புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஜூலை, 2014


ஒரு இயக்கம் தோல்வி அடைந்ததற்காக வருந்தினார்கள் என்றால்  அது மதிமுகவுக்காகத்தான் : வைகோ

 அழகியமண்டபத்தில் இன்று நடைபெற்ற ம.தி.மு.க. பிரமுகர் இல்ல திருமணத்தை நடத்தி வைத்து ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசினார்.


அவர்,  ‘’தேர்தலில் தோல்விகள், இழப்புகள் நமக்கு புதிது அல்ல. மக்கள் நல்லெண்ணத்தில், நன்மதிப்பில் நாம் தோற்கவில்லை. ஒரு இயக்கம் தோல்வி அடைந்ததற்காக மக்கள் வருந்தினார்கள் என்றால் அது ம.தி.மு.க.வுக்காகத்தான் இருக்கும்.
நாம் கொள்கை வாதிகள். நமது இயக்க தொண்டர்கள், நிர்வாகிகள் போல வேறு எந்த இயக்கத்திலும் கிடையாது. அடுக்கடுக்கான சோதனைகளை தாங்கிக் கொண்டு நம்மைபோல யாரும் செயலாற்றமுடியாது. சின்னாபின்னமாகி இருப்பார்கள்.
தன்னலமற்ற தொண்டர்களை கொண்ட இயக்கம் ம.தி.மு.க., வைகோ தன்னலமற்ற தலைவராக உள்ளார் என்று அதன் தொண்டர்கள் நம்புகிறார்கள். அவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப நான் செயல்படுவேன். தமிழர்கள் உரிமைக்காக நாம் போராடுகிறவர்கள். எங்கு தமிழர்களுக்கு பிரச்சினை வந்தாலும் போராடுகிறோம்.
மத்திய அரசு பாடத்திட்டத்தில் நாடார் குலத்தை இழித்து சொன்னபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினோம். முல்லைபெரியாறு பிரச்சினையில் உரிமைக்காக போராட்டம் நடத்தினோம்.
ஈழத்தில் நமது தொப்புள்கொடி உறவான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். அதற்கு காரணமானவர் டெல்லி வந்தபோது நாங்கள் எதிர்த்தோம். போராட்டம் நடத்தினோம். நமக்கு என்ன கிடைக்கும் என்று கருதமால் சுயநலமில்லாமல் போராடுகிறோம். கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாமல் தொடர்ந்து ம.தி.மு.க. மக்களுக்காக போராடும்’’என்று பேசினார்.

ad

ad