புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

அரசாங்கத்தின் 25000 ஏக்கர் காணிகளைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

1972ம் ஆண்டு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சட்டம் ஆகியவற்றின் அடிப்படையில் சுவீகரிக்கப்பட்ட 25000
ஏக்கர் காணிகளைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட காணிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய தகவல்கள் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட காணிகளை அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் கைப்பற்றியுள்ளார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

1972ம் ஆண்டின் பின்னர் ஆட்சி செய்த அரசாங்கங்கள் உரிய முறையில் காணிக் கொள்கைகளை பின்பற்றாமையே இதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

ஜனதா பெருந்தோட்ட அபிவிருத்தி சபை மற்றும் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம் ஆகியவற்றுக்கு வழங்கப்பட்ட காணிகளில் ஒரு தொகுதியே இவ்வாறு மாயமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் காணிகளுக்கு என்னவானது என்பது பற்றி விசாரணை நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ad

ad