புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014





""ஹலோ தலைவரே.. . ஜெ.வின் ராசிப்படி அ.தி.மு.க செயற்குழுவில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டி ருக்குதே?''

""ராசிப்படி தீர்மானங்கள், வெற்றிக்கான வியூகங்கள்ங்கிறதுதான் 2ந் தேதி நடந்த செயற்குழுவின் திட்டமாமே!''

""ஆமாங்க தலைவரே.. உறுப்பினர் அட்டை வழங்கும் வேலைகளை முடுக்கிவிட்டிருக்கும் ஜெ., ஒவ்வொரு உறுப்பினரும் சட்டமன்றத் தேர்தல் வேலைகளைப் பார்க்கணும்ங்கிற அசைன்மென்ட்டை செயற்குழுவிலே கொடுத்திருக்கிறார். எம்.பி. தேர்தலில் 40 சீட் ஜெயிப்போம்னு சொல்லி 37 ஜெயிச்சது அ.தி.மு.க. அந்தக் கணக்குப் படி, 234 சட்டமன்றத் தொகுதிகளில் 217 தொகுதிகளில் அ.தி.மு.கவுக்கு லீடிங் கிடைச்சிருக்குது. அதை மெயின்ட் டெய்ன் பண்ணுவதோடு மிச்சமிருக்கிற 17 தொகுதிகளையும் ஜெயிக்கணும்ங் கிறதுதான் ஜெ. கொடுத்திருக்கும் அசைன்மெண்ட்.'' 

""234 தொகுதிகளுமா?''


""ஒவ்வொரு தொகுதிக்கும் ஒதுக்கப்படுற அரசு நிதியை முறையா செயல்படுத்தி, மக்கள்கிட்டே நெருக்கமா இருங்க. அவங்க குறைகளைக் கேட்டு உடனுக்குடன் நிறைவேற்றுங்க. அதை நோட்டுப் போட்டு குறிச்சி வச்சிக்குங்க. அப்பதான் ஓட்டுகளை சேகரிக்க வசதியா இருக்கும். நாம எல்லாத் தொகுதிகளையும் ஜெயிச்சிட லாம்னு சொல்லியிருக்காரு. பெங்களூரு கேஸைப் பற்றி சில பத்திரிகைகள் எழுதுவதை மனசிலே வச்சி, வியாபார நோக்கத்தில் பத்திரிகைகளெல் லாம் நம்ம கட்சிக்கும் தலை மைக்கும் விரோதமா எழுதிக் கிட்டிருக்குன்னு கோபப்பட்டிருக்கிறார் ஜெ. இதற்கெல்லாம் பதில் கொடுக்கிற விதத்தில் கட்சிப் பேச்சாளர்கள் பேசணும்னும், பேசுறவங்க யாருமே விஷயஞானத்தோடு பேசுறதா தெரியலை, ஒழுங்கா ப்ரிப்பேர் பண்ணிப் பேசுங்கன்னு சொல்லியிருக்காரு.''  

""இப்ப பொறுப்பில் இருக்கிற நிர்வாகிகளுக்கு இது ஒரு வாய்ப்புன்னும் உங்களைவிட திறமையானவங்களும் கட்சியில் இருக்கிறதை மறந்திடவேணாம்னும் சொல்லியிருக்காரு ஜெ. மந்திரிகள், மா.செக்கள் உள்பட யார் மேலே குறை இருந்தாலும் தன் கவனத்துக்கு கொண்டு வரலாம்னு சொன்னதோடு, கட்சிக்காரர்கள் வேணும்னே ஒருத்தருக்கொருத்தர் புகார் சொல்வதை ஆதரிக்கமாட்டேன்னு சொன்னதோடு, ஒழுக்கக்கேட்டில் ஈடுபடுறவங்களைத் தண்டிக்காம விடமாட்டேன்னும் சொல்லியிருக்காரு. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், ஜெ.வுக்கு விசுவாசமாக இருப்போம்ங்கிறதும் ஒரு தீர்மானம். எம்.பி தேர்தலில் தி.மு.க., தே.மு.தி.க.வெல்லாம் எங்கே இருக்குதுன்னு தேடுற அளவுக்கு ஜெயிச்ச மாதிரி, எம்.எல்.ஏ. தேர்தலிலும் ஜெயிக்கணும்னு ஜெ. பேசியிருக்காரு. எதிராளி அசந்திருக்கும் நேரத்தில் களமிறங்கி வேலை செய்தால் 100% வெற்றியை இலக்கா வச்சி, நாடாளுமன்றத் தேர்தல் போல 90% வெற்றியைப் பெறலாம்ங்கிறதுதான் ஜெ.வோட கணக்கு.'' 

