புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஜூலை, 2014

மெஸ்ஸியை விட சூப்பர் ஹீரோ யார்?
உலகக்கிண்ண தொடரில் சூப்பர் ஹீரோ யார் என்பதை இதுவரை நடந்த போட்டிகளை வைத்து குறித்து நவீன தொழில் நுட்பத்தில் கணித்துள்ளது பிபா.
 
இந்த பட்டியலானது வீரர்களின் பல்வேறு திறன் குறித்து கணிக்கப்பட்டது. இதன் படி பிரேசிலின் தற்காப்பு வீரர் டேவிட்
 லுாயிஸ் தான் சூப்பர் ஹீரோவாக இருந்துள்ளார். இவர் சிலி ஆட்டத்தில் அசத்தியதனால் நம்பர்-1 இடத்தை பெறுகிறார்.
 
சுவிட்சர்லாந்து வீரர் ஜோகன் ஜோருவுக்கு ‘டாப்–10’ பட்டியலில் இடம் கிடைத்துள்ளது. இவர் லீக் சுற்றில் பிரான்ஸ் அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
 
6 கோல் அடித்த கொலம்பிய வீரர் ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் 2வது இடம் பெற்றார். 3 கோல் அடித்த பிரான்சின் பென்சிமாவுக்கு 
3வது இடம்.
 
நெதர்லாந்தின் ராபென் பெல்ஜியத்தின் வெர்டான்கென் பிரேசிலின் நெய்மர் முறையே 4, 5 மற்றும் 6வது இடம் பெற்றனர். பிரேசிலின் தியாகோ சில்வா 7 குரோஷியாவின் பெரிசிச் 8 ஜோகன் ஜோருவ் 9 மற்றும் ஜெர்மனியின் தாமஸ் முல்லர் 10வது இடம் பெற்றனர்.
 
மேலும் இந்த உலகக்கிண்ண தொடரில் இதுவரை 4 கோல்கள் அடித்த போதிலும்  அர்ஜென்டினாவின் அணித்தலைவர் மெஸ்ஸிக்கு இதில் இடம் கிடைக்காதது அதிர்ச்சியாக உள்ளது.

ad

ad