புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2014




.தி.மு.க. பெண் கவுன்சிலர் வீட்டில் தி.மு.க. கவுன்சிலர் படுகொலை செய்யப்பட்டதும் அங்கேயே பெண் கவுன்சிலர் தூக்கில் தொங்கியதும், அரசியல் வட்டாரத்தில் திகில் கலந்த பேச்சாக இருக்கிறது.
பெரம்பலூர், துறைமங்கலம் மசூதித் தெருவில் இருக்கும் 6-வது குறுக்குத் தெருவில் அ.தி.மு.க. 8-வது வார்டு பெண் கவுன்சிலரான தீபாவின் வீடு இருக்கிறது.  திறந்திருந்த அந்த வீட்டின் முன்னறையில், ஒருவர் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதை சம்பவம் நடந்த 15-ந் தேதி மதியம், தற்செயலாக கவனித்த தெருவாசிகள் பதறிப்போய், காவல்துறைக்குச் சொல்ல,  போலீஸ் டீம் விரைந்து வந்தது. படுகொலையானவர் 11-வது வார்டு தி.மு.க.கவுன்சிலர் அன்பு என்பதை உறுதிசெய்தனர். உள்ளறை உட்பக்கமாகத் தாழிடப்பட்டிருந்தது. கதவைத் தட்டிப்பார்த்த போலீஸார், லாக்கை உடைத்துக் கதவைத் திறந்தனர். அங்கே, கட்டிய புடவையில் தொங்கிக்கொண்டிருந்தார் அ.தி.மு.க.கவுன்சிலரான தீபா. சடலங்களைக் கைப்பற்றிய காக்கிகள், போஸ்ட்மார்ட்டத்துக்கு அனுப்பிவைத்தனர்.

கவுன்சிலர் அன்பு பாரம்பரியம் மிக்க தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது அப்பா வெங்கடேசபுரம் கந்தசாமி, தி.மு.க.வின் சீனியர் பிரபலங்களில் ஒருவரான ஜே.எஸ்.ராசுவுடன் சேர்ந்து கட்சிப்பணி ஆற்றியவர். பெயருக்கு ஏற்றார் போல் அவரது மகன் அன்பு, பொதுமக்களிடம் அன்பாகப் பழகக் கூடியவர். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் 11-வது வார்டில் போட்டியிட்ட இவர் அங்கிருக்கும் மொத்த வாக்குகள் 1200-ல் 700 வாக்குகளை ஏகபோகமாகப் பெற்று, 170 ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தவர். 

இவரது மனைவி ஜெயலட்சுமி இதய நோயாளி என்பதால், அவர் கோவையில் இருக்கும் தன் அம்மா வீட்டிலேயே செட்டிலாகிவிட,  அவர்களது 4வயது மகள் செம்மொழி, அன்புவின் அம்மா செல் லம்மாள் பராமரிப்பில் அன்பு வீட்டிலேயே இருக்கிறாள்.

அ.தி.மு.க. கவுன்சிலர் தீபாவுக்கு சொந்த ஊர் சிறுவாச்சூர்.  இவருக்கும் பெரம்பலூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பெரியசாமிக்கும் முதல் திருமணம் நடந்தது.  இந்த நிலையில் பெரியசாமி, தீபாவை புலியூரில் இருக்கும் தன் அக்கா வீட்டில் கொஞ்சநாள் தங்கவைத்தார்.   தீபா அங்கிருக்கும் டெக்ஸ்டைல்ஸ் ஒன்றில் வேலைக்குப் போனபோது, அங்கே எலக்ட் ரீஷியனாக இருந்த மயில்சாமி என்பவரோடு நெருக்கம் ஏற்பட்டது.  

நெடுநெடுவென்று ஆஜானுபாகுவாக இருந்த மயில்சாமி மீது பல்வேறு வழக்குகள் கரூர் பகுதியில் இருக்கிறது.  தீபாவோ கணவர் பெரியசாமியை உதறிவிட்டு, மயில்சாமியோடு பெரம்பலூரில் வாழ ஆரம்பித்தார்.  தே.மு.தி.க. வில் மூன்று மாதங்கள் இருந்தவர், உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகி, கவுன்சிலர் சீட் கேட்டார். பெண்கள் வார்டான 8-வது வார்டில், அ.தி.மு.க.வில் பெண்கள் யாரும் சீட்டு கேட்காததால், தீபாவுக்கு சீட் கிடைக்க, அவர் கவுன்சிலராகவும் ஆகிவிட்டார். மனைவியின் பவரைப் பயன்படுத்தி கான்ட் ராக்ட்டுகள் எடுத்து குறைந்த காலத்திலேயே பங்களா, பிளாட்டுகள் என வாங்கிப்போடும் அளவிற்கு நிறைய சம்பாதித்தார் மயில்சாமி. போதாக்குறைக்கு, புதுவீடு கட்டுபவர்களுக்கு நகராட்சி அனுமதி வாங்கிக்கொடுப்பது,  குடிநீர் இணைப்பை வாங்கித்தருவது என பல காரியத்திலும் இறங்கிப் பணம் பார்த்தார். இந்த நிலையில் நகராட்சிக் கூட்டத்துக்கு வந்து போகும்போது அன்புவுக்கும் தீபாவிற்கும் இடையில் நெருக்கம் உண்டானது. இருவரும் ஒரே டூவீலரில் போக ஆரம்பித்தனர்.  தீபாவின் வீட்டிற்கும் அன்பு அடிக்கடி போகத்தொடங்கினார். இந்த நிலையில்தான் படுகொலையும் தற்கொலையும் ஒருசேர நடந்திருக்கிறது.