""அ.தி.மு.க.வுக்குப் பலமான எதிராளின்னா அது தி.மு.கதான். அவங்களும் இதையெல்லாம் கவனிச்சிருப் பாங்களே?''

""தி.மு.க.வைத்தான் அ.தி.மு.க உன்னிப்பா கவனிச்சிச் சிட்டிருக்குது. எம்.பி. தேர்தல் தோல்வியால் ஏற்பட்ட விரக்தி, சோர்வு, குழப்பம், மந்தம் எதுவும் தி.மு.க.வில் இன்னும் முழுசா நீங்கலை. இது சம்பந்தமான ரிப்போர்ட்டுகள் தினமும் ஜெ. பார்வைக்குப் போகுதாம். தி.மு.க. இன்னும் ஃபார்முக்கு வரலைங்கிறதைப் புரிஞ்சுக்கிட்டுத்தான் அ.தி.மு.க.வின் சட்டமன்றத் தேர்தல் வேலையை முடுக்கிவிட்டிருக்காரு ஜெ. எம்.பி. தேர்தல் வேலையை ஒரு வருசத்துக்கு முன்னாடியே ஆரம்பிச்சமாதிரியே சட்டமன்றத் தேர்தல் வேலைகளும் கிட்டதட்ட 2 வருசத்துக்கு முன்னாடியே தொடங்கிடிச்சி.''

""உள்கட்சி பிரச்சினைகளைத் தீர்த்து நிர்வாக சீரமைப்பில் தி.மு.க. கவனம் செலுத்திக்கிட்டிருக்குது. ஒழுங்கு நடவடிக் கைக்குள்ளான 33 பேரில் 7பேர் மீதான நடவடிக்கையை ரத்து செய்யும் அறிவிப்பு வியாழக்கிழமையன்னைக்கு வெளியான முரசொலியில் பெருசா பாக்ஸ் கட்டப்பட்டி ருந்தது. அதாவது, சஸ்பென்ஷன் செய்யப் பட்டவங்களுக்கு அனுப்பப்பட்டிருந்த ஷோகாஸ் நோட்டீசுக்கு சம்பந்தப்பட்டவங்க அனுப்பிய பதிலை கலைஞரும் பேராசிரியரும் பரிசீலிச்சி, இந்த 7 பேரையும் மறுபடியும் அவங்கவங்க பொறுப்பில் நீடிக்க அனுமதிச்சிருப்பதா அதில்  தெரிவிக்கப்பட்டிருக்குது. இனி பெரியளவில் நடவடிக்கைகள் எதுவும் இருக்காதுன்னும், மா.செ.க்கள் தவிர மற்றவங்களோட விளக்கங்களைப் பரிசீலிச்சி பழைய பொறுப்பிலேயே நியமிக்கப்படுவாங்கன்னும் அறிவாலயத் தரப்பு சொல்லுது.'' 

""கலைஞர் கையிலிருந்த மூன்று லிஸ்ட்டில் முதல் லிஸ்ட்டில்தானே 33 பேர் மேலே நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. கட்சிப்பொறுப்பிலிருந்துக்கிட்டு வெற்றிபெறும் அளவுக்கு வேலை செய்யாதவங்க சம்பந்தமான இரண்டாவது லிஸ்ட், வேலையே செய்யாமல் இருந்த கட்சிக்காரர்கள் சம்பந்தமான மூன்றாவது லிஸ்ட் இதன் மீதெல்லாம்கூட நடவடிக்கை இருக்காதா?''

""ஒழுங்கு நடவடிக்கை எதுவும் இருக்காதுன்னு சொல்றாங்க. இவங்களெல்லாம் கட்சித் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்கமுடியாதபடி கதவுகளை மூட தலைமை முடிவெடுத்திருக்குதாம். நடவடிக்கைக்குள்ளான வங்களில் ஒன்றிய அளவிலான பொறுப்பாளர்கள் வரை திரும்ப வந்திடுவாங்கன்னு எதிர்பார்க்கப்படுது.''

""மாவட்டங்களைப் பிரிப்பது எந்தளவில் இருக்குதாம்?''

