புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூலை, 2014

பிரேசிலின் வரலாற்றுத் தோல்வியால் பதவி விலகிய லூயிஸ் பிலிப்பே ஸ்கொலாரி 
news
பிரேசில் காற்பந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர் லூயிஸ் பிலிப்பே ஸ்கொலறி தனது பதவியில் இருந்து விலகியுள்ளார் என பிரேசில் காற்பந்தாட்ட சங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.
 
பிரேசில் காற்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜோஸ்மரியாமரினுடன்  நேற்று முந்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 
உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடரில் சொந்த நாட்டில் வைத்து நான்காமிடத்தையே பிரேசில் அணியால் கைப்பற்ற முடிந்தது. மேலும் அரை இறுதிப் போட்டியில் பிரேசில் காற்பந்தாட்ட வரலாற்றில் இதுவரை பெற்றிராத மோசமான தோல்வியை சந்தித்தது.
 
அதற்கு அடுத்த மூன்றாமிடத்தை தீர்மானிக்கும் போட்டியிலும் தோல்வியையே பிரேசில் அணி சந்தித்தது.  
 
எனவே பிரேசில் அணியின் முன்னேற்றத்திற்கு மாற்றங்கள் தேவை, புதிய பயிற்றுவிப்பாளர் குழு தேவை என்பது அனைவரதும் கருத்தாக இருந்த வேளையில் ஸ்கொலறி மற்றும் அவர்களது குழுவினரை விடுவிக்கும் சரியான தருணம் இதுவெனவும் அவர்களின் பணி கடந்த காலத்தில் மிகப்பெரியளவில் இருந்துள்ளது. அதற்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் எனவும் பிரேசில் காற்பந்தாட்ட சம்மேளன தலைவர் ஜோஸ்மரியாமரின் தெரிவித்துள்ளார்.  
 
65 வயதான ஸ்கொலறி, 2002ஆம் ஆண்டு முதல் பிரேசில் அணியின் பயிற்றுவிப்பாளாராக கடமையாற்றியுளார். இந்த உலகக் கிண்ண காற்பந்தாட்ட தொடருடன் அவரின் ஒப்பந்தம் நிறைவடையும் நிலையில் தனது ராஜினாமாக் கடிதத்தை ஸ்கொலறி கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

ad

ad