புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜூலை, 2014




""ஹலோ தலைவரே... தி.மு.க.வில் ஒழுங்கு நடவடிக்கைக்குள் ளான 33 பேரும் ஒவ்வொருத்தரும் தங்களோட விளக் கத்தை எழுதி, தலைமைக்கு அனுப்பிக்கிட்டிருக்காங்க.''

""நேரில் போய் கலைஞரைப் பார்த்து நிலைமையை விளக்கியதாகவும் செய்திகள் கசியுதே!''

""அந்த முயற்சிகளும் நடக்குது. நடவடிக்கைக்குள்ளானவங்க எழுதுற விளக்கத்தில், எங்க பகுதியில் எவ்வளவு ஓட்டு விழுந்ததுன்னும், ஆளுங்கட்சியின் பண விநியோகத்திற்கு நடுவே இந்தளவு ஓட்டு கிடைத்திருக்குதுன்னும் சொல்லியிருக்காங்களாம். இதையெல்லாம் பார்த்த கலைஞர், உதயசூரியனுக்கு விழுந்த ஓட்டுங்கிறது கட்சியோட ஓட்டு. அந்த ஓட்டுகள் கூடியதற்காகவோ குறைந்ததற்காகவோ நடவடிக்கை எடுக்கலை. கட்சிக்கு துரோகம் செய்யும் வகையில் எதிர்க்கட்சிக்கு சாதகமா நடந்தது, வேட்பாளர்களுக்கு ஒத்துழைப்புதராமல் டார்ச்சர் செய்தது,  எந்தவேலையும் செய்யாமல் பொறுப்புகளில் மட்டும் இருப்பது இந்த மூன்று காரணங்களின் அடிப்படையில்தானே நடவடிக்கை எடுத்திருக்கோம். அதையெல்லாம் விட்டுவிட்டு, ஓட்டுக் குறைவுன்னு நினைச்சி பதில் எழுதுறாங்களேன்னு சொன்னாராம்.''

""இந்த மூன்று காரணங்களும்தான் நடவடிக்கைக்கான அடிப்படைக் காரணம்னு நம்ம நக்கீரன் போன முறையே விவரமா எழுதியிருந்ததே!''

""தலைவரே.. நடவடிக்கைக்குள்ளானவர்களில் பெரும்பாலானவங்க அறிவாலயத்துக்கு வந்து விளக்கக் கடிதத்தைக் கொடுத்திருக்காங்க. கலைஞர் இதையெல்லாம் கவனிக்க ஆரம்பிச்சிட்டாராம். விளக்கத்தோடு அவங்க மீதான புகார்களையும் மறுபடியும் அலசுறாரு. இந்தளவுக்குத் தப்பு செய்திருக்காங்கன்னு இப்பதான் தெரியுதுன்னு தன் பக்கத்திலே இருக்கும் நிர் வாகிகள்கிட்டே சொல்லும் கலைஞர், இவ்வளவு மோசமா சிலபேர் நடந்திருப்பது பற்றி அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி யிருக்காரு. அதேநேரத்தில் இந்த நிர்வாகிகளெல்லாம் ஒருகாலத்தில் கட்சி வேலையை சரியா பார்த்த வங்கதான்னும், தங்களோட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டால் மறுபடியும் கட்சியில் செயல்பட அனுமதிக்கலாம், ஆனா பொறுப்பு எதுவும் கிடையாதுன்னும் முடிவு எடுத்திருக்காருன்னு அறிவாலயத்தில் சொல்றாங்க. அதோடு, ஹிட் லிஸ்ட் டில் உள்ள மற்ற நிர்வாகிகள் பெயரும் கசிந்திருக்குது.''

""யார் யாராம்?''

