புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூலை, 2014





ட்டுமொத்த காவல்துறையையும் திகிலில் உறைய வைத்திருக்கிறது அந்த சம்பவம்.

சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்நிலைய எஸ்.ஐ. கணேசனுக்கு கடந்த 9-ந் தேதி, அவரது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்ட சேந்தநாட்டில், சத்யா என்ற உறவுக்காரப் பெண்ணோடு திருமணம் நடந்தது. கல்யாணத்துக்காக லீவு போட்டிருந்த மாப்பிள்ளை கணேசன், தன் புது மனைவியோடு தன் சேந்தநாடு வீட்டிலேயே ஹனிமூன் கொண்டாடினார். 

கல்யாணம் ஆன ஒரு வாரத்திலேயே ஆடி பிறந்ததால், பெண் வீட்டார் 16-ந் தேதி  ஆடிவரிசை செய்து, புதுப்பெண் சத்யாவை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆடி மாதம் பிரித்த போதும், கணேசனும் சத்யாவும் ’"எழுந்தாச்சா? காபி குடிச்சாச்சா? சாப்பிட்டாச்சா?' என மாறி மாறி அன்பை பரிமாறியபடியே இருந்தனர். இந்த நிலையில் சேந்தநாட்டில் இருந்த கணேசனுக்கு, ஒரு அழைப்புவர அவர் 21-ந் தேதி சொந்த ஊரில் இருந்து அரக்கப் பரக்க சிதம்பரத்துக்குப் புறப்பட்டார்.      
  

22-ந் தேதி செவ்வாய்க் கிழமை இரவு 8 மணியளவில், எஸ்.ஐ.கணேசனை, ‘"சாப்பிட்டாச்சா?' என விசாரிக்க, அவரது புது மனைவி சத்யா தொடர்பு கொள்ள முயன்றார். ரிங் போய்க்கொண்டே இருந்தது. அதனால் சிதம்பரத்தில் இருக்கும்  உறவுக்காரரான மணிகண்டனைத் தொடர்பு கொண்டு, "அவுங்க போனை எடுக்க மாட்டேங்கறாங்க. என்ன ஆச்சுன்னு தெரியலை. பயமா இருக்கு' என்று சத்யா சொல்ல,  அந்த மணிகண்டன், சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் இருக்கும் சக்கரா அவென்யூ சுகம் அப்பார்ட்மெண்ட் ஸில் இருக்கும் எஸ்.ஐ.கணேசனின் வீட்டுக்குப் போனார். உள்ளே லைட் எரிந்தது. ஃபேன் ஓடியது. ஜன்னலில் எட்டிப் பார்த்த மணிகண்டன், அதிர்ந்துபோனார். உள்ளே கட்டிலில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார் கணேசன். போலீஸுக்குத் தகவல் பறந்தது. 

டி.எஸ்.பி.ராஜாராம் உள்ளிட்டோர் ஸ்பாட்டுக்கு வந்தனர். அக்கம் பக்கத்தில் விசாரிக்கத் தொடங்கினர். அப்போது பக்கத்து வீட்டுப் பெண்மணி ""வழக்கமா இங்க வந்துபோகும் பெண்தான் வந்தாங்க. கொஞ்ச நேரத் துக்கு முன்னதான் இங்க இருந்து கிளம்பிப் போனாங்க'' என்றார். அங்க அடையாளம் கேட்டார் டி.எஸ்.பி. ""ஆள் கவர்ச்சியா, கட்டா, சிவப்பா இருப்பாங்க. இன்னைக்குப் பச்சைக் கலர் புடவை கட்டியிருந்தாங்க'' என்றார். போலீஸ் டீம் பஸ் நிலையத்தில் விசாரிக்க, ஒரு ஆட்டோ டிரைவர் ‘""ஓ, எஸ்.ஐ.கூட வருவாங்களே அவங்களா? கொஞ்சம் முன்னடிதான் சேலம் பஸ்ல ஏறினாங்க''  என்று சொல்ல, விருத்தாசலம் டி.எஸ்.பி. வெங்கடேச னைத் தொடர்புகொண்டு ‘சேலம் பஸ்ஸில், பச்சைக்கலர் புடவை கட்னவளைத் தூக்குங்க'' என்றார் கடலூர் டி.எஸ்.பி.ராஜாராம். போலீஸ் டீம் விருத்தாசலம் பஸ் ஸ்டாண்ட் அருகே அந்த பஸ்ஸை வழிமறித்தது. பச்சைப் புடவை வனிதாவைக் கீழே இறக்கிவிட்டு, டி.எஸ்.பி.ராஜா ராமுக்குத் தகவல் கொடுக்க, ""அவளை பரங்கிப்பேட்டை ஸ்டேஷனுக்குக் கொண்டுவாங்க'' என்றார் அவர். 

