புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2014




""ஹலோ தலைவரே.. . எம்.பி. தேர்தலுக்குப் பிறகு தமிழக சட்ட மன்றம் கூடியிருக்குது. மான்யக் கோரிக்கை மீதான விவாதங்களோடு, அனல் பறக்கும் விவாதங்களும் இருக்கும்.''

""அதோடு இந்த சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு இன்னொரு விசேஷமும் இருக்குதுப்பா. ஜெ. முதன்முறையா எம்.எல்.ஏவாத் தேர்ந்தெடுக்கப்பட்டு இதோடு 25 வருசமாகுது. 1989ல் எம்.எல்.ஏவானப்ப எதிர்க்கட்சித் தலைவரானார். இப்ப மூன்றாவது முறையா முதல்வரா இருக்காரு. பிரபாகரனைப் பிடித்துக் கொண்டுவருவதற்கும் அவரோட ஆட்சியில் தீர்மானம் போடப் பட்டிருக்குது. இலங்கை அரசாங்கம் மேலே போர்க்குற்ற நடவடிக்கை எடுக்கணும்னும் தீர்மானம் போடப் பட்டிருக்குது. நினைச்சதை செய் யக்கூடியவர்ங்கிற பேரு ஜெ.வுக்கு இருக்குது. 25 வருசமானதால வெள்ளிவிழா மனநிலையில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் இருக்காங்க. அதேநேரத்தில் 96ல் தோற்றுப்போய் 2001வரை அவர் எம்.எல்.ஏவா இல்லாததால இது முழுமையான வெள்ளி விழாவான்னு கேட்கிற எதிர்த்தரப்பும் இருக்குது.''

""எதிர்த்தரப்புதான் சட்டமன்றத்தில் எதுவும் பேச முடியாத நிலையில் இருக்குதே.. முதல் நாள் கூட்டம் தொடங்குறதுக்கு முன்னாடி சட்டமன்றத்தில் உள்ள தி.மு.க அலுவலகத்துக்கு புதிய தமிழகம் தலைவரும் எம்.எல்.ஏவுமான கிருஷ்ணசாமி வந்தாரு. அவர் முன்கூட்டியே தே.மு.தி.க தரப்பிடம் பேசிட்டுத்தான் வந்திருந்தாராம். அவர் வந்துட்டுப்போனபிறகு ஜவாஹிருல்லா உள்ளிட்ட ம.ம.கவின் 2 எம்.எல்.ஏ.க்களும் வந்துட்டுப்போனாங்க. அதற்கப்புறம் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் வந்து, சும்மா ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான்னு சொன்னாங்க. உண்மையான மேட்டர் என்னன்னு விசாரிச்சேங்க தலைவரே.. 11மாடி இடிந்து விழுந்ததைப் பற்றி பேரவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர தே.மு.தி.க உள்பட எல்லாக் கட்சிகளும் சபாநாயகர்கிட்ட மனு கொடுத்திருக்குது. அது சம்பந்தமாகப் பேசத்தான் இந்த சந்திப்பாம். தி.மு.க தரப்பை சந்திக்கலைன் னாலும் சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகளும் இதற்காக ஒத்திவைப்புத் தீர்மானத்தை வலியுறுத்தியது.''

""எதற்கும் சபாநாயகர் தனபால் மசியலையே?''

""பேரவையின் ஜீரோ ஹவரில் எதிர்க்கட்சியினர் இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் பற்றி வலியுறுத்தினப்ப சபாநாயகர் மறுத்துட்டாரு. எல்லாரும் குரல் கொடுக்க, வீட்டுவசதித்துறை மந்திரி வைத்திலிங்கம் எழுந்து, முதல்ல நான் பதில் சொல்றேன். தைரியம் இருந்தா கேளுங்க. அப்புறமா கேள்வி கேளுங்கன்னு சொல்லியிருக்கிறார். இது என்ன புது ட்ரெண்டா இருக்குதுன்னு யோசிச்ச எதிர்க்கட்சிகள், முறைப்படியான ஒத்திவைப்புத் தீர்மானத்தை வலியுறுத்தியிருக்காங்க. சபாநாயகர் ஒப்புக் கொள்ளாததால தே.மு.தி.க., புதியதமிழகம், தி.மு.க., ம.ம.க., சி.பி.எம்., சி.பி.ஐ., காங்கிரஸ்னு வரிசையா வெளிநடப்பு செஞ்சிட்டாங்க. பொதுப்பிரச்சினைகளில் இப்படி ஒருங்கிணைந்து செயல்படுவதுன்னு எதிர்க்கட்சிகளெல்லாம் ஒரு அன்டர் ஸ்டாண்டிங்கில் இருக்குதாம். சட்டமன்றத்துக்கு கருப்பு சட்டை போட்டுக்கிட்டு வர்றதுன்னு தே.மு.தி.க எம்.எல்.ஏக்கள் முடிவெடுத்திருக்காங்களாம்.''

