வியாழன், ஆகஸ்ட் 28, 2014

ஜெயலலிதாவுடன் ரவிசங்கர் பிரசாத் சந்திப்பு
அனைவருக்கும் வங்கி சேவை வழங்கும் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் நாடு முழுவதும் இன்று (28.08.2014) தொடங்கப்படுகிறது. தமிழகத்தில் இந்தத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக ரவிசங்கர் பிரசாத் சென்னை வந்துள்ளார்.

சென்னை வந்த அவர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதாவுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்றார்.

மேலும், பல்வேறு விவகாரங்களை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாகவும், மின்னணு சாதனம் உற்பத்தியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது என்றும், அனைத்து பல்கலைக்கழகங்களிலும் வைபை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ரவிசங்கர் தகவல் தெரிவித்தார்.