""65 மாவட்டங்களாக கட்சி நிர்வாகத்தைப் பிரிப்பது சம்பந்தமாக நிர்வாகிகளிடமிருந்து மாறுபட்ட கருத்துகள் வந்துக்கிட்டிருக்குது. இப்படி செய்வதெல்லாம் சட்ட மன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுக்குத்தான் சாதகமா அமையும்னும் குரல்கள் வெளிப்படுது. அ.தி.மு.கவின் அமைப்பு முறை வேற, தி.மு.கவோட அமைப்பு முறை வேறன்னு சொல்பவர்கள் தி.மு.கவோட அமைப்பு பலத்தாலதான் 1996 தேர்தலில் ஜெ.வையே தோற்கடித் தோம்னும், 2004 எம்.பி. தேர்தலில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாமல் போனதுன் னும் சொல்றாங்க. அந்த பலமான அமைப்பு முறையை பிரிச்சித்தள்ளினா 65 மாவட்டங்களில் ஒவ்வொன்றிலும் 3 கோஷ்டி உருவாகிடும்னும் சொல்றதோடு, இன்னொரு விஷயத்தையும் சொல்றாங்க.''

""அது என்ன விஷயம்?''

""எம்.பி. தேர்தல் தோல்விக்குப் பிறகு கலைஞர்கிட்டே தன்னோட ராஜினாமா லெட்டரைக் கொடுத்த மு.க.ஸ்டாலின், ஏதோ 2000, 3000 ஓட்டில் தோற்றிருந்தால் ஒன்றிய செயலாளர்கள் சரியா செயல்படாத தால தோற்றோம்னு சொல்லலாம். 5000, 10000 ஓட்டில் தோற்றிருந்தா மாவட்ட செயலாளர்கள் சரியா செயல்பட லைன்னு சொல்லலாம். ஒரு லட்சத் துக்கும் மேற்பட்ட ஓட்டு வித்தியாசத் தில்தான் எல்லா இடத்திலும் தோத்திருக்கோம். இதற்கெல்லாம் மாவட்ட-ஒன்றிய நிர்வாகிகளா காரணம்? குடும்பக் கட்சிங்கிற பேரும், 2ஜி ஊழலில் ஏற்பட்ட ரிப்பேரும்தான் காரணம். தி.மு.க மேலே மக்களுக்கு நம்பிக்கை ஏற்படலை. அதை சரி செய்வதுதான் சரியா இருக்கும்னு சொன்ன தைத்தான் சிலர் இப்ப சுட்டிக்காட்டுறாங்க.''

""இதன் மூலமா அவங்க என்ன சொல்ல வர்றாங்க?''

""மாவட்டங்களை எக்கச்சக்கமா பிரிச்சா அது அ.தி. மு.க.வுக்குத்தான் சட்டமன்றத் தேர்தலில் சாதகமா அமையும்ங் கிறதுதான் குரல். எம்.பி. தேர்தலில் வேலை செய்யாமல் இருந்த நிர்வாகி களை மாற்றலாம். ஆனா, எல்லாரையும் மாற்றுவதுங்கிறது சரியா இருக் காதுன்னு சொல்றாங்க. கட்சிக்கு மாவட்ட நிர்வாகிகள் உண்மையா இல்லைன்னா, ஜெ. அரசு போட்ட இத்தனை வழக்குகளையும் தாங்கு வாங்களா? யாராவது ஒரு மா.செ. கேஸுக்குப் பயந்துட்டு ஆளுங்கட்சிப் பக்கம் போயிருக்காரான்னும் கேட்குறாங்க. அதனால மாவட்டப் பிரிப்பு, மா.செ.க்களைக் கூண்டோடு மாற்றுவது இதையெல்லாம் சட்ட மன்றத் தேர்தலை மனசிலே வச்சி மறுபரிசீலனை பண்ணுங்க. தப்பு செஞ்சவங்க மேலே நடவடிக்கை எடுங்க. தகுதியானவங்களை பொறுப்பிலே நீடிக்க விடுங்கங்கிறதுதான் அவங்களோட குரலா இருக்குது.'' 

""மாவட்ட பிரிப்பு சம்பந்தமா கலைஞர் ஏதாவது மறுபரிசீலனை செய்றாரா?''

