புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2014

காருக்குள் விளையாடிய 4 குழந்தைகள் பலி: தூத்துக்குடி அருகே சோகம்
தூத்துக்குடி மாவட்டம் குறுக்குசாலை அருகே உள்ள குளத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்டது வேடநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் முரளி என்பவர் வாகனங்களுக்கு பைனான்ஸ் செய்து வருகிறார். பிணைத் தொகை கட்டாத 4 வாகனங்களை தனது வீட்டின் முன்பு வைத்திருந்தார். இதில் ஒரு காரின் உள்ளே இன்று (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் இசக்கியம்மாள் (4), ஆதி (4), முத்தழகு (10), மோசஸ் (4) ஆகிய 4 குழந்தைகளும் விளையாடியதாக கூறப்படுகிறது.

அப்போது திடீரென்று காரின் கதவை திறக்க முடியாமல் போகவே, மூச்சுத்திணறி 4 குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. சுமார் மதியம் 1 மணி அளவில் இதனை பார்த்த கிராமத்தினர், குளத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தந்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீனாட்சி நாதன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். 4 குழந்தைகள் உயிரிழந்ததையடுத்து, அவர்களின் உடல்களை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

இந்த குழந்தைகள் இங்கே வந்தார்கள். சம்பவம் எப்படி நடந்தது என்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ம்பவ இடத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை விசாரணை மேற்கொண்டார். 

குழந்தைகள் உயிரிழந்த கார் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. உயிரிழந்த 4 குழந்தைகளும் ராஜபாண்டி நகர், எம்.ஜி.ஆர். நகரைச் சேர்நதவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது


ad

ad