புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014






 
ங்கிலியாண்டபுரம் சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்றோம். திருச்சி மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதி அது.

அடர்ந்த இருள். எங்கோ நாய் விட்டு விட்டுக் குரைத்துக் கொண்டிருந்தது.

சுடுகாட்டு முகப்பை நெருங்கும் போது ""ஓம்... ரீம்... க்ரீம்...'' என்ற குரல், தகரத்தை சாலையில் தேய்ப்பதுபோல் கரடு முரடாய் ஒலிக்க, அதை அப்படியே எதிரொலித்தன இன்னும் சில குரல்கள். அப்போது மணி நள்ளிரவு 12.05.

மெல்ல சுடுகாட்டுக்குள் அடியெடுத்து வைத்தோம். தூரத்தில் ஏதோ நெருப்பு வெளிச்சம் லேசாய்த் தென்பட, அதனைச் சுற்றி மசங்கலாய் சில உருவங்கள் தெரிந்தன. சூலாயுதம் ஒன்றும் நிறுத்தப்பட்டிருந்தது. அதன்மேல் பிணத்துக்கு போட்ட மாலைகள்.


அருகே போகப் போக அந்த உருவங்கள் தெளிவாகத் தெரிய, திகைத்தோம். காரணம் அங்கிருந்த ஒருவரின் உடலிலும் உடையில்லை. உடம்பு முழுக்க, சடலத்தை எரித்த சாம்பலைப் பூசி இருந்தனர். போதாக் குறைக்கு