புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஜூலை, 2014

நேவியே எனது கணவரை இன்னமும் வைத்திருக்கின்றது;மனைவி ஒருவர் உருக்கமாக சாட்சியம் 
எனது கணவன் உயிரோடு தான் இருக்கின்றார். அவரை நேவி தான் வைச்சிருக்கிறது. யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை.
எனது கணவர் என்பது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்க முடியாது என இன்று பெண்ணொருவர் சாட்சியமளித்தார்.

அவர் மேலும் சாட்சியமளிக்கையில்,

எனது கணவர் 18.03.2009 அன்று வலைஞர்மடம் கடலில் மீன்பிடிக்க சென்றபோது காலை 5.30 மணிக்கு கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்டார். எனினும் அவர் குறித்து இதுவரை தகவல் எவையும் கிடைக்கவில்லை.

எனினும் பத்திரிகைகள் ஊடாக எனது கணவர் கைது செய்யப்பட்டதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் உறுதிப்படுத்தியுள்ளதை அறிந்து கொண்டேன் .
அவருடன் மேலும் இருவர் போனவர்கள் எனினும் அவர்களை கடற்படை விடுவித்துவிட்டனர். இவர்களே என்னிடம் கணவர் கைது செய்யப்பட்டதை தெரிவித்தனர்.

எனக்கு 3 பிள்ளைகள் அதில் மூத்த மகனுக்கு தகப்பனை நினைத்து மனநோய் ஏற்பட்டுவிட்டது. எனினும் இன்னும் தகப்பனின் முடிவு பிள்ளைகளுக்கு கூறாது விட்டால் பிள்ளைகள் எல்லோரும் மனநோய் ஆகிவிடுவார்கள் .

எனது மூத்தபிள்ளைக்கு 13வயது இரண்டாவது பிள்ளைக்கு 10 வயது கடைசிப்பிள்ளைக்கு 6 வயது . நான்  சாப்பாடு செய்து கொடுத்து தான்  சீவிக்கிறம் .எனது கணவர் உயிருடன் இருக்கிறார் என்று நம்புகின்றேன்.

பிள்ளைகளும் நானும் தனிய தான் இருக்கின்றோம். எனக்கு யாரும் உதவிக்கு  இல்லை. காலை 6மணிக்கு போய் மாலை 6மணிக்கு வரும்வரையும்  எனது பிள்ளைகளுக்கு என்ன நடக்கின்றது என்று எனக்கு தெரியாது. அத்தோடு நான்  தொடர்ந்தும் பிள்ளைகளைக் கவனிங்காது இருந்தால் பாரிய பிரச்சினைகள் ஏற்படும்.

கடலுக்கு காலை 5.30 மணிக்கு போய்விட்டார். வலை போட்டுவிட்டு 8.30 மணிக்கு திரும்பவேண்டும் 18 ஆம் திகதி 8.30 மணி தாண்டியும் கணவர் வரவில்லை. இதற்குப் பின்னர் அவருடன் பிடிபட்டு விட்டவர்கள் கடற்படை கொண்டுபோவதாக தெரிவித்தனர்.

அத்துடன் கையை கட்டிவைத்துவிட்டு உடுப்பொன்றும் இல்லாமல் தான் கூட்டிக்கொண்டு போனார்களாம். புல்மேட்டையில் போய் கேட்டோம் அப்போது 45பேரை பிடித்து வைத்திருக்கின்றோம் ஆனால் விபரம்  வெளியிடவில்லை என்று கடற்படை கூறியது.

நேவி வைச்சிருக்கிறது எண்டு தான் நான்  நினைக்கிறன். என்கணவர் உயிருடனேயே இருக்கிறார். யார் எங்களை சித்திரவதை செய்தாலும் யாருக்கும் பயப்படவில்லை. எனது கணவர். இது எனது உரிமை. எனது உரிமையினை யாராலும் கேட்கேலாது. எனக்கு கணவரும் , பிள்ளைகளுக்கு அப்பாவும் என்ற உரிமை ஒரு தடவைதான் கிடைக்கும்.

எனவே இப்படி இருப்பதைவிட யாரும் கொண்டு போய் போட்டாலும் இனிமேல் எமக்கு பிரச்சினை இல்லை என ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்தார்.



ad

ad