புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஆக., 2014


நட்வர்சிங்கின் குற்றச்சாட்டுக்கள் பொய்யென நிரூபிக்கப்படும்: சோனியா காந்தி
தமது சுயசரிதை வெளியாகும் போது நட்வர்சிங்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று நிரூபிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய பிரதமரும் தமது கணவருமான ராஜீவ் காந்தி, அமைச்சரவையின் அனுமதியின்றியே இந்திய அமைதிப் படைகளை இலங்கைக்கு அனுப்பினார்.
2004-ம் ஆண்டில் சோனியா காந்தியை பிரதமராக விடாமல் அவரது மகன் ராகுல் காந்தியே தடுத்தார்.
சோனியா பிரதமராவதை ராகுல் காந்தி விரும்பவில்லை. தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி ஆகியோருக்கு ஏற்பட்டதுபோல துயரமான முடிவு தனது அம்மாவுக்கும் ஏற்பட்டு விடும் என்ற அச்சம்தான் ராகுலின் எதிர்ப்புக்கு காரணமாக இருந்தது என்று நட்வர்சிங் குறிப்பிட்டிருந்தார்.
சோனியா எப்போதும் ஒரு சர்வாதிகாரி போலவே செயல்பட்டார் எனவும் நட்வர்சிங் குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் இந்தியாவின் தனியார் தொலைக்காட்சிக்கு செவ்வியளித்து சோனியா தாம் தமது சுயசரிதையை எழுதும் போது உண்மை யாவும் வெளியாகும் என்று குறிப்பிட்டுள்ளார்
தமது மாமியார் குண்டுகள் துளைக்கப்பட்டு இறந்ததையும், தமது கணவர் குண்டுவெடிப்பில் இறந்ததையும் பார்த்திருப்பதாக கூறியுள்ள அவர், நட்வர்சிங் கருத்துக்கள் தம்மை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
2004- 2005 காலகட்டத்தில் வெளியுறவு அமைச்சராக இருந்த நட்வர் சிங் இந்தியா - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகித்தார்.
எனினும் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து வோல்கர் அறிக்கை வெளியான பிறகு, நட்வர் சிங் அவரது பதவியை துறக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நட்வர் சிங்கின் ஒன் லைப் இஸ் நொட் இனஃப் என்ற சுயசரிதை நூல் வரும் ஆகஸ்டில் வெளியாக இருக்கிறது. இதற்கு மத்தியில் நட்வர்சிங் வெளியிட்டுள்ள கருத்துக்கள் காங்கிரஸ் தரப்பில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.

ad

ad