ஸ்லிவ்லஸ் ஜாக்கெட்டில் கவர்ச்சியாக இருந்த வனிதா, போதையில் இருப்பது தெரிந்தது. வனிதா முதலில் வாய்திறக்க மறுக்க, இன்ஸ்பெக்டர் தீபா, கன்னத்தில் அறைந்தார். இன்ஸ்பெக்டர் உதயகுமார் லத்தியால் காலில் ரெண்டு போடுபோட்டார். 

""எம்பேரு வனிதா. வயசு 25. கிள்ளைக்கு பக்கத்துல இருக்கும் அம்பலதடிகுப்பம்தான் என் ஊர். நான் செண்ட்ரிங் வேலைசெய்யும் கலைமணியைக் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டேன். எங்களுக்கு 9 வயதில் மகன் இருக்கான். இடையில் மினிபஸ் கண்டக்டர் சார் லஸ் எனக்கு நட்பானார். சார்லஸோட போகும் போதெல்லாம், நான் முஸ்லிம் பெண் மாதிரி பர்தா போட்டுக்கிட்டுப் போவேன். ஒருநாள் பின்னலூர் முஸ் லிம் இளைஞர்கள் எங்களை மறிச்சி, ""ஏண்டி முஸ்லீம் பொண்ணான நீ, வேற மதப் பயலோட போறியா''ன்னு பிரச்சினை பண்ணினாங்க. அப்ப நான் இந்துதான்னு சொல்ல, அதுக்கு ""ஏண்டி பர்தா போட்டு எங்கள் மதத்தை கேவலப்படுத்தறே?''ன்னு கிள்ளை போலீஸ் ஸ்டேஷனுக்குத் தகவல் கொடுத்தாங்க. அப்ப அங்க எஸ்.ஐ.யா இருந்த கணேசன் வந்தார். அவர் பார்வை என் மேலேயே இருந்தது. என்னை மாயப் புன்னகை யோடு அனுப்பிவச்சிட்டார். 

ஒருநாள் என் கணவருக்கும் எனக்கும் சண்டை வந்தது. எஸ்.ஐ.கணேசன்ட்ட போய் புகார் கொடுத்தேன். அன்று முதல் நெருக்கமானோம். நாங்கள் போகாத இடம் இல்லை. தங்காத லாட்ஜ் இல்லை. அவரோட யூனிபார்மை போடச்சொல்வார். போட்டுக்காட்டினால், அவருக்கு குஷி வந் துடும். சதா என் அழகிலேயே மயங்கிக் கிடந் தவர், சிதம்பரத்தில் என்னைத் தனிக் குடித் தனம் வைத்தார். அவர் என்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னார். அதோட என் னை சட்டரீதியாக விவாகரத்தும் வாங்கவைத் தார். புதுவை அண்ணா நகரிலும் ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து அங்கும் குடும்பம் நடத்தி னோம். இந்த நிலையில், 2 வாரம் டிரெய்னிங் குக்குப் போறேன்னு கணேசன் சொல்லிட்டுப் போனார். போனவர் என்னிடம் பேசவே இல்லை. அதனால் சந்தேகம் வந்துச்சு. விசாரிச் சப்ப அவர் யாரையோ கல்யாணம் பண்ணிக் கிட்டதா தகவல் வந்தது.  கொதிச்சிப்போய்ட் டேன். புதுவை வீட்டில் இருந்து இந்த கடலூர் வீட்டுக்கு மூன்று நாளைக்கு முன்னாடியே வந்துட்டேன். போன் போட்டுக்கிட்டே இருந்தேன். திங்கட்கிழமை காலையில் போனை எடுத்தார். உடனே வாங்க. பாக்கணும் போல இருக்குன்னேன். எனக்கும்தான் செல்லம்ன்னு சொன்னவர் திங்கட்கிழமை மதியமே வந்தார். என் தாலியை கழுத்தில் இருந்து இறங்க வச்சவன், இன்னொருத்திக்கு தாலி கட்றானா? இவனை விடக்கூடாதுன்னு என் மனசு கொந்தளிச்சிது. 

