புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2014


மாறுதடம் திரைப்படத்திற்கு யாழில் தடை ஏன்?

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் வாழ்வியலைக் குறிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக்
கூறப்படுகின்ற மாறுதடம் என்கிற திரைப்படம் யாழ்ப்பாணத்தில் திரையிடப்பட்டபோது, அதனை இலங்கை காவல்துறையினரும், இராணுவத்தினரும் தடுத்து நிறுத்தியிருக்கின்றார்கள். கடந்த வெள்ளிக்கிழமை யாழ் திரையரங்கு ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றிருக்கின்றது.
சுவிட்சர்லாந்திலும், இலங்கையிலும் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக அதன் தயாரிப்பாளர் ரமணா என்றழைக்கப்படுகின்ற சத்தியநாதன் ரமணதாஸ் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
வீடியோ திரைப்படமான இந்த திரைப்படத்தைத் திரையரங்கு ஒன்றில் திரையிடுவதானால், அதற்கான முன் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், அந்த அனுமதி பெறாமல் யாழ்ப்பாணத்தில் திரையரங்கு ஒன்றில் புரொஜக்டர் ஒன்றைப் பயன்படுத்தி திரையிட்டபோதே, காவல் துறையினரும், இராணுவத்தினரும் வந்து இந்த திரைப்படத்தைத் தடை செய்ததாக ரமணதாஸ் குறிப்பிட்டார்.
இரண்டரை மணி நேர இந்தப் படத்தை காவல்துறையின் சில பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையாகப் பார்த்து அதில் திருப்தியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
ஆயினும் திரைப்படக் கூட்டுத்தாபனம் வீடியோ படம் ஒன்றைத் திரையரங்கில் திரையிடுவது தொடர்பிலான நடைமுறைகள் குறித்தோ அல்லது அவ்வாறு திரையிடப்படக்கூடாது என்றோ தங்களுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் காவல் துறையினரே இந்தப் படத்தை திரையரங்கில் திரையிடக் கூடாது என்று தடை செய்ததாகவும் அவர் கூறினார்.
மாறுதடம் படம் திரையரங்கில் திரையிடப்படாமல் தடுக்கப்பட்டமைக்கு திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் நடைமுறை பின்பற்றப்படாததே காரணம் என்றும், அந்தப் படத்தில் அரசுக்கு விரோதமான எந்த விடயமும் இருக்கவில்லை என்றும் பிபிசிக்கு இதுபற்றி கருத்து வெளியிட்ட காவல்துறை பேச்சாளர் அஜித் ரோகண கூறினார்.
இலங்கையின் நடைமுறைக்குமைவாக சட்டத்திட்டங்களுக்கு ஏற்ற வகையில் நடவடிக்கை எடுத்து இந்த திரைப்படத்தைத் திரையிட முயற்சிக்கப் போவதாக மாறுதடம் படத்தின் தயாரிப்பாளர் சத்தியநாதன் ரமணதாஸ் கூறினார்.

ad

ad