புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


ஊவா தேர்தல்: கட்டுப்பணம் செலுத்துவது நாளை முடிவு


ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவத ற்கான கால
அவகாசம் நாளை (05) நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. இதற்கமைய இன்று அலுவலக நேரம் முழுவதும் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களில் சுயேச்சைக் குழுக்களினால் கட்டுப்பணத் தினை செலுத்த முடியும். இதேவேளை. வேட்பு மனு க்கள் ஏற்றுக்கொள் வதற்கான அறிவிப்பு விடுக்கப்ப ட்டதிலிருந்து இதுவரையில் மொனராகலை மாவட்டத்திற்காக 05 சுயேச்சைக் குழுக்களும் பதுளை மாவட்டத்தில் ஒரு சுயேச்சைக் குழுவும் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்தது.
சுயேச்சைக் குழுவின் தலைவர் அல்லது எழுத்துமூலம் அதிகாரம் வழங்கப்பட்ட ஒருவர் தமது குழு சார்பான கட்டுப்பணத்தினை வழங்க முடியும். ஒரு வேட்பாளருக்கு 2 ஆயிரம் ரூபா வீதம் முழுத் தொகையும் காசாக செலுத்தப்பட வேண்டும்.
இச்சந்தர்ப்பத்தில் கட்டுப்பணம் செலுத்தியமைக்காக வழங்கப்படும் பற்றுச்சீட்டினை கட்டாயம் பெற்றுக்கொள்வது அவசியமாகுமென பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பற்றுச்சீட்டு வேட்புமனு பத்திரத்துடன் இணைத்து ஒப்படைக்கப்பட வேண்டும். பற்றுச்சீட்டின் பிரதியினை தம்வசம் வைத்திருப்பதன் மூலம் கட்டுப்பணத்தினை மீளப்பெற்றுக் கொள்வதற்கு இலகுவாக அமையுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
தேர்தல் பெறுபேறுகளின்படி. சுயேச்சைக் குழுவிலிருந்து ஒரு உறுப்பினரேனும் தெரிவு செய்யப் படாதவிடத்து அக்குழுவின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்படும்.
இல்லாவிடில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டாலோ அல்லது வேட்புமனு சமர்ப்பிக்க தவறினாலோ அல்லது ஒருவரேனும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டாலோ, தேர்தல்கள் திணைக்களம் தேர்தல் முடிவினைத் தொடர்ந்து குறித்த சுயேச்சைக் குழுவிற்கு கட்டுப்பணத்தினை திருப்பி வழங்கு மென்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad