புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014


ஹாக்கியில் இந்திய அணிக்கு வெள்ளிப் பதக்கம்
காமன்வெல்த் போட்டியின் கடைசி நாளான இன்று மாலை 4.45 மணிக்கு தங்கப்பதக்கம் வெல்வதற்கான ஹாக்கி இறுதிப்போட்டி துவங்கியது. 


நேற்று நியூசிலாந்து அணியிடம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி இன்று ஆஸ்திரேலி யாவுடன் ஆக்ரோஷமாக போட்டியிட்டு தங்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.   ஆனால், துவக்கம் முதலே ஆஸ்திரேலியா வீரர்கள் தடுப்பாட்டத்திலும் கோல் போடுவதிலும் மிக அதிக கவனம் செலுத்தினர். ஆஸ்திரேலியா வீரர்கள் கிரிஸ் சிரிலோ ஹாட்ரிக் கோல் அடித்து 3-0 என முன்னிலை பெறச் செய்தார். பின்னர் எடி ஆக்கெண்டன் ஒரு கோல் அடித்தார். இதையடுத்து ஆஸ்திரேலியா 4-0 என்று முன்னிலையில் பெற்றது. 
ஆனால், ஆட்டத்தின் இறுதி வரை இந்தியா ஒரு கோல் கூட போடவில்லை. எனவே ஆஸ்திரேலியா 4-0 என்ற வித்தியாசத்தில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றது. இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய அணிக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.   இந்தியாவுக்கு இது 29-வது வெள்ளி பதக்கமாகும்.

ad

ad