புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014


காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் 
காஸாவில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தத்துக்கு ஹமாஸ் இயக்கமும் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.
 
காஸா பகுதி மீது கடந்த ஒரு மாத காலமாக இஸ்ரேல்  தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் பிஞ்சு குழந்தைகள், அப்பாவி பொதுமக்கள்தான் பல்லாயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 
 
இதைத் தொடர்ந்து எகிப்தின் முன் முயற்சியில் அவ்வப்போது யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டு வருகிறது.
 
இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்துக்கும் இடையே உருவாக்கப்பட்ட 72 மணி நேர யுத்த நிறுத்தம் நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது. 
 
இதனைத் தொடர்ந்து இருதரப்பும் மீண்டும் தாக்குதல்களை தீவிரமாக்கின.
இஸ்ரேல் விமானங்கள் காஸா மீது 51 முறை குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
 
மேலும் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 11 வயது பாலஸ்தீனிய சிறுவன் உயிரிழந்தான். கடந்த ஒரு மாதமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் மொத்தம் 2 ஆயிரம் பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
 
இதனிடையே இஸ்ரேல்-ஹமாஸ் இயக்கம் இடையே யுத்த நிறுத்தத்தை நீடிப்பது தொடர்பாக எகிப்திய குழுவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
 
பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட பாலஸ்தீன பிரதிநிதி ஒருவர் கூறுகையில், மேலும் 72 மணி நேரம் யுத்த நிறுத்தம் செய்யுமாறு எகிப்து குழுவினர் தெரிவித்த யோசனையை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார். பின்னர் இஸ்ரேலும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
 
இதனால் காஸா பகுதியில் மீண்டும் 72 மணி நேர யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில்  தொடர்ந்து அங்கு நிரந்தர யுத்த நிறுத்தம் செய்வதற்கான பேச்சுவார்த்தைக்கு எகிப்த் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டுவருகிறது.
 
 
 
 
 
-

ad

ad