புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஜூலை, 2014


தமிழ்த் தேசியக் கொள்கையை திசை திருப்ப பலரை களத்தில் இறக்கியுள்ளது அரசாங்கம்: அரியரத்னா ம் எம்.பி

அபிவிருத்திதான் எங்கள் இலக்காக இருக்குமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இல்லாமல் போயிருக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
தாண்டியடியில் கட்சி அண்மையில் இடம்பெற்ற ஆதரவாளர்களுடனான மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துரைக்கையில்,
பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் உரிமையைப் பெறுவதற்காகத்தான் தந்தை செல்வா 1949ஆம் ஆண்டு தொடக்கம் வடகிழக்கில் தமக்கான உரிமையைப்பெறும் போராட்டத்தினை நடத்திக் கொண்டிருந்தார்.
இப்போராட்டத்தின்போது சமஸ்டி கோரிக்கையைத்தான் முன்வைத்தார். அதனை உதாசீனம் செய்ததன் காரணமாகத்தான் 1976.05.14ஆம் திகதி சுதந்திர தமிழீழ அரசு நிறுவுவதற்கான தீர்மானம் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்டது.
அதற்குப் பின்னர்தான் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடியாவது எமது தமிழீழ அரசை நிறுவ வேண்டும் என போராட்டத்தில் குதித்தார்கள். ஆனால் இன்று 65 வருடங்களாக உரிமைப் போராட்டம் இடம்பெற்று தற்போது சம்மந்தன் ஐயா தலைமையில் இப்போது போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
இலங்கை சுதந்திரம் அடைந்து காலம் தொட்டு தமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு கிடைத்திருந்தால் நாங்கள் விடுதலை வேண்டி போராட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.
ஆனால் தற்போது சிலர் கூறுகின்றார்கள் அபிவிருத்திக்காக வேண்டி தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றார்கள் என்றும் அமைச்சர்களாக இருந்தால்தான் எதனையும் பெறமுடியும் என்ற தப்பான கருத்துக்களை கூறுகின்றார்கள்.
துமிழ்மக்களாகிய நாங்கள் ஒன்றைமாத்திரம் சிந்திக்கவேண்டும் அபிவிருத்திதான் எங்கள் இலக்காக இருக்குமாக இருந்தால் வடகிழக்கு தமிழர்களின் தாயகம் என்பது இல்லாமல் போயிருக்கும் 65 வருடங்களாக உரிமையற்று இருக்கும் நாங்கள் இந்த அரசாங்கத்தில் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பாரிய இழப்புக்களை இழந்தும், இலட்சக்கணக்கான உயிர்களை பலிகொடுத்தும் இருக்கின்றோம்.
வெறுமனே அற்பசொற்ப சலுகைகளுக்காக சோரம் போவோமாக இருந்தால் தமிழ்மக்களின் அடையாளங்கள் இருந்த இடமே தெரியாமல் போய்விடும்.
இலங்கையில் பதிவு செய்யப்பட்ட 65 அரசியல் கட்சிகள் இருக்கின்றன இதில் த.தே.கூட்டமைப்பினர் மாத்திரம்தான் தமிழ் மக்களுக்கான இனம் சார்ந்த விடுதலையை பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கின்றோம். நாங்களும் இதனை கைவிடுவேமாக இருந்தால் தமிழ் மக்களின் உரிமை தேவை என்ற விடயம் இல்லாமல் போய்விடும்.
இதற்காகத்தான் தற்போது இருக்கும் அரசு வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் மக்களுக்குள்ளே தமிழ்த் தேசியக் கொள்கையில் இருந்து திசை திருப்புவதற்காக பலரை இறக்கி விட்டிருக்கின்றார்கள்.
அதில்  அமைச்சர்கள் என்றும் அபிவிருத்தி செய்கின்றவர்களும் அமைப்பாளர்கள் என்ற பெயரில் ஊதுகுழலாய் பிரசாரம் செய்கின்றவர்களும் புலனாய்வாளர்கள் என்ற பெயரில் தமிழ்த் தேசியத்திற்காக உழைப்பவர்களை ஒருவகையில் அச்சுறுத்தி மிரட்டும் நடவடிக்கையிலும் இறங்கியிருக்கின்றார்கள்.
சர்வதேச மயப்படுத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தினை அடையும் வரை தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பலப்படுத்த வேண்டும் அவ்வாறு பலப்படுத்தாமல் இருப்பார்களாக இருந்தால் தமிழ் மக்களின் இருப்பு என்பது எதிர்காலத்தில் இல்லாமல் போகும் வாய்ப்பும் ஏற்படும்.
இந்த உண்மை நிலையை தமிழர்களாக இருக்கும் புத்திஜீவிகளும், கல்விமான்களும், அரச உத்தியோகஸ்த்தர்களும், அதிபர்கள், ஆசிரியர்கள், மதப்பெரியார்கள் என அனைவரும் இதனை விளங்கிக்கொண்டு ஏதோ ஒரு வகையில் த.தே.கூட்டமைப்பை பலப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் இறங்கி தமிழர்களினது அடையாளங்கள், பண்பாடுகளையும் காப்பாற்ற அனைவரும் முன்வர வேண்டும் என்றார்.

ad

ad