புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2014


 ஸ்காட்லாந்தில் நடைபெற்று வரும் 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
கடந்த மாதம் 23ஆம் தேதி ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 20வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி தொடங்கியது. இதை இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டனர்.


இந்த போட்டியில் இந்தியாவுக்கு இதுவரை 14 தங்கம், 28 வெள்ளி, 19 வெண்கலம் என 61 பதக்கங்கள் கிடைத்துள்ளது. பதக்க பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
இதில் 77 கிலோ எடைப்பிரிவு பளுதூக்கும் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த சதீஸ் சிவலிங்கம் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். மேலும், மகளிர் இரட்டையர் பிரிவு ஸ்குவாஷ் ஆட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா - தீபிகா பல்லிகல் ஜோடி தங்கப்பதக்கமும், டேபிள் டென்னிஸ் போட்டிகளின் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமல் - அந்தோணி அமல்ராஜ் ஜோடி வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளனர்.

இந்நிலையில், காமன்வெல்த் போட்டி இன்று (3ஆம் தேதி) நிறைவு பெறுகிறது. இதையடுத்து, பல்வேறு கலைநிகழ்ச்சிகள், வண்ணமயமான வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிறைவு விழா இந்திய நேரப்படி நள்ளிரவு 1 மணிக்கு தொடங்குகிறது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலைஞர்கள் இதில் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்த உள்ளனர். ஆஸ்திரேலியாவின் பிரபல பாடகியான கைலி மினோக்கும் கலந்து கொள்கிறார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இறுதி நாளான இன்று, பேட்மிண்டனில் 5 தங்கப்பதக்கத்திற்கும், சைக்கிள் பந்தயத்தில் 2 தங்கப்பதத்திற்கும், ஹாக்கியில் ஒரு தங்கப்பதக்கத்திற்கும், நெட்பாலில் ஒரு தங்கப்பதக்கத்திற்கும், ஸ்குவாஷ் போட்டியில் 2 தங்கப்பதக்கத்திற்கும் இறுதி சுற்றுகள் நடக்க இருக்கின்றன. இது தவிர 3 வெண்கலப்பதக்கத்திற்கான ஆட்டங்களும் நடக்கின்றன

ad

ad