புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2014


கொமன்வெல்த் போட்டியில் மகிந்த ராஜபக்ச பங்கெடுக்காமைக்கு காரணம்! நாடுகடந்த தமிழீழ அரசின் அழுத்தமே
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோவில் நடைபெற்றுவரும் கொமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்காமைக்கான காரணங்களில் ஒன்றாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அழுத்தமும் அமைந்துள்ளதென இன்சைட்கேம்ஸ் எனும் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானிய வெளிவிவகார செயலருக்கும், பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளுக்கான கூட்டமைப்புக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த இருகடிதங்களின் சாரத்தினை கோடிட்டுக் காட்டியே இச்செய்தியினை அவ்வூடகம் வெளியிட்டுள்ளது.

மக்களாட்சி, சுதந்திரம், சமாதானம், சட்டமுறையிலான ஆட்சி, அனைவர்க்கும் சமவாய்ப்பு எனும் பொதுநலவாயத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு மாறாக இலங்கை அரசு இயங்கி வருவதோடு அனைத்துலகத்தின் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுக்களுக்கும் அழுத்தங்களுக்கும் இலங்கை அரசு  முகம்கொடுத்து வருகின்றது.

இலங்கையில் முப்படைகளுக்கும் தலைமை அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்ற ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான படையினர் இலங்கைத்தீவின் தமிழர் பகுதிகளில் திட்டமிட்ட வகையிலான இனஅழிப்பினையும் நிலஅபகரிப்பும் மேற்கொண்டு வருவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அனுப்பி வைத்திருந்த கடிதத்தில் சுட்டிக்காட்டபட்டதாக இன்சைட்கேம்ஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.

குடிசார் உரிமைகள் அரசியல் உரிமைகள் பற்றிய அனைத்துலக ஒப்பந்தம் மூலமும் (ICCPR) ,சித்திரவதை மற்றும் கொடுமைகள், மனிதாபிமான மற்றதும் தரக்குறைவானதுமான நடைமுறைகள் என்பவற்றிற்கு எதிரான உடன்படிக்கை (ICCPR) மூலமும்   பொதுநலவாய அமைப்பானது முறையே 1976, 1987 ஆகிய இரு ஆண்டுகளிலும் மனிதஉரிமை விழுமியங்களைப் பாதுகாப்பதற்கு உறுதியளித்துள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், இன அழிப்பு என்பவற்றினால் அந்த நாடானது பொதுநலவாய அமைப்பின் உள்ளுணர்வையே மீறுகின்றது என்ற
நிலைப்பாட்டினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கொண்டிருக்கின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

ad

ad