""கடலூர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அவரோட மைத்துனர் குறிஞ்சிப்பாடி ஒ.செ. சிவகுமார், விழுப்புரம் பொன் முடி, அதே மாவட்டத்தின் முன்னாள் எம்.எல்.ஏ புஷ்பராஜ், ஏ.ஜி.சம்பத், குமராட்சி ஒ.செ. மாமன்னன், திருவண்ணாமலை எ.வ.வேலு, தர்மபுரி செங்குட்டுவன், சேலம் சிவலிங்கம், ஈரோடு என்.கே.கே.பி. ராஜா, முத்துசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசனோட ஆதரவாளர்கள், கோவை முன்னாள் துணை மேயர் கார்த்தி, திருப் பூர் வெள்ளக்கோவில் சாமிநாதன், பெரம் பலூர் துரைசாமி, திருவாரூர் முன்னாள் அமைச்சர் மதிவாணன், ராமநாதபுரம் சுப.தங்கவேலன், சிவகங்கை பெரியகருப்பன், விருதுநகர் கே.கே.எஸ்.எஸ்.ஆர், தேனி மூக்கையா, நெல்லை கருப்பசாமிபாண்டியன், தூத்துக் குடி பெரியசாமி, எம்.எல்.ஏ அனிதாராதாகிருஷ்ணன், கன்னியாகுமரி சுரேஷ் ராஜன், அதே மாவட்டத்தைச் சேர்ந்த கு.லாரன்ஸ், ஆஸ்டின், திருவொற்றியூர் கே.பி.பி.சாமி உள்பட 62 பேர் லிஸ்ட்டில் இருக்காங்களாம்.''

""மெகா ஆக்ஷனா தெரி யுதே?''

""இவங்களுக்கு கட்சிப் பொறுப்புகள் இருந்தும் தனிப்பட்ட செல்வாக்கு இருந் தும் மற்றவங்களோடு சுமுகமான உறவு இல்லாததால தேர்தலில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்குதுன்னு தலைமை நினைக்குது. அதோடு வேட்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், கொடுத்த புகார்களிலும் இவங்களைப் பற்றிக் குறிப் பிடப்பட்டிருக்குதாம். பணத் தை ஒழுங்கா செலவு செய்யாத மா.செக்கள், வேட்பாளர் தந்த பணத்தில் சொத்துக்களை  வாங்கிய மா.செ.க் கள்னு ஆதாரங்களோடு புகார்கள் கொடுக்கப்பட்டி ருக்குதாம். இந்தப் புகார்கள் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவங்களை கட்சித் தேர்தலில் நிற்க முடியாமல் தகுதியிழக்கச் செய்வதுங்கிற முறையில் ப்ளான் நடந்துக் கிட்டிருக்குது. ஹிட் பட்டியல் இப்ப பொருளாளர் மு.க.ஸ்டாலின் கையில் இருக்குது. அதில் அவர் மாற்றங்களை செய்துக் கிட்டிருப்பதால ரெண்டு, மூணு நாளா கோபாலபுரம் பக்கம்கூட வரலை. வெள்ளக்கோவில் சாமிநாதன் போன்றவங்க ஆக்ஷனிலிருந்து தப்பிப்பதற்காக மு.க.ஸ்டாலினை வீட்டில் போய் சந்திச்சிருக்காங்க.'' 

""நிச்சயம் நடவடிக்கை இருக்கும்னு பயப்படு றாங்களோ?''

""சில நிர்வாகிகளுக்கு அப்படிப்பட்டத் தயக்கமெல்லாம் இல்லை. மு.க.ஸ்டாலின் தன்னோட பயன்பாட்டுக்கு என்ன கார் வச்சிருக்காரோ அதே காரை தாங்களும் புதுசா வாங்கி வச்சி, மு.க.ஸ்டாலின் தங்களோட மாவட்டத்துக்கு வரும்போது அவர் பயன்படுத்துறதுக்குக் கொடுக்கும் மா.செக்களோ, எங்க மேலே எந்த நடவடிக்கையும் இருக்காதுன்னு இப்பவும் சொல்லிக் கிட்டிருக்காங்களாம்.''

""தி.மு.க.வைத் தொடர்ந்து தே.மு.தி.க.விலும் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான நடவடிக்கைகள் வேகமெடுத்திருக்குதே?''