எதையும் காட்டிக்காம இருந்தேன். திங்களும் செவ்வாயும் நினைச்ச நேரமெல்லாம் ஜாலியா இருந்தோம். விருப்பத்துக்கு மது அருந்தினோம். செவ்வாய்க்கிழமை மாலை அவருக்கு ரம் கொடுத்தேன். நான் ஒயின் குடிச்சேன். மறுபடியும் சந்தோசம் கொண் டாடினோம். கணேசன் ரொம்ப டயர்டா படுத்தார். அவருக்கு போதை உச்சிக்கு ஏறியது, அவரை எழுப்பிப்பார்த்தேன். எழலை. வெளியில் கிடந்த செங்கல் ஒன்றை எடுத்து, கணேசனின் கழுத்துக்குக் கீழே, வெட்றதுக்கு வாகா வச்சேன். கத்தியை எடுத்தேன். நிதானமா பாத்துப் பாத்து வெட்டினேன். உச்ச போதையில் அவரால் துள்ளக்கூட முடியலை. உயிர் இல்லைன்னு தெரிஞ்ச தும் அங்கிருந்து கிளம்பிட்டேன். நானும் தற்கொலை செய்துகொள்ளலாம்ன்னுதான் நினைச்சேன். என் முன்னாள் கணவர் கலைமணிக்கு போன் போட்டேன். எடுக்கலை.  பக்கத்து வீட்டுகாரருக்கு போன்போட்டு, "என் பிள்ளை சபரியைப் பார்த்துக்கச் சொல்லுங்க. நான் சாகப்போகிறேன்'னு சொல்லிட்டு, பஸ் நிலையம் போனேன். சேலம் பஸ் எதிரில் வர, மனம்போன போக்கில் ஏறினேன். என்னை மடக்கிட்டீங்க'' என்றாள் இறுக்கமாக. 

எஸ்.ஐ. கணேசனைப் பற்றி விசாரித்தபோது, அவரது சித்தப்பா கோவிந்தசாமி ""கணேசனின் அப்பா அம்மா இறந்துட்டாங்க. நான்தான் அவனை வளர்த்தேன். அவன் தப்பானவன் இல்லை. போலீசில் சேர கடுமையா உழைச்சான். பயிற்சி காலத்தில் அனைத்திலும் முதலிடம் வந்தான். அவனுக்கு கல்யாணம் பண்ணிவச்சி 13 நாள்தான் ஆகுது, அதுக்குள்ள இப்படி ஆயிடிச்சே. ஒரு எஸ்.ஐ.க்கே இந்த நிலைன்னா சாதாரண மக்களுக்கு என்ன பாது காப்பு?'' என்றார் கண்ணீரோடு.

காவல்துறை வட்டாரங்களில் விசாரித்த போது ஏறுக்கு மாறான தகவல்களே கிடைத்தன. ""கிள்ளை காவல் நிலையத்தில் இருந்தப்ப பணம், பணம்ன்னு பேய்போல் அலைவார். பணத்தை வாரிக்கிட்டுப்போய் வனிதாவிடம் கொட்டுவார். அவளும் எஸ்.ஐ.மனைவிங்கிற அந்தஸ்தோடு ஆடம்பரமாக வாழத் தொடங்கினா. விவாகரத்து கிடைக்கும் முன்பே வனிதாவை கணேசன் சிதம் பரத்தில் தனிகுடித்தனம் வச்சிட்டார். வனிதா கணவன் கலைமணி டி.எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துட் டார். டி.எஸ்.பி., கணேசனை கடுமையா எச்சரிச்சார். இருந்தும் அவர் தன்னை மாத்திக்கலை. இது மட்டுமில்லைங்க, வனிதா கணவர் கலைமணி, ஸ்டேஷனுக்கே வந்து, எஸ்.ஐ.கணேசனை நேருக்கு நேர் திட்டுவார். "என் பொண்டாட்டியை கூட் டிட்டுப் போயிட்டியே, உன்னை விடமாட் டேண்டா. உன் உயிர் என் கையில்தாண்டா போகும்'ன்னு திட்டுவார். கணேசன் அலட்டிக்க மாட்டார். கணேசன் பெண்கள் விசயத்தில் கொஞ்சம் வீக்குதான். அவரோட சபலம் அவரின் உயிரைப்பறிக்கும் அளவுக்குப் போகும்ன்னு நாங்க எதிர்பார்க்கலை'' என்றார்கள் வருத்தமாக.

