புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

25 ஜூலை, 2014




தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து தி.மு.க. தலைமை, கட்சிப் பிரமுகர்கள் 33 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதில் தி.மு.க., மாஜி மந் திரியும் மா.செ.வுமான முல்லைவேந்தனை மட்டும்  அடிப்படை உறுப்பினரிலிருந்து அதிரடியாக நீக்கியிருக் கிறது. இந்த நிலையில் முல்லைவேந்தன் கட்சி தாவப்போகிறார் என்று ஒரு பக்கம் பரபர டாக் அடிபட... அவரை சந்தித் தோம்... 

விவசாய வேலை யைப் பார்வையிட்டுக் கொண்டிருந்தவர், நம்மைக் கண்டதும் அங்கிருந்த ஷெட்டில் உட்கார வைத்து பேட்டிக்குத் தயாரானார். அங்கே சுவர்களில் கலைஞர், ஸ்டாலின், அழகிரி படங்கள் நிறைய மாட்டப்பட்டிருந்தன. வியப்பு மாறாமலே அவரிடம் கேள்விகளை வைத்தோம்.

நீங்கள் கட்சியில் இருந்து நீக்கப்படும் அளவிற்கு என்ன செய்தீர்கள்?


தெரியவில்லை. நான் கட்சிக்கு துளியளவும் துரோகம் நினைத்ததில்லை. கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது என்று கட்சித் தலைமை கவலைப்படுவதில், எந்தத் தவறும் இல்லை. எதனால் இந்தத் தோல்வி என மா.செ.க்கள் உள் ளிட்டவர்களை விசாரிப்பதிலும் தவறு இல்லை. ஆனால் தேர்தலின்போது என்ன நடந்தது? ஸ்டாலினே தன் னிச்சையாக வேட்பாளரை அறிவித்தார். நிறுத்தினால் ஜெயிப்பார்களா என்று கூட ஆராய்ந்துபார்க்காமல், மாவட்ட கழகம் பரிந் துரைக்காத நபர்களை நிறுத்தினார். அவரால் தன்னிச்சையாக நிறுத்தப்பட்டவர்கள் ஜெயிக்கவில்லை என்றால் அதற்கு மா.செ.க்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டுமா? தகுதியற்ற வேட்பாளர்களை அறிவித்த ஸ்டாலினுக்கு, தோல்வியில் பங்கே இல்லையா? எங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாக நோட்டீஸ் அனுப்பினார்கள். விளக்கம் கேட்டார்கள். என்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமளவுக்கு நான் என்ன தவறு செய்தேன்? என் மீது யாராவது புகார் கொடுத்திருக் கிறார்களா?  அப்படி புகார் கொடுக்கப்பட்டிருந்தால் அது குறித்து விசாரிக்கப்பட்டதா? என கேள்விகளை எழுப்பி, நான் கட்சிக்கு எதிராக எந்த விதத்திலும் நடந்துகொள்ளவில்லை என்று விளக்கம் எழுதி யிருந்தேன். அவர்கள் எதிர்பார்த்தது விளக்கத்தை அல்ல; இனி எந்தத் தவறும் செய்யமாட்டோம் என்கிற மன்னிப்புக் கடிதத்தை. தவறே செய்யாமல் நான் எதற்கு மன்னிப்புக் கேட்கவேண்டும்? 

ஸ்டாலினுக்கு உங்களை ஏன் பிடிக்கவில்லை?

தலைவர் கலைஞரைவிட தனக்குதான் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கவேண்டும் என்பது ஸ்டாலினின் எதிர்பார்ப்பு. அப்படி எங்களால் கலைஞ ரை இரண்டாம் இடத்திற்குத் தள்ள முடியாது. அவர்தான் கட்சியின் வேர், விழுது, எல்லாமும். அவரைப் புறக்கணித்துவிட்டு கட்சியில் இருக்கும் எல்லோரும் தனக்கு சேவகம் செய்யவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அதை எப்படி ஏற்க முடியும்? நான் என் சுயமரியாதையை அவரிடம் இழக்க விரும்பவில்லை. எனவே அவருக்கு என்னைப் பிடிக்கவில்லை.