""மாவட்டங்களைப் பிரிக்கணும்னா ஒன்றியங்கள், நகரங்கள் இதெல்லாமும் பிரியும். புது மாவட்டங்களில் எந்தெந்த ஒன்றியங்களும் நகரங்களும் வரும்ங்கிறதை லிஸ்ட் போட்டுத் தரும்படி இப்போதுள்ள மா.செ.க்கள்கிட்டே தலைமை கேட்டிருக்குது. அந்த லிஸ்ட்டுகளை இப்ப அறிவாலயத்தில் மா.செக்கள் கொடுத்துக்கிட்டிருக்காங்க. அ.தி.மு.க. அதிகாரத்தையும், பணத்தையும் வச்சிக்கிட்டு இப்பவே  தேர்தல் வேலைகளை ஆரம்பிச்சிடிச்சி. தி.மு.க. தரப்பில் உடனடியா நிர்வாகச் சீர்திருத்தங்களை செஞ்சி, மா.செ. உள்ளிட்ட நிர்வாகிகளை நியமிப்பதோடு, தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவிச்சி ஜெட் வேகத்தில் செயல் பட்டால்தான் தொண்டர்களுக்கே நம்பிக்கை ஏற்படும். இப்ப மந்தமா செயல்பட்டுக்கிட்டிருப்பதை உளவுத்துறை துல்லியமா கவனிச்சி, ஜெ.வுக்கு ரிப்போர்ட் அனுப்பிக்கிட்டிருக்குது. குஷ்பு விலகலின் பின்னணி சம்பந்தமாகக்கூட கார்டனுக்கு ரிப்போர்ட் போயிருக்குதாம்.''

""அது என்ன ரிப்போர்ட்?''

""ரொம்ப காலமாகவே குஷ்பு விஷயத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் கவனமா இருந்தாங்கன்னும், ஸ்டாலின் மகளுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தப்ப, பார்க்க வந்த குஷ்பு ஒரு காஸ்ட்லி கிஃப்ட் கொடுத்தாருன்னும், அப்பவே இவரு ஏன் கிஃப்ட் தரணும்னு ஸ்டாலின் குடும்பத்தினர் கோபப்பட் டாங்கன்னும் ஸ்டாலின் மனைவி துர்காவோட சகோதரி அந்த கிஃப்ட்டைக் கொண்டு போய் குஷ்புகிட்டே திருப்பிக் கொடுத்துட்டு சத்தம் போட் டுட்டு வந்தாருன்னும் கார்டன் வட்டாரத்தில் சொல்லப்படுது.'' 

""தலைவரே.. அமெரிக்கா வோட பாதுகாப்பு நிறுவனமான என்.எஸ்.ஏ, இந்தியாவில் பா.ஜ.க.வையும் பாகிஸ்தானில் பெனாசிர் பூட்டோவின் கட்சியையும், எகிப்தில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சியையும் இப்படி 7 நாடுகளில் உள்ள கட்சிகளை உளவுப் பார்த்ததா பரபரப்பு கிளம்பியிருக்குதே.. இதையடுத்து டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டிச்சிருப்பதா செய்திகள் வந்திருக்குது பார்த்தீங்களா? இந்திய அரசியல் நிலவரங்களை அமெரிக்கா துல்லியமா கவனிக்குதுன்னு தேர்தல் சமயத்திலேயே நம்ம நக்கீரன் சொன்னது ஞாபகமிருக்குதா?''


""நானே அதை ஞாபகப் படுத்திடுறேன்.. .. பெரிய நாடாக இருந்தாலும் சின்ன நாடாக இருந்தாலும் அங்கே ஒவ்வொரு நாளும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து வாஷிங்டனுக்கு ரிப்போர்ட் அனுப்புவது அமெரிக்க உளவுப்பிரிவுகளின் வழக்கம். அந்த ரிப்போர்ட்டு கள் அடிப்படையில் தினமும் ஆலோசனைகளும் நடக்கும். 80 கோடி வாக்காளர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் யாருடைய ஆட்சி வரும்ங்கிறதை அமெரிக்க உளவுத்துறை முன்கூட்டியே கணிச்சு தன்னோட தலை மைக்கு சொல்லியிருந்தது. பா.ஜ.க. 280 இடங்களுக்கு மேலே வரும்னும், மோடிதான் பிரதமராவாருன்னும் அது ரிப்போர்ட்டா கொடுத் திருந்தது. இங்கே நாடி ஜோசிய சித்தர்களை நம்பி, பெண்தான் இந்தியப் பிரதமராவார்னு சிலர் நம்பிக்கொண்டிருந்ததும் அமெரிக்கா வோட கணிப்பு வேற மாதிரி இருக்குங் கிறதும் மே 03-06 2014 தேதியிட்ட இதழிலேயே நம்மூர் சித்தர் வாக்கா, அமெரிக்க உளவு ரிப்போர்ட்டான்னு பதிவாகியிருக்குது.''

ad

ad