புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014


கருப்பு பணம் மீட்பு குறித்து நேரில் ஆலோசனை நடத்த இந்திய அதிகாரிகள் குழுவுக்கு சுவிட்சர்லாந்து  ஏற்பாடு
சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கருப்பு பணம் தொடர்பாக ஆலோசனை நடத்த வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு சுவிட்சர்லாந்து அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அந்நாட்டு நிதித்துறை அதிகாரிகள் தலைநகர் பெர்னுக்கு வருமாறு இந்திய அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதால், கருப்பு பணம் மீட்பு விவகாரம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.


வெளிநாடுகளில் கருப்பு பணம் பதுக்கியுள்ள இந்தியர்கள் குறித்த பட்டியலை ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகள் மூலமாக மத்திய அரசு பெற்றிருந்தது. அந்த பட்டியல் அடிப்படையில் தகவல்களை பகிர்ந்துகொள்ள சுவிட்சர்லாந்து நிதிதுறை அதிகாரிகள் மறுத்து விட்டனர்.


எனினும் கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் குறித்து சில தகவல்களை அளிக்க அந்நாட்டு அரசு தாமாக முன்வந்துள்ளது. கருப்பு பணத்தை மீட்பதற்காக உச்சநீதிமன்றம் பரிந்துரை அடிப்படையில் முன்னாள் நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் மத்திய அரசு குழு அமைத்தது. அதன் பின் கருப்பு பணம் மீட்பு விவகாரத்தில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே இந்திய கள்ளருபாய் நோட்டுகள் சுவிட்சர்லாந்தில்  புழங்குவதாக அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளநோட்டுகளில் ஈரோ மற்றும் டாலர் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளது. மூன்றாவதாக இந்திய நோட்டுகள் உள்ளன. 

ad

ad