பெரம்பலூர் ஜி.ஹெச். மார்ச்சுவரி பக்கம் இருதரப்பு உறவினர்களும் நண்பர்களும் சோகத் தோடும் கண்ணீரோடும் திரண்டிருந்தனர். அப்போது அங்கே தென்பட்ட காக்கி ஒருவர் ‘""அன்புவோடு தீபா நெருங்கிப் பழகியது, தீபா கணவன் மயில்சாமிக்குப் பிடிக்கலை. கண்டிச் சார். ஆனா தீபாவோ, "எனக்கு அன்புதான் முக்கியம், நீ வேணும்னா வெளியில் போ'ன்னு சொல்ல... ரெண்டு பேருக்கும் பிரச்சினை ஆச்சு. இந்த நிலையில் நாலு மாசத்துக்கு முன்ன, "என் கணவர் என்னை டார்ச்சர் பண்றார்'னு ஸ்டேஷன்ல தீபா, அவங்க கவுன்சிலர்கள் சிலரோட வந்து புகார் கொடுத்தது. 

இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் விசாரிச் சார். அப்ப "நான் பொது வாழ்க்கையில் இருக் கேன், ஆண்களோடு சகஜமா பழகித்தான்  ஆகணும். அதை மயில்சாமி எதிர்க்கிறார்' என்று சொல்ல... மயில்சாமியோ "இவ போக்கே சரியில்லை'ன்னு சொன்னார். "அப்படின்னா விட்டுட்டுப் போடா'ன்னு எங்களுக்கு எதிர்லயே தீபா மயில்சாமியை கேவலமா பேசுச்சு. கடைசியில் "இனி தீபா விசயத்தில் தலையிட மாட்டேன்'னு எழுதிக் கொடுத்துட்டுப் போயிட்டார் மயில்.  எங்களுக்குக் கிடைச்ச தகவல்படி அன்பு, தீபா வீட்டுக்கு மதியம் 2.35-க்கு வந்திருக்கார். இது தெரிஞ்ச மயில்சாமி, கொஞ்ச நேரத்திலேயே அங்க வந்திருக்கான். வீட்டில் தீபாவுடன் அன்பு பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த மயில்சாமி, அன்புவின் பின் தலையில் அரிவா ளால் ஓங்கி அடிச்சிருக்கான். கீழே விழுந்த அன்பை, தாறுமாறா வெட்டியிருக்கான். தன்னையும் அவன் கொன்னுடுவான்னு மிரண்டுபோன தீபா, அறைக்குள் போய் தாழிட்டுக்கொண்டு தூக்கில் தொங்கியிருக்கு''’என தனக்குத் தெரிந்ததைச் சொன்னார்.

கலக்கத்தில் இருந்த தீபா உறவினர்கள் ""அந்த மயில்சாமி, தீபாவின் அம்மா பிரேமாவுக்கு போன் போட்டு, ரெண்டுபேரையும் காலி பண்ணிட்டேன்னு சொல்லியிருக்கான்'' என்றார்கள்.

அங்கிருந்த அன்புவின் நண்பர்கள் ""அந்த தீபா மோசமான பொண்ணு.  அவ தொடர்பு உனக்கு வேணாம். அவ வீட்டுக்காரன் ஏற்கனவே கொலைகாரன். தீபாவின் நட்பை விட்டுடுன்னு, காலில் விழாத குறையா கெஞ்சி னோம்.  அவன் கேக்கலையே. அந்த தீபா, "மயில்சாமி மிரட்டறான், கீழ்த்தரமா பேசறான்'னு அன்புக்கிட்ட அடிக்கடி வத்தி வச்சிருக்கா. அதனால அன்பும் மயில்சாமியைத் தட்டிக் கேட்டி ருக்கான். இந்தக் கூடாநட்பு கொலையில் முடிஞ்சிடிச்சே. ஒரு நல்ல நண்பனை, கழகத் தொண்டனை இழந்துட் டோமே''’என்று கதறினர்.

அ.தி.மு.க. நகராட்சித் தலைவர் ரமேஷோ, ""அந்த கவுன்சிலர்கள் மக்கள் பிரச்சினையைப் பற்றி சொல்லும்போது நிவர்த்தி பண்ணிக் கொடுப்போம். மற்றபடி அவர்களின் தனிப்பட்ட விசயங்கள்ல நாங்க எப்படி தலையிட முடியும்?''’என்றார் ஒரு பெருமூச்சோடு. அன்புவை கொலைசெய்த மயில்சாமி 17-ந் தேதி காலை பரமத்தி கோர்ட்டில் சரணடைந்திருக்கிறார். 

அம்மா தீபா கொல்லப்பட்டுவிட்டார். கொன்ற அப்பா மயில்சாமி சிறைக்குப் போய்விட்டார். தீபாவின்  குழந்தைகள் வருணும் ராகேஷும் ஒரு பக்கம் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், இதய நோயாளியான அம்மா நிரந்தரமாக தாய்வீட்டிலேயே தங்கிவிட்டார். அப்பா அன்பு கொல்லப்பட்டுவிட்டார். எனவே 4 வயது செம்மொழியும் பரிதவித்துக்கொண்டி ருக்கிறாள். பாவம் குழந்தைகள்!            

ad

ad