புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

லகத்தை சுற்றி வலம் வந்த போது இலங்கை கடலில் விபத்தை சந்தித்த சுவிஸ் பிரஜை

உலகத்தை படகு மூலம் சுற்றிவரும் சுவிஸ் பிரஜை ஒருவர், இலங்கைக் கடற்பரப்பில் தமது படகு உடைந்த நிலையில் தெய்வாதீனமாக உயிர்தப்பினார்.
43 வயதான பௌரேனன் என்ற சுவிஸ் நாட்டுப் பிரஜை மாத்தறை கரையோரப் பகுதியில் வைத்து தமது படகு உடைந்த நிலையில் பாதுகாப்பு அங்கியுடன் நீந்திக் கரையை அடைந்துள்ளார்.
கடந்த ஒக்டோபரில் தமது பயணத்தை ஆரம்பித்த சுவிஸ் பிரஜை, அவுஸ்திரேலியா, இந்தோனேசியா கடல் பிரதேசத்தை கடந்து இலங்கை கடற்பகுதியை அடைந்த வேளையில் அவருக்கு நித்திரை வந்துள்ளது.
இதன்போது அவருடைய படகு பாறை ஒன்றுடன் மோதி பாரிய சேதங்களுக்கு உள்ளானது.
இதனையடு;த்து கடலில் தூக்கி எறியப்பட்ட சுவிஸ் பிரஜை, ஒருவாறு நீந்தி மாத்தறை பிரதேச கரையை அடைந்துள்ளார்.
இதேவேளை உடைந்த அவருடைய படகின் துண்டுகளும் கரையை வந்துசேர்ந்தன.இது தொடர்பில் தகவல் அளித்துள்ள மாத்தறை, கம்புறுகமுவேவ பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் தாம் நேற்று இரவு 11 மணியளவில் கடலில் பாரிய வெளிச்சம் ஏற்பட்டமையை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்.
விமானம் ஒன்று கடலில் வீழ்ந்து விட்டதா என்ற நினைத்து தாம் நண்பர்களுக்கு தொலைபேசியின் மூலம் அறிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து வெளிநாட்டவர் ஒருவர் கரையை நோக்கி நீந்தி வருவதை கண்டு அவரை ஏனையவர்களுடன் சேர்ந்து மீட்டெடுத்ததாக பிரதேசவாசி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் காப்பாற்றப்பட்ட சுவிஸ் பிரஜை கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளார்

ad

ad