புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஆக., 2014


மகிந்த அமெரிக்கா சென்ற மர்மம் கசிந்தது… தமிழருக்கு ஆபத்து

கடந்த 22ம் திகதி மாலை திடீரென அமெரிக்கா கிளம்பியுள்ளார் மகிந்தார். இந்த விடையம் இறுதிநேரம் வரை யாருக்கும் தெரியாமல்
பாதுகாக்கப்பட்டு வந்துள்ளது. மகிந்தர் அமெரிக்காவில் உள்ள கியூஸ்டன் மாநிலம் சென்றதற்கு வேறு காரணங்கள் உள்ளது.
மகிந்தரின் சகோதரர்களில் ஒருவரான டட்லி ராஜபக்ஷ அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர் கடந்த காலங்களில் பெரும் பணத்தை முதலீடு செய்து அமெரிக்காவில் சில வியாபார நிறுவனங்களையும் ஆரம்பித்துள்ளார். அமெரிக்கா அதிகாரிகளுக்கு இந்தப் பணம் எவ்வாறு மற்றும் எங்கே இருந்து வந்தது என்பது அக்குவேறு ஆணிவேராகத் தெரியும்.
மனித உரிமை பிரச்சனை, மற்றும் போர் குற்றச்சாட்டுகள் மகிந்தர் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தவேளையில், மகிந்தர் சீனாவுக்கு ஆதரவாக மாறிவரும் நிலை காணப்படுகிறது. கோட்டபாய ராஜபக்ஷவும் தொடர்ந்து இலங்கையில் வசிப்பதால், அமெரிக்காவில் உள்ள டட்லி ராஜபக்ஷவுக்கு அதிகாரிகள் சிலர் தொல்லை கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். டட்லி ஊடாகவே மகிந்தரை அணுக முடியும் என்பது அமெரிக்காவுக்கு தெரியாத விடையம் அல்லவே.
அடுத்த மாதம் 20 ம் திகதி ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மீண்டும் கூடவுள்ளது. செப்டெம்பர் மாதம் அமெரிக்கா மீண்டும் ஒரு பிரேரணையைக் கொண்டுவரலாம் என்று எதிர்பார்கப்படும் இன் நிலையில், அமெரிக்காவில் உள்ள காங்கிரஸ் , செனட் சபை உறுப்பினர்களுக்கு தங்கள் நிலைப்பாடு தொடர்பாக, கோட்டபாய அறிக்கை ஒன்றை தயாரித்து வழங்கியுள்ளார். இது தொடர்பாக சில பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது.
கோட்டபாயவின் அறிக்கை போக மகிந்தரின் அலரி மாளிகையும் அமெரிக்க செனட் சபைக்கு ஒரு அறிக்கையை பிறிவாக அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பாக சில செனட் சபை உறுப்பினர்கள், மற்றும் சக்திவாய்ந்த காங்கிரஸ் சபை உறுப்பினர்களை சந்திக்கவே மகிந்தர் கியூஸ்டன் சென்றுள்ளார்.
இந்த ஏற்பாட்டை டட்லி ராஜபக்ஷ ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். தமிழர்களை ஏமாற்றவும், உண்மை நிலையை மறைக்கவுமே மகிந்தருக்கு புற்றுநோய், அவர் ரத்தத்தில் சிறுநீர் கலக்கிறது என்ற செய்தி பரவ விடப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன…
அமெரிக்காவை சமாளிக்க மகிந்தர் எடுத்துவரும் முயற்சிகள் தற்போது அதிகரித்துள்ளது. இதேவேளை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று பலாலி பகுதியை சட்டலைட் கொண்டு போட்டோக்களையும் எடுத்துள்ளது.
இதனையும் அமெரிக்கா ஒரு ஆதாரமாக ஐ.நா சபையில் முன் வைக்கலாம். ஓபாமாவின் அமைச்சரவையில் உள்ள, ஒரு பலம் மிக்க அதிகாரி ஒருவரால் தான் இலங்கைக்கு எதிரான பிரேரணைகள் கொண்டுவரப்படுகிறது. அந்த அதிகாரிக்கு மிகவும் நெருக்கமான செனட்டர் ஒருவரையே மகிந்தர் ஜியூஸ்டனில் சந்திக்கவும் உள்ளார். இது தமிழர்களை பொறுத்தவரை பெரும் ஆபத்தான் விடையம் ஆகும்.

ad

ad