புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2014

கோராத விசாவுக்கு தடையா : இந்தியாவை கிண்டலடிக்கும் ஐ.நா 
இந்தியாவிடம் விசா கோரவில்லை என இலங்கை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையின் குழு தெரிவித்துள்ளது. 

 
இந்தியாவில் இருந்து விசாரணைகளை மேற்கொள்ள இந்தியா விசா வழங்க மறுத்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர். 
 
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆராய ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் குழுவென்று நியமிக்கப்பட்டுள்ளது. 
 
குறித்த குழுவினருக்கு இலங்கைக்குள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசு கூறிவரும் நிலையில். மூன்று நாடுகளில் விசாரணைகளை மேற்கொள்ள இவர்கள் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்தநிலையில் சர்வதேச விசாரணைக் குழுவினர் இந்தியாவுக்குள் பிரவேசிக்க விசா கோரியதாகவும் இந்தியா அதனை மறுத்ததாகவும் அண்மையில் செய்திகள் வெளியானமை குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை குறித்த குழுவினருக்கு இந்தியாவிற்கு செல்ல விசா வழங்குமாறு, தமிழக முதல்வர் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ad

ad