""வீட்டு வசதித்துறை மானியக் கோரிக்கைக்குப் பதில் சொன்ன அமைச்சர் வைத்திலிங்கம், 11மாடி கட்டட விபத்துக்கு அதைக் கட்டிய தரப்புதான் காரணம்னும் சட்டப்படியே அனுமதி கொடுத்திருப்பதால இதற்கு அரசு பொறுப்பேற்க முடியாதுன்னும் சொல்லிட்டாரு. பேரவையில் நியாயம் கிடைக்காத நிலையில், எதிர்க்கட்சிகள் போராடித்தானே நியாயம் பெறணும்?''

""தி.மு.க தரப்பில் சி.பி.ஐ விசாரணை கோரி 12-ந் தேதி யன்னைக்கு ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி நடத்து வதற்கான ஏற்பாடுகள் மும்முரமா நடந்திருக்குது. சென்னை, காஞ்சிபுரம்னு இரண்டு மாவட்ட தி.மு.க சார்பில் இந்தப் பேரணி நடத்தப்படுவதால சம்பந்தப்பட்ட மா.செக்கள் இது தொடர்பான ஆலோசனை கூட்டங்களை நடத்தியிருக்காங்க. ஒரு வார்டுக்கு 100 பேர், ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு குறைந்தபட்சம் 1500பேர்ங்கிற கணக்கில் 25ஆயிரம் பேருக்குக் குறையாமல் திரளணும்ங்கிறதுதான் திட்டம். இதற்கான வழிமுறைகளையெல்லாம் ஆலோசனை கூட்டத்தில் சொல்லியிருக்காங்க. லண்டனிலிருந்து திரும்பிய ஸ்டாலினையும் சந்திச்ச மா.செக்கள், பேரணியில் நீங்க கலந்துக்கணும்னு வலியுறுத்தியிருக்காங்க. சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினைக்கு எப்படி ரெஸ்பான்ஸ் இருக்குன்னு பார்த்துட்டு கலந்துக்கிறேன்னு சொன் னாராம். எழும்பூரில் சி.எம்.டி.ஏ. அலுவலகமாக தாளமுத்து-நடராசன் மாளிகையிலிருந்து கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவன் வரைக்கும் பேரணியாகப் போவதுங்கிறதுதான் தி.மு.க.வோட திட்டம். கவர்னரிடம் கொடுப்பதற்கான மனுவும் ரெடியாகிக்கொண்டிருக்குது. ஜெ. அரசு என்னென்ன விதி மீறல் களோடு அனுமதி கொடுத்ததுங்கிறதை விளக்கி, சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை வைக்கப்படுமாம். ஆனாலும், வியாழன் இரவு வரை பேரணிக்கு போலீஸ் அனுமதி கிடைக்கலை.''

""ஆளுங்கட்சி மேலே புகார் கொடுக்கிறதுக்காக கவர்னர் மாளிகைக்குப் போறதுன்னா அத்தனை சுலபமா அனுமதி கிடைச்சிடுமா? அதற்கும் ஒரு போராட்டம் நடத்தணுமே!''

""தலைவரே.. .. ஸ்டாலின் லண்டனில் இருந்த சமயத்தில் கட்சி சீரமைப்பு தொடர்பா கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் பேசியிருக்காங்க. கட்சிக்காக மாவட்டச் செயலாளர்கள் பாடுபட்டது எப்படி உண்மையோ அதுபோல கட்சியால அவங்க பலன் பெற்றதும் உண்மை. அத னால பழைய கணக்குகளையெல் லாம் பார்க்காமல் இந்த எலெக்ஷனில் எப்படி செயல்பட்டாங்கன்னு பார்த்து தயவு தாட்சண்யம் இல்லாமல் நடவடிக்கை எடுத்தாகணும்னு பேசப்பட்டதாம். அதோடு, தலைமைக் கழக நிர்வாகிகளா இருக்கிற வங்களே, கட்சிக்காரங்க அனுப்புற புகார்களை முழுசா கொண்டு வந்து நம்மகிட்ட கொடுக்காம, புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிற நிர் வாகிகள்கிட்டேயே பணம் வாங்கிக்கிட்டு, புகார்களை மறைச்சிடுறாங்கன்னும் கவலையோடு சொன் னாங்களாம்.''




