புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014

தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்கமைத்து செயற்படுத்துதல்; சபையில் நிறைவேறியது பிரேரணை 
news
வட மாகாணத்தில் கணனியைக் கற்பிக்கும் பெரும்பாலான தனியார் கல்வி நிலையங்களில் தரமான ஆசிரியர் இன்றி கற்பிக்கப்பட்டு வருகின்றது என வடக்கு மாகாண உறுப்பினர் பசுபதிப்பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.


வடக்கு மாகாண சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதன்போது பசுபதிப்பிள்ளையின் 3 பிரேரணைகளில் முதற்பிரேரணயாக குறித்த பிரேணை கொண்டுவரப்பட்டது.

மேலும் வடக்கு மாகாணத்தில் உள்ள கல்வி நிலையங்களில் மாணவர்களது உபாதைகள் கணக்கெடுக்கப்படுவதில்லை. அத்துடன் கணனி நிலையங்களில் கற்பிக்கும் ஆசிரியர்கள் தரமான ஆசிரியர்களாக இல்லை.

அத்துடன்  வெளிநாடுகளில் செல்லுபடியாகும் என வழங்கப்படும் சான்றிதழ்கள் இலங்கையிலும் செல்லுபடியாகவில்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கு கல்வி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் சபையில் பிரேரித்தார்.

எனினும் எதிர்ப்புக்கள் இன்றி பிரேணை ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இரண்டு பிரேரணைகள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ad

ad