புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014


ஊவா தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டி?
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்வரும் ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக
பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹசீம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் இடையில் இது தொடர்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டால், கூடுதலான வாக்குகளை பெற முடியும் என முஸ்லிம் காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து கட்சி இதுவரை தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை என முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் சபீக் ரஜாப்தீன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்தால், கட்சியின் பதில் என்னவாக இருக்கும் என ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கேட்ட போது, எந்த கட்சியாக இருந்தாலும் கட்சியின் கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பதாகவும் வேட்பாளர் பட்டியலில் இன்னும் வெற்றிடங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ad

ad