""2ஜி வழக்கில் ஆ.ராசா சொன்ன சாட்சியம் பற்றி செய்திகள் வருதே?''

""தன் மேலே குற்றம்சாட்டப்பட்டிருக்கிற நிலையிலும் ஆ.ராசா சாட்சியமளித்திருப்பது சட்டத்துறையிலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்குது. அவருக்கு வேண்டிய வக்கீல்கள் சிலரே, நீங்க சாட்சி விசாரணையை எதிர்கொள்ள வேணாம். ஏதாவது ஒரு வார்த்தை தவறினாலும் அதுவே உங்களுக்கு எதிராப் போயிடும்னு சொல்லியிருக்காங்க. ஆனா ராசாவோ, என்ன நடந்ததுன்னு இத்தனை காலமா நான் சொல்லிக் கிட்டிருக்கேனோ அதே உண்மைகளைத்தான் சாட்சியமாகவும் சொல்லப் போறேன்னு சொல்லி, சாட்சியமளிச்சிருக்காரு.'' 

""கடும் வாக்குவாதம் நடந்ததாமே?''

""இந்த கேஸில் அரசு வக்கீலா வாதாடுற யு.ஜி.லலித்தான் அடுத்த அட்டர்னி ஜெனர லாகப் போறார்னு பேச்சு அடிபடுது. அவர் பல கேள்விகளைக் கேட்க ராசாவும் பதில் சொல்லியிருக்காரு.  தொலைத் தொடர்பு கொள்கைங் கிறது 1999ல் உருவாக்கப்பட்டது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் 2005ல்தான் உருவானது. ஸ்பெக்டரம் ஒதுக்கப்பட்டதோ 2007ல். ஆனா, லலித் குறுக்கு விசாரணை பண்றப்ப ராசாகிட்ட, நீங்க கட் ஆஃப் டேட்டை மாற்றி வச்சீங்களே, அந்த தேதிகூட தொலைத் தொடர்பு கொள்கையில் குறிப்பிடப் பட்டிருக்கா, காட்டமுடியுமான்னு கேட்டாரு. அதுக்கு ராசா, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருக்கலாம். எனக்கு அதில் ஆட்சேபணை இல்லை. அதுக்காக என்கிட்டே வந்து கடவுளைக் காட்டுன்னு சொன்னா எப்படி முடியும்?னு கேட்க கோர்ட்டே ரசிச்சிருக்குது. குறுக்கு விசாரணையில் ராசா சொன்ன பதில்கள் அவருக்கு சாதகமா இருக்கும்னு அவரோட வக்கீல்கள் சொல் றாங்க. சி.பி.ஐ தரப்போ எங்களுக்குத்தான் சாதகமா அமையும்னு சொல்றாங்க.'' 

""சுவாரஸ்யமான இன்னொரு தகவலை நான் சொல்றேம்ப்பா.. ஃபேஸ்புக்கில் தே.மு.தி.க புரட்சிப்படைன்னு ஒரு குழு திடீர்னு உருவானது. அதில் போடப்பட்ட பதிவுகளெல்லாம் அதி ரடியா இருந்தது. சாதிக்காமல் தூங்க மாட்டோம்னு பதிவிடுற இடத்தில் தொங்கமாட்டோம்னு இருந்தது. மதுவிலக்குன்னு பதிவிடுறதுக்கு பதிலா மாதவிலக்குன்னு இருந்தது. எல்லாமே விஜயகாந்த் படத்தோடு போடப்பட்டி ருந்தது. யாரோ சில பேர் வேணும்னே தே.மு.தி.கவை சீண்டிப்பார்க்க இப்படி எக்கச்சக்கமா போட்டு கலாய்ச்சிருந் தாங்க. புகார்கள் கிளம்பியதால அந்த குரூப்பையே இப்ப ஃபேஸ் புக்கிலிருந்து நீக்கிட்டாங்க. ஆனா புதுசு புதுசா வேற வேற பெயர்களில் குரூப் உருவாக்கி கலாய்ச்சிக்கிட்டிருக்காங்க.''