""ஆமாங்க தலைவரே.. ஏற்கனவே ஜூன் 4-ந்தேதி வேட்பாளர்களையும் மாவட்ட நிர்வாகிகளையும் அழைச்சி கருத்து கேட்டாரு விஜயகாந்த். அப்பவே பலரும், தப்பான கூட்டணிதான் காரணம்னு சொல்லி யிருந்தாங்க. அதற்கப்புறம் தன்னோட மகன் நடிக்கும் சகாப்தம் படத்திற்கு லொக்கேஷன் பார்க்க மலேசியா, சிங்கப்பூர்னு விஜயகாந்த் கிளம்பிட் டாரு. அங்கே போட்டோ எடுக்க வந்த ரசிகர்களை அடிச்சிட்டாருன்னு தகவல் வந்தது. வெளிநாடு ட்ரிப் முடித்து 23-ந் தேதியன்னைக்கு தே.மு.தி.க தலைமை அலுவலகத்துக்கு விஜயகாந்த் வந்தாரு. அங்கிருந்த நிர்வாகிகள், கட்சி எம்.எல்.ஏக்கள்கிட்டே கலகலப் பாகவே பேசியிருக்காரு  விஜயகாந்த்.'' 

""என்ன பேசினாராம்?''

""சிங்கப்பூர்-மலேசியா அனுபவங்கள் பற்றி ஜாலியா பேசிட்டு, அங்கேகூட ஜெ.வோட சொத்துக் குவிப்பு கேஸ் பற்றித்தான் விசாரிச்சாங்க. இன்டர் நேஷனல் இஷ்யூவா இருக்குதேன்னு சொன்னவரு, பா.ஜ.க நிர்வாகிகள்கிட்டே இரண்டு வாரமா பேச லைன்னும், உங்களில் யார்கிட்டேயாவது பேசினாங் களான்னும் கேட்க, நிர்வாகிகள் உதட்டைப் பிதுக்கி யிருக்காங்க. சரி.. சரி.. இனி நம்மகிட்டே அவங்களுக்கு என்ன வேலைன்னு சிரிச்சிக்கிட்டே சொன்ன விஜயகாந்த், தி.மு.க.வில் அதிரடி நடவடிக்கைகளை கலைஞர் தைரியமா எடுக்க ஆரம்பிச்சிட்டாரு. சரி, நம்ம தரப்பில் என்ன விஷயம்னு கேட்டிருக்காரு. நீங்கதான் விஷயம்னு நிர்வாகிகள் சொல்லியிருக்காங்க.''

""புரியலையே?''

""விஜயகாந்த்துக்கும் புரியலை. நிர்வாகிகளே விளக்கியிருக்காங்க. விஜயகாந்த் சினிமாவில் நடிச்சிக்கிட்டிருந்தப்ப தமிழகம் முழுவதும் அவரை திரையில பார்த்து ரசித்தவங்கதான் இன்னைக்கு தே.மு.தி.க.வுக்கு அடித் தளமா இருக்காங்க. அப்பவே அவங்க சென்னைக்கு வந்து  விஜயகாந்த்கூட போட்டோ எடுத்துக்குவாங்க. இப்ப விஜயகாந்த் அவ்வளவா நடிக்கலை. அவரோட படங்களை பார்க்கிற வாய்ப்பும் கட்சித் தொண்டர்களுக்கு இல்லை. கட்சித் தலைவராயிட்டதால முன்புபோல நேரில் சந்திக்கவும் முடியலை. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி, இந்த இடைவெளியை நிவர்த்தி செய்யும் விதத்தில், தொண்டர்களை சந்திக்க நீங்கதான் ஏற்பாடு செய்யணும்னு சொல்லியிருக்காங்க.''

""நல்ல யோசனைதானே!''

