புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2014

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் 
இந்தியா–இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் முடிவடைந்துள்ளது.
 
டோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் கடந்த 9–ந் திகதி தொடங்கியது. 
 
இதில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 457 ரன்களும், இங்கிலாந்து 496 ரன்களும் எடுத்தன. இரண்டு அணியிலும் கடைசி விக்கெட் ஜோடி 100 ரன்களுக்கு மேல் எடுத்து வியக்க வைத்தது.
 
39 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 8 ரன்களுடனும், ரஹானே 18 ரன்களுடனும் களத்தில் நின்றனர்.
 
இந்த நிலையில் 5–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று இடம்பெற்றது. தொடர்ந்து பேட் செய்த இந்திய அணியில் விராட் கோலியும் (8 ரன்), ரஹானேவும் (24 ரன்) ஸ்டூவர்ட் பிராட்டின் அடுத்தடுத்து ஓவர்களில் ஆட்டம் இழந்தனர். 
 
இதனால் இந்திய அணிக்கு திடீர் நெருக்கடி ஏற்பட்டது. அடுத்து ரவீந்திர ஜடேஜாவும், கேப்டன் டோனியும் இணைந்தனர். ஜடேஜா தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினார். சிறிது நேரத்தில் டோனியும் (11 ரன்) நடையை கட்டினார்.
 
இதைத் தொடர்ந்து ஜடேஜாவும், அறிமுக வீரர் ஸ்டூவர்ட் பின்னியும் ஜோடி சேர்ந்து அணியின் சரிவை தடுத்து ஆபத்தில் இருந்து காப்பாற்றினர். தனது 38–வது பந்தில் முதல் ரன்னை எடுத்த ஜடேஜா தனது பங்குக்கு 31 ரன்கள் (98 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினார்.
 
இதன் பின்னர் ஸ்டூவர்ட் பின்னியும், புவனேஷ்வர்குமாரும் கைகோர்த்து அணியை 300 ரன்களை கடக்க வைத்தனர். அபாரமாக ஆடிய ஸ்டூவர்ட் பின்னி 78 ரன்களில் (114 பந்துஇ 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார்.
 
ஆட்டம் சமநிலையில் முடிவது உறுதியானதால் இங்கிலாந்து தரப்பில் கப்டன் அலஸ்டயர் குக் கூட பவுலிங் செய்தார். அவரது அதிர்ஷ்டம் இஷாந்த் ஷர்மாவை (13 ரன்) வீழ்த்தி தனது முதல் சர்வதேச விக்கெட்டை கைப்பற்றினார்.
 
இந்திய அணி 123 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 391 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்த போது, போட்டி சமநிலையில் முடித்துக் கொள்ளப்பட்டது. 
 
இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
 
5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 2–வது டெஸ்ட் லண்டன் லார்ட்சில் வருகிற 17–ந் திகதி தொடங்குகிறது.

ad

ad