புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014





வாழும் பென்னி குயிக்கான ஜெயலலிதா வுக்கு ஆகஸ்ட் 22-ந் தேதி மதுரையில் நடந்த பாராட்டு விழாவுக்காக மாவட்டத்துக்கு 5000 வண்டிகளில் ஆட்களை அனுப்பவேண்டுமென்று சக மந்திரிகளுக்கு சீனியர் மந்திரி ஓ.பி.எஸ். உத்தர விட்டிருந்ததைக் கடந்த (ஆகஸ்ட் 23-26) இதழ் ராங்-கால் பகுதியில் சொல்லியிருந்தது உங்கள் நக்கீரன். அந்தளவு பஸ்கள் தங்கள் மாவட் டத்தில் இல்லை என்ப தையும் முடிந்தளவு வண்டிகளைக் கொண்டு வருவதாகவும் ஓ.பி.எஸ் ஸிடம் அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அதற்கான வேலைகள் கனஜோராகவே நடந்து, விழாவை சிறப்பித்துள்ளன.

தென்மாவட்ட விவசாயிகள் நடத்தும் பாராட்டு விழா என்று சொல்லப்பட்டாலும் வடமாவட்டங்களான காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் கோட்டங் களிலிருந்து 400 அரசு பேருந்துகள் 21-ந் தேதி அனுப்பி வைக்கப்பட்டன. இவைபோக, சென்னை கோயம்பேட்டி லிருந்தும் புதுச்சேரியிலிருந்தும் தமிழக அரசுப் பேருந்து கள் 20-ந் தேதியே கிளம்பிவிட்டன. மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களுக்குப் போய் ஆட்களை ஏற்றிக்கொண்டு விழாவுக்கு வரவேண்டும் என்பதுதான் இந்த அரசு பஸ்களின் ஓட்டுநர்-நடத்துநர்களுக்கு கொடுக்கப்பட்ட டெபுடேஷன் பணி.


அந்த அனுபவங்களை நம்மிடம் சில ஓட்டுநர்களும் நடத்துநர்களும் பகிர்ந்துகொண்டார்கள். ""ஒரு பஸ்ஸுக்கு இருபதிலிருந்து முப்பது பேரை சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகி ஏற்றினாரு. பெரும்பாலும் பெண்கள்தான். வயசான மூதாட்டிகள் வெயில் தாங்க முடியாம சீட்டிலேயே படுத்துட்டாங்க. கட்சி நிர்வாகிதான் ஒவ்வொரு பயணிக்கும் தலைக்கு 100 ரூபாய் கொடுத்து காலை டிபனா குஸ்கா பொட்டலமும் மசால் வடையும் கொடுத்தாரு. மதிய சாப்பாடாக லெமன், தயிர்சாதம் பொட்டலங்கள் கொடுக்கப்பட்டன. ஆண் பயணிகளுக்கு அடிஷனலா குவார்ட்டர் பாட்டிலும் உண்டு'' என்றனர். 

புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்ட அரசு பேருந்துகளின் ரூட்கைளயும் கட் பண்ணி முல் லைப்பெரியாறு விழாவுக்கு ஆட்களை ஏற்றிச் சென் றுள்ளனர். இதனால் அந்தப் பகுதி விவசாயிகள் டவுனுக்கு வரமுடியாமலும், டவுனுக்கு வந்தவர்கள் கிரா மத்துக்குத் திரும்ப முடியாமலும் தவித்தபடி ஜெய லலிதாவை வாயார  வாழ்த்தியிருக்கிறார்கள். இதை நம்மிடம் குறிப்பிட்ட ஓட்டுநர்களும் நடத்துநர்களும், ""பாராட்டுவிழா முடிந்து திரும்பும்போது சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகள்கிட்டே 3500ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு, அதற்கு டிக்கெட் கிழித்துக் கொடுக்கும்படி எங்க அதிகாரிங்க சொன்ன தால அதன்படியே செய் தோம். எங்களுக்கு படிக் காசாக தலைக்கு 100 ரூபாய் மட்டும் கொடுத்தாங்க'' என்ற னர். ""எப்படிப் பார்த்தாலும் அரசுப் பேருந்துகளுக்கு கலெக் ஷன்தானே'' என்றோம். 

அதற்கு விழுப்புரம் கோட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர் ஒருவர், ""விழுப்புரம் டூ மதுரை 300 கிலோமீட்டர். அங்கே லோக்கலில் ஒரு 150 கிலோமீட்டர். அப் அண்ட் டவுன் கணக்குப்போட்டால் 800 கிலோமீட்டர். ஒரு லிட் டர் டீசலுக்கு நம்ம பஸ் 5 கிலோ மீட்டர்தான் கொடுக் கும். 800 கி.மீக்கு 160 லிட்டர் டீசல். இதற்கான செலவே 9ஆயிரத்து 800 ரூபாய். ஆனா டிக்கெட் கிழித்துக்கொடுக்கச் சொன்னது 3ஆயிரத்து 500 ரூபாய்க்குத்தான். ஒரு பஸ்ஸுக்கு  டீசல் சார்ஜ் மட்டும் 6ஆயிரத்து 300 ரூபாய் நட்டம். மற்ற செலவுகளையும் கணக்கிட் டுப்பாருங்க. இந்த நஷ்டத்தை யெல்லாம் போக்குவரத்துக் கழகங்கள் தலையில்தான் கட்டியிருக்காங்க'' என்றனர். 

இது குறித்து கடலூர் அரசுப் பேருந்து கழகப் பொது மேலாளர் கருணாநிதியிடம் தொடர்புகொண்டு கேட்ட போது, ""ஒரு முக்கியமான கால் வருவதால் பிறகு உங்களிடம் பேசுகிறேன்'' என லைனைத் துண்டித்தார். இன்னும் அந்த முக்கியமான காலை அவர் பேசி முடிக்கவில்லை போலும். 



முல்லை-பெரியாறு அணையின் உயரத்தை 142 அடி யாக உயர்த்துவதற்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதற்காக மதுரையில் ஜெ.வுக்கு பாராட்டு விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் பொதுப்பணித்துறை, நெடுஞ் சாலைத்துறை, போக்குவரத்துத்துறை, மதுரை மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் முன்னின்று நடத்தி னர். அரசுத்துறைகளின் வாகனங்கள் விழா அரங்கத்தையும் முதல்வர் பயணிக்கும் வழியையும் சுற்றி வந்த படியே இருந்தன. அதில் அந்தந்த துறையின் உயரதிகாரிகளைக் காண முடிந்தது. இவர்கள்தான் பாராட்டு விழா நடத்தும் 5 மாவட்ட விவசாயி களோ என்று மக்கள் நினைத்துவிடக் கூடாது என்பதற்காக, விழாவுக்கு அழைத்துவரப்பட்ட கட்சிக்காரர் களுக்கு விவசாய சங்கத்தினர் அணி யும் பச்சைநிறத் துண்டுகள் சப்ளை செய்யப்பட்டன. அவர்கள் விழாப் பந்தலை நிறைத்து சிறப்பித்தனர். 

""மாப்ள இவருதான்.. ஆனா இவர் போட்டிருக்கிற சட்டை இவ ரோடது இல்லை'' என்று படை யப்பாவில் ரஜினி பேசிய வசனம்தான் நினைவுக்கு வருகிறது. 

ad

ad