எப்போதிலிருந்து புறக்கணிக்கிறார்?


கட்சியின் பவர் புள்ளிகள் தொடங்கி கட்சியின் அடிப்படைத் தொண்டர்கள் வரை எல்லோரையும் நான் மதித்து நடப்பவன்.  அதே சமயம் எனக்குக் கூழைக் கும்பிடு போட வராது. அதனால் பல வருடங்களாகவே அவருக்கு என் மீது வெறுப்பு. குறிப்பாக 2011 தேர்தலில் என்னை எதிர்த்து, வேலு வாத்தியார் என்பவர் நின்றார். அவர் கட்சி ஓட்டில் 18 ஆயிரம் ஓட்டுக்களைப் பிரித்த தால், நான் வெறும் 15 ஆயிரம் ஓட்டில் தோற் றேன். அந்த வேலு வாத்தியார் மீது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரணம், அவரை உதயசூரியனுக்கு எதிராக நிறுத்தியதே ஸ்டாலின்தான். இதையும் சகித்துக்கொண் டேன். 2012-ல் என் மகன் திருமணத்திற்கு, ஸ்டாலினை அறிவாலயத்தில் சந்தித்து தேதி கேட்டேன். வீட்டுக்கு வந்து பார்க்கச் சொன்னார். வீட்டுக்கு போய் காத்திருந் தேன். டைரியைப் புரட்டிப் பார்த்து விட்டு "தேதியே இல்லை' என்றார். "நீங்கள் எந்தத் தேதி கொடுத்தாலும் பரவாயில்லை' என்றேன். அவரோ "தேதியே இல்லை' என்று முடிவாகச் சொல்லிவிட்டார். இதனால் அங்கிருந்து கோபாலபுரம் போய் கலைஞரைப் பார்த்து சேதியைச் சொன்னேன். அவரோ "இங்கேயே நான் நடத்தி வைக்கிறேன்' என்று பெருந்தன் மையாக நடத்திவைத்தார்.  திருமண வர வேற்பை பெங்களூரில் வைத்தேன். அப்போது ஸ்டாலின் கட்சிப் பிரமுகர்களை எல்லாம் தொடர்புகொண்டு, "முல்லைவேந்தன் வீட்டு நிகழ்ச்சிக்குப் போகவேண்டாம்' என்றார். அதே சமயம் அழகிரியைத் தொடர்புகொண்டு, "பத்திரிகை வைக்கணும், எப்ப வரட்டும்' என்றேன். "இதற்காக நீ அலையவேண்டாம் நான் வந்துவிடுகிறேன்' என்று சொல்லிவிட்டு, அவர் வந்துவிட்டுப் போனார். கட்சி மா.செ.க் கள் கூட  கலைஞரைப் பார்க்கக்கூடாது. தன் னைத்தான் பார்க்கவேண்டும் என்று நினைக்கிறவர் ஸ்டாலின். 

எப்படிச் சொல்கிறீர்கள்?


