புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஆக., 2014


தமிழரசுக் கட்சியின் தலைவராக மாவை! - 7 ஆம் திகதி பதவியேற்கிறார் 
ஜனநாயகப் போராட்டங்களைத் தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கும் கோ­த்துடன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அடுத்த தலைவராக மாவை. சேனாதிராஜா எதிர்வரும் 7 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.

"கட்சித் தலைமையின் கோரிக் கைக்கு அமைவாக, தமிழரசுக் கட்சி யின் அடுத்த தலைவராக நான் பதவி யேற்க சம்மதித்துள்ளேன்" என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை. சேனா திராஜா தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வருடாந்த மாநாடு அடுத்த மாதம் 5 ஆம், 6 ஆம், 7 ஆம் திகதிகளில் வவுனியாவில் நடைபெறவுள்ளது. அதன்போது தமிழரசுக் கட்சியின் தற் போதைய தலைவர் இரா.சம்பந்தன் தனது தலைமைப் பதவியிலிருந்து ஓய்வுபெறவுள்ளார். அதையடுத்து தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக தற்போதுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜவை, அடுத்த தலைவராக நியமிப்பதற்குரிய முன்நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது தொடர்பில் மாவை.சேனாதிராஜாவிடம் நேரடியாகக் கேட்ட பொழுது, கட்சித் தலைமையின் கோரிக்கைக்கு அமைவாக நான் தலைமைப் பொறுப்பை ஏற்கின்றேன் என்று குறிப்பிட்டார்.
"எமது கட்சிக் கிளைகள் வடக்கு - கிழக்கு முழுவதும் மீளவும் புனரமைப்புச் செய்யப்பட்டு வருகின்றது. திருகோணமலை மாவட்டத்தில் மாத்திரம் 34 கிளைகள் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. சகல இடங்களிலும் புதிதாக இளைஞர்கள் பலர் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
கட்சியின் மாநாட்டின் முக்கிய பிரகடனமாக, இலங்கை அரசுக்கு குறித்த கால அவகாசத்தை வழங்கி அந்தக் காலப் பகுதியினுள் எமது பிரச்சினைகளைத் தீர்க்கா விட்டால், வடக்கு - கிழக்குத் தாயகம் முழுவதும் ஜனநாயக ரீதியிலான போராட்டங்களைத் தொடர்ச்சியாக முன்னெடுப்பது என்ற விடயம் அமையும்.
வடக்கின் நில அபகரிப்பு, வடக்கில் பெண்கள் மீதான துஷ்பிரயோகம், தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இனஅழிப்பு தொடர்பான விடயங்கள் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்படும்'' எனவும் மாவை.சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.
அதேவேளை அடுத்த மாதம் இடம்பெறவுள்ள கட்சியின் மாநாட்டுக்கு இலங்கைக்கான வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட முக்கிய வெளியுலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ad

ad