""தலைவரே... ஃபுட்பால் மேட்ச்சில் பிரேசில் தோற்றாலும் தோற்றது ஃபேஸ்புக், ட்விட்டர்னு எல்லாத்திலும் உலகம் முழுக்க கலாய்ச்சித் தள்ளுறாங்க.''

""உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளைப் பார்க்குறியா? ஃபைனல் மேட்ச் நெருங்கிடிச்சே?''

""அப்பப்ப பார்க்குறேங்க தலைவரே.. அரசியல் பிரமுகர்கள் பலபேரு இந்தப் போட்டிகளைப் பார்க்குறாங்களாம். போட்டி நடக்குற நேரத்துக்கும் நம்ம நேரத்துக்கும் ஏகப்பட்ட வித்தி யாசம். அரையிறுதியில் ஜெர்மனிகிட்டே பிரேசில் செமத்தியா அடி வாங்குனுச்சே அந்த மேட்ச்சை கண்கொட்டாம பார்த்த தாலதான் பார்லிமெண்ட்டில் ராகுல்காந்தி அசந்து தூங்கி கேமராவில் மாட்டிக்கிட்டாரு. சொந்த மண்ணில் பிரேசில் இப்படி உதைபடும்னு யாருமே எதிர்பார்க் கலை. முதுகில் பலமா அடிபட்டதால இந்தப் போட்டியிலே நெய்மர் கலந்துக்க முடியலை. மஞ்சள் அட்டை காட்டப்பட்டதால கேப்டன் சில்வாவும் ஆடமுடியலை. இதெல்லாம் பிரேசி லோட தோல்விக்கு காரணம்னாலும், ஜெர்மனி டீமின் அபாரமான களவேலை இருக்குதே அதுதான் 7க்கு 1ங்கிற பெரிய வித்தியாசத்தில் ஜெயிக்க வச்சிருக்குது. இந்த மேட்ச்சைப் பார்த்த தி.மு.க பிரமுகர்கள் பலரும், எம்.பி. தேர்தலும் இப்படித்தான். நமக்கு தோல்வி சகஜம். ஆனா, இந்தளவுக்கு வித்தியாசத்தில் 1 சீட் கூட கிடைக்காமல் தோற்றுப் போயிருக் கோம். அ.தி.மு.க பார்த்தளவுக்கு நாம களவேலைகள் பார்க்கலை. பிரேசில் மாதிரி பழைய டைப்பிலேயே ஆடினா சரிப்படாது. வியூகங்களை மாத்தணும்னு அவங்களுக் குள்ளே பேசிக்கிறாங்க.''

""முள்ளிவாய்க்கால் முற்றம் பக்கம் போயிருந்தப்ப அங்கே சிலர் பேசிக்கிட்டதை நான் சொல்றேன். அருவி கொட்டுற ஊரில் கைதாகி, ஏரி இருக்கிற ஊரின் ஜெயிலில் ஒரு பிரமுகர் அடைக்கப்பட்டிருக்கிறாரே அதற்கு காரணம் அந்த தற்காப்புக் கலைக்காரர் கொ டுத்த புகார் மட்டுமில்லையாம். அது வெறும் ஷோதானாம். நடந்து முடிந்த தேர்தலுக்குப் பிறகு இங்கே கட்சியிலும் ஆட்சியிலும் நடந்த மாற்றங்களெல்லாம் தன்னாலதான் நடந்ததுன்னும் இனி தன் கொடிதான் பறக்கப்போகுதுன்னும் கட்சிக்காரங்களை காண்டாக்ட் பண்ணி அவரும் அவ ரோட தம்பியும் பேசியிருக்காங்க. பெங்களூரை மையமா வச்சி ஏதேதோ லூஸ் டாக் விட, அதுதான் இந்த நிலைமைக்குக் காரணம்னு ரகசியமா பேசிக்கிறாங்க.''

 லாஸ்ட் புல்லட்!

ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு போட்ட உத்தரவை எதிர்த்து முந்தைய காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு விசாரிக்கிறது. ஜூலை 8-ந் தேதி விசாரணை நடைபெற்றபோது, 7 பேரின் விடுதலைக்கு இப்போதைய பா.ஜ.க அரசும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இதையடுத்து ஆயுள்தண்டனை கைதிகளை விடுவிப்பது தொடர்பாக மாநில அரசுகளை பதிலளிக்க உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அடுத்த உத்தரவுவரை கைதிகளை விடுவிக்கவும் தடைவிதித்துள்ளது. தர்மபுரியில் கோவை வேளாண் கல்லூரி  மாணவிகள் மூவர் எரித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மரணதண்டனை பெற்ற அ.தி.மு.க.வினர் மீதான வழக்கும் தற்போது உச்சநீதி மன்றத்தின் விசாரணைக்குட்பட்டுள்ளது. இவ்வழக்கை அ.தி.மு.க தலைமை நம்பிக்கையுடன் எதிர்பார்க்க, 7 பேர் விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர் தமிழ் உணர்வாளர்கள். 22-ந் தேதி அடுத்தகட்ட விசாரணை நடக்கவிருக்கிறது.

தமிழக காங்கிரஸ் தலைவராகும் முயற்சியில் ப.சிதம்பரம் தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் கட்சித் தலைமையிடம் பேசிய ஜி.கே.வாசன், ப.சிதம்பரம் மீது தமிழக திரைத்துறையினர் கடும்கோபத்தில் உள்ளனர். சினிமா மீதான சேவை வரியை ரத்து செய்யவேண்டும் என மெகா ஸ்டார்கள் அவரிடம் நேரடியாக வலியுறுத்திய போதும் நமது ஆட்சியில் போடப்பட்ட பட்ஜெட்டில் அவர் அதை செய்யவில்லை. இந்த நிலையில் அவரை தலைவராக்கவேண்டாம் என வலியுறுத்தினராம். ப.சி. தரப்போ, இப்போதும் ரஜினி, கமல் போன்ற சீனியர் ஸ்டார்கள் எங்களுடன் பேசிக்கொண்டுதான் இருக்கி றார்கள். வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என தலைவர் பதவிக்கு காய் நகர்த்துகிறதாம்.


 முணுமுணுப்பு!

பா.ஜ.க.வின் தேசியத் தலைவராக 50 வயதாகும் அமித்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வுக்கு இதுவரை இருந்த தலைவர்களில் இவர்தான் இளையவர். பிரதமர் மோடியின் வலதுகரம் இவர் என்பதால் எந்த எதிர்ப்பும் இல்லாமல்  ஒருமனதாகத் தேர்வாகியுள்ளார். மும்பையில் பிறந்து, குஜராத்தில் அரசியலில் ஈடுபட்டு, உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க.வின் வெற்றிக்கு வியூகம் வகுத்து 71 தொகுதிகள் கிடைக்க காரண மாக இருந்த அமித்ஷா, மோடியின் குஜராத் அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர். கட்சி வட்டாரத் தில் இப்போது அவரை ஹீரோவாகப் பார்க்கிறார்கள். அதேநேரத்தில், குஜராத்தில் செராபுதீன் போலி என்கவுண்ட்டர் உள்ளிட்ட வழக்குகளில் அவர் பெயர் அடிபடுவது கட்சிக்கு வெளியே விமர்சனத்தை உண்டாக்கியுள்ளது. நிதின்கட்காரி மீது ஊழல் புகார் வந்ததும் அவரைக் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக்கிய பா.ஜ.க, இப்போது என்கவுண்ட்டர் புகாரில் அடிபடும் அமித்ஷாவை எப்படி தலைவராக்கியது என்று கட்சியின் சீனியர்கள் சிலரும் முணுமுணுக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறி தன் நம்பிக்கைக்குரிய அமித்ஷாவைத் தலைவராக்கி ஆட்சியையும் கட்சியையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் நரேந்திர மோடி. அமித்ஷாவைத் தேர்ந்தெடுத்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த தமிழிசை சவுந்திரராஜனும் இருந்ததால், முறைப்படி அறிவிப்பு வெளியானதும் வாழ்த்து சொன்னார் தமிழிசை. தமிழக பா.ஜ.க தலைவர் பதவியை எதிர்பார்த்திருக்கும் மோகன்ராஜுலு, ஹெச்.ராஜா, சி.பி.ராதா கிருஷ்ணன் ஆகியோரும் அமித்ஷாவுக்கு வாழ்த்துசொன்னார்கள். இவர்களில் யார் மீது அமித்ஷாவின் கடைக்கண் பார்வை படப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக பா.ஜ.கவினரிடம் அதிகரித்துள்ளது.

ad

ad