""விஜயகாந்த்தும் அதைத்தான் சொல்லியிருக்காரு. ஒவ்வொரு மாவட்டத் தொண்டர்களையா வரவச்சி சந்திக்க லாம்னு விஜயகாந்த் சொல்ல, நிர்வாகி களும் ஆமோதிச்சிருக்காங்க. ஆனா, அதுக்கப்புறம் சில நிமிடங்கள் யோசிச்ச விஜயகாந்த், கட்சித் தொண்டர்கள் தனிப் பட்ட முறையில் செலவு செய்து சென் னைக்கு வருவது சிரமம். அதனால நானே அவங்களை சந்திக்கிறேன்னு சொல்லிட்டு, தேர்தல் தோல்விக்காக யார் மேலேயும் நட வடிக்கை எடுக்கப்போறதில்லை. ஏன்னா இந்தக் கூட்டணி அமையக் காரணம் நான் தான். அதனால் கட்சியைப் பலப்படுத்துற பொறுப்பு என்னோடது. பெரிய மாவட் டங்களில் ஒரு நாள் சந்திப்பு, சின்ன மாவட் டங்களா இருந்தால் அரை நாள்னு புரோகிராம் ரெடி பண்ணுங்க. உங்களுடன் நான்ங்கிற பேரில் இந்த சந்திப்பு நடக்கட்டும்னு விஜயகாந்த் சொல்லியிருக்காரு. சொன்னபடியே 26-ந் தேதியன்னைக்கு, சந்திப்புக்கான பயணத்தைக் கோவையிலிருந்து தொடங்கிட்டாரு. ஒரு மாசம் டூர். தொண்டர்களை சந்திக்கவும் அவங் களோடு போட்டோ எடுத்து உற்சாகப் படுத்தவும்தான் இந்தப் பயணம்.''

""அடுத்த தகவல்?''

""சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.வுக்காக வாதாடும் வக்கீல் குமார் சொன்ன ஒரு தகவல் கோர்ட்டில் பலருக்கும் ஆச்சரியத்தை உண் டாக்கியிருக்குது. போயஸ்கார்டனில் உள்ள ஜெ. வீட்டை 1968-ல் வாங்கிக் கட்டியிருக்காரு அவரோட அம்மா சந்தியா. அந்தக் காலத்தி லேயே மின்சார வயர்களை சுவற்றுக்குள் வைத்துப் பூசி வயரிங் செய்ததாகவும், அதை ஏதோ 1990-களில் செய்ததாக பொதுப்பணித்துறை பணி யாளர்கள் மதிப்பீடு செய்து, அதிக தொகையைக் காட்டி யிருக்காங்கன்னும் குமார் சொல்லியிருக்காரு. 1968-லேயே சுவற்றுக்குள் வயரிங்கா, அப்படி ஏதாவது அந்தக் காலத்தில் கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கு  தான்னு எல்லோருக்கும் ஆச்சரியம்.''

""ஆச்சரியங்கள் நிறைய இருக்குது… நான் ஒண்ணு சொல்றேன். தமிழகம் முழுக்க இருக்கிற ஸ்டார் ஓட்டல் பார்களுக்கான லைசென்ஸ்களைப் புதுப்பிக்கணும். சுமார் 40 ஓட்டல்கள் விண்ணப்பிச்சிருக்குது. கலெக்டர் அனுமதி, மதுவிலக்கு ஆணைய ரின் சரிபார்ப்பு, உள்துறையின் ஓ.கே எல் லாம் முடிந்து சம்பந்தப்பட்ட இலாகா வுக்கு பொறுப்பு வகிப்பவர்கிட்டே போய் 6 மாசமாச்சாம். ஆனாலும் இதுவரை க்ளியராகலை. ஒரு அனுமதிக்கு 25 எல் தரணும்னு ஃபிக்ஸ் பண்ணப்பட்டிருக்காம். 10 வரை தர ஓட்டல் நிர்வாகங்கள் ரெடி. ஆனாலும் சம்பந்தப்பட்ட இடத்தில் உள்ள வர், நிர்ணயிக்கப்பட்டதில் கறாரா இருக்கிற தால எந்த அனுமதியும் க்ளியராகலையாம்.''

ad

ad