான் செய்றது தாதாயிசமா?

ad

ad