2011 சட்டமன்றத் தேர்தல் முடிந்தபின் நான் உட்பட 7 மா.செ.க்கள் கலைஞரைப் பார்க்க கோபாலபுரம் சென்றோம்.. அப்போது அங்கே வந்த ஸ்டாலின் எங்களைப் பார்த்து முகம் சுருக்கினார். "அறிவாலயத்தில் இருங்கள். தலைவரை அழைத்து வருகிறேன்' என்றார். நாள் முழுக்க அறிவாலயத்தில் காத்திருந்தோம். பிறகு மாலையில் போன் போட்டு "கோபாலபுரம் வாருங்கள்' என்றார். அங்கு ஓடினோம். ஸ்டாலினோ, "தலைவர் மூடு அவுட்டில் இருக் கிறார். அவரிடம் யாரும் எதுவும் பேசக்கூடாது. வணக்கம் மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடவேண்டும்' என்று கண்டிஷன் போட்டார். நான் மேலே மாடிக்கு போய் கலைஞருக்கு வணக்கம் சொன் னேன். "சரி கிளம்புங்க' என ஸ்டா லின் சைகை செய்தார். நான் ஒதுங்கி நின்றுகொண்டேன். ஒவ்வொரு வரும் இப்படி வணக்கம் சொல்லி விட்டு நின்றோம். ஸ்டாலின் "போங்க... போங்க' என  ஜாடை காட்டியபடியே இருந்தார். அத னால் தயக்கத்தோடு, "சரி போய்ட்டு வர்றோம்ணே'ன்னு கலைஞரிடம் சொன்னேன். கலைஞரோ, "என்ன அவ்வளவு அவசரமா? அப்புறம் எதுக்குய்யா வந்தீங்க'ன்னு கடிந்து கொண்டு, எப்படி இருந்தது தேர் தல்ன்னு விசாரிக்க ஆரம்பிச்சிட் டார். எங்களிடம் அரைமணி நேரத் துக்கு மேல் உற்சாகமாக உரையாடி னார் கலைஞர். கீழே சென்ற எங்களிடம் கடுகடுன்னு இருந் தார் ஸ்டாலின்.  மத்த மா.செ.க் கள் என்னிடம், இவர் ஒருத்தரே போதும்னு என்னிடம் முணு முணுத்தார்கள்.

உங்க மதிப்பீடு?


அவர் ஒரு சர்வாதிகாரி. கலைஞரை ஓரம்கட்டிவிட்டு கட்சியை கைப்பற்றத் துடிக் கிறார். அதற்காக அவர் எதை யும் செய்வார். சுயமரியாதை யோடு யாரையும் நடத்தமாட் டார். கலைஞரைப் பார்க்க மா.செ.க்கள் மந்திரிகள் போகும் போது, தயாளு அம்மாள் எதிர்ப் பட்டால் எழுந்து நிற்பார்கள். அவரோ உட்காருங்கப்பான்னு அன்பா விசாரிச்சிட்டுப் போவார். ஸ்டாலின் வீட்டுக்கு போனா, துர்கா ஸ்டாலின் வரும்போது எல்லோரும் எழுந்து நிக்கணும். அவர் தலை தென்படும்வரை நின்றபடியே இருக்கணும். இதுதான் ஸ்டாலினும் அவர் குடும்பமும் கடைப்பிடிக்கும் சர்வாதிகாரம்.

கட்சிக்கு எதிராக நீங்கள் நடந்துகொண்டதே இல்லையா?


கலைஞரை ஜெ.’நள்ளிர வில் கைது செய்த நேரத்தில் கட்சித் தலைமை என்னை ஒதுக்கி வைத்திருந்தது. அந்த நேரத்திலும் மொரப்பூரில் 500 பேரைத் திரட்டி, ரயில் மறியல் போராட்டம் நடத்தினேன். இது கட்சிக்கு எதிரானதா?

தர்மபுரி மாவட்டத்தில் 114 இடங்களை கட்சி அலுவலகங் களுக்காக வாங்கிப் போட்டிருக் கிறேன். கட்சிக்கு சொத்துக் களைச் சேர்த்திருக்கிறேன். இது கட்சிக்கு எதிரானதா?  

சரி, உங்கள் அடுத்த இலக்கு?

ஸ்டாலின் ஒரு பாறை யாக இருக்கலாம். நான் அதை உடைக்கும் சிற்றுளிகளில் ஒரு வன். தமிழகம் முழுக்க ஸ்டாலி னால் அவமானப்படுத்தப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.காரர் கள் நிறையபேர், நீறுபூத்த நெருப்பாக இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் சந்தித்து இணைக்கப்போகிறேன். அதற்கு அழகிரி உறுதுணையாகவும் எங்களுக்குப் பாதுகாப்பாகவும் இருப்பார். 

ad

ad