கணேசனின் புது மனைவி சத்யாவோ ""எங்க மணமாலை வாடுறதுக்குள்ள, என் தாலியை அந்த சண்டாளி அறுத்துட்டாளே. பேசிப் பழகி, ஒட்டி உறவாடி இப்படிப் பண்ண அவளுக்கு எப்படி மனசு வந்தது, அந்தப் பாவியைத் தூக்கில் போட ணும். அவ துடிதுடிச்சி சாகணும். என் வாழ்க்கை ஒரே வாரத்தில் கேள்விக்குறியாயிடிச்சே'' என அந்த நிலையிலும்  கணவனை விட்டுக்கொடுக்கா மல், தலையில் அடித்துக்கொண்டு அழுதார்.

கணேசன் எஸ்.ஐ.யைப் பொறுத்தவரை, அவரது சபலத்தின் மறுபக்கம் மரணமாகிவிட்டது. அவரது கதை, சபலக் காக்கிகளுக்குப் பாடம்.

-காசி


 கடலூர் புதுநகரில் ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தார். தென்மாவட்டத்தைச் சேர்ந்த இவரது குடும்பம், அங்கேயே இருக்க, இவர் மட்டும் காவலர் குடியிருப்பில் தனியாகத் தங்கியிருந்தார். பெர்ஃப்யூம் மணக்க வளையவரும் அவர், மகளிர் காக்கிகள் தொடங்கி, ஏட்டம்மா, பெண் எஸ்.ஐ. என பலரையும் வீழ்த்தினார். ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போய் காவலர் குடியிருப்பில் இருக்கும் பெண்களையும் இவர் குறிவைக்க, மேலதிகாரிகளிடம் இவரைப் பற்றிப் புகார் கொடுத்து விழுப்புரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யவைத்தனர் சக காக்கிகள். அதேபோல் கருவேப்பிலங்குறிச்சியில் எஸ்.ஐ.யாக இருந்தவர், ஃபாரினுக்குப் போன ஒருவரின் மனைவியை ஆக்கிரமித்துக் கொண்டார். விவகாரம் கணவர் காதுக்கு போக, ஊருக்கு ரிட்டர்ன் ஆனவர், அந்த சபல எஸ்.ஐ.யைப் போட்டுத் தள்ள ரூட் போட்டார். இது மேலதிகாரிகளின் கவனத்துக்குப் போக, அதன் பிறகு அந்த எஸ்.ஐ. தூக்கியடிக்கப்பட்டுவிட்டார். ’எஸ்.ஐ.கணேசனின் சபல லீலைகளைப் பற்றிய புகார்கள் பரபரப்பாகக் கிளம்பியபோதும், எஸ்.பி.இன்ஸ்பெக்டர் சுரேஷ்கண்ணா, நிலைமையின் தீவிரத்தை மேலதிகாரிகளுக்கு கொண்டுபோகாமல் விட்டுவிட்டார். அதனால் டி.ஐ.ஜி.,  எஸ்.பி.,  டி.எஸ்.பி. போன்றோர் கணேசனை லேசாகக் கண்டித்து அனுப்பிவிட்டனர்’ என்று சொல்லும் காக்கிகள் ‘கண்டித்ததோடு கணேசனை பக்கத்து மாவட்டங்களுக்கு மாற்றியிருந்தால், இந்தக் கொலையே நடந்திருக்காது’ என்கிறார்கள் ஆதங்கமாய்.

ad

ad