புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஆக., 2014

த்திக்கு எதிராக கிளம்பிய மாணவர்கள்
விஜய் நடித்து வெளிவரவிருக்கும் கத்தி படத்திற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் மேற்கொள்வதற்கு அறிவித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்தினை, ஏ ஆர் முருகதாஸ், விஜய் வீடுகள் மற்றும் சென்னையில் உள்ள கத்தி பட தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலகங்கள் முன்பு நடத்துவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
இன்னும் ஓரிரு நாட்களில் இந்தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மாணவர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான செம்பியன் தெரிவிக்கையில்,
"கத்தி படத்துக்கு எதிரான மிக பலமான போராட்டத்தை அனைத்து மாணவர் அமைப்புக்களையும் ஒருங்கிணைத்து நடத்தப் போகிறோம். நிச்சயம் எங்கள் போராட்ட முடிவில் மாற்றமிருக்காது.
இந்தப் போராட்டம் குறித்து இன்னும் சில தினங்களில் அதிகாரபூர்வமாக அறிவிக்கவிருக்கிறோம். மாணவர்களுக்கு தேர்வுகள் முடிய வேண்டுமே என்பதற்காக காத்திருக்கிறோம்.
ஈழ ஆதரவு அமைப்புகள் அனைத்துடனும் இந்தப் போராட்டம் பற்றி பேசி வருகிறோம். கத்தி படத்தின் கதாநாயகன் விஜய், இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் ஆகியோரின் வீடுகள், தயாரிப்பாளரான லைகாவின் தி நகர் மற்றும் அடையார் அலுவலகங்களை முற்றுகையிடுவோம்.
தமிழகத்தில் இந்தப் படம் எங்குமே வெளியாகக் கூடாது.  அதற்கு அனுமதிக்கவும் மாட்டோம்.
தமிழக அரசு இந்த விடயத்தில் சரியான முடிவை எடுக்கும் என நம்புகிறோம்," என்று கூறியுள்ளார்.
கத்தி படத்தினை தயாரிக்கும் லைக்கா நிறுவனம்,  இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நெருக்கமானவர்கள் எனவும் அதன் காரணமாக இப்படத்தை தமிழகத்தில் வெளியிடக் கூடாது எனவும் தமிழகத்தில் பரவலாக எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

ad

ad