புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014


சூறையாடல்களுக்குள் அகப்பட்டுள்ள சொத்துக்களை பாதுகாக்க வடக்கு மக்கள் முன்வர வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்


சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
“தேசிய அபிவிருத்திக்காக
உள்ளூராட்சியினை வலுப்படுத்தல்” என்ற தலைப்பில் இன்றைய தினம் யாழ்.நகர விடுதியில் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், தலைவர்கள், செயலாளர்களுக்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாச்சாரம் எம்மைப் பீடித்திருந்தது.
அந்த காலகட்டத்தில் எம்மைக் கட்டாயப்படுத்திய வந்த அலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய அந்தக் கலாச்சாரம் போரின் பின்னரும் தொடர வேண்டிய அவசியல்லை.
உண்மையில் எமது நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் கட்டுக் கோப்புக்குள் வர வேண்டும்.
சக நல் வாழ்வை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். காலாதி காலமாகப் பல நாடுகள் பரிசீலித்துப் பார்த்து சரி பிழை கண்டு பிடித்து மனித வள மேம்பாட்டுக்காக அமைத்து வைத்திருக்கும் சில அடிப்படை நடைமுறைகள் இனியாவது பாதுகாக்கப்பட்டு எமது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை வலுப்படுத்தப் பாவிக்கப்பட வேண்டும்.
இதனை பொதுநலவாய உள்ளூராட்சி மன்றங்களின் இணையம் நடாத்த முன்வந்துள்ளமை சாலச்சிறந்ததே.
பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் கீழிருந்து சுதந்திரம் பெற்ற 54 நாடுகளின் நட்பு ரீதியான நடைமுறைத் தொடர்புகளைத் தன் வசம் வைத்திருக்கும் ஒரு கூட்டே இந்த இணையம்.
ஏழை, பணக்கார, சிறிய, பெரிய என்ற பேதங்கள் இல்லாமல் பொதுநலவாய நாடுகள் என்ற பாரிய விருட்சத்தின் கிளைகளாக இருந்து ஒன்று கூடிச் செயலாற்றும் ஒரு அமைப்பே இந்த இணையம்.
தற்போது அரசாங்கம் வேறு, நாம் வேறு என்ற ஒரு பாகுபாடு எம்முள் வளர்ந்திருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னரும் அதே விதமான ஒரு மனோநிலை தொடர்வதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.
இது மாற வேண்டும் பொதுச் சொத்துக்கள் எம் மக்களின் சொத்து என்ற எண்ணம் எம்முள் வளர வேண்டும். இது எமது சொத்து. அவற்றைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை என்ற எண்ணம் எம்முள் வளர்க்கப் படவேண்டும்.
இந்த உளப்பாங்கை உங்கள் மக்களிடையே விருத்தி செய்ய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம் எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும்.
உள்ளூராட்சியில் தேவையான நிதி மூலங்களைத் தேடிக் கண்டுபிடித்து நிதியை முறையாகக் காப்பதற்கும் அதன் மூலமாக அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்குமுரிய வழி வகைகளைக் கண்டறிய வேண்டியதும் தவிசாளர்காளாகிய உங்கள் ஒவ்வொருவரையுஞ் சார்ந்த கடப்பாடுகளாவன.
இது தற்கால கட்டத்தில் முட் கிரீடமாக உங்கள் மீது சுமத்தப் பட்டாலும் அதனை மலர்க் கிரீடமாக மாற்ற வேண்டிய பொறுப்பு உங்களுடையது. அந்தப் பொறுப்பை உங்களுக்கு எடுத்துக் காட்டி உங்கள் தகைமைகளைப் மேம் படுத்தவே இந்தக் கருத்தரங்கம் நிகழ்கின்றது.
பல்வேறுபட்ட மனக்காயங்களுக்குள்ளான எமது மக்கள் சுயமாக வளம் பெறவும் மனித உரிமையைப் பேணவும் உயரிய ஆற்றல்களை பெற வழிகாட்ட வேண்டியது உங்களது பொறுப்பென்றால் மிகையாகாது.
நாங்கள் ஒரு புதிய பயணத்தில் உள் நுழைந்துள்ளோம். வன்முறைக்கு வந்தனம் செலுத்திவிட்டு வருங்காலத்தை நோக்கி வளமான மனித மேம்பாட்டுக் கொள்கைகளை முன்வைத்து முன்னேறுவோமாக என தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.TAMILWIN.com/show-RUmsyHSaLcnq4.html#sthash.9vYSRC8U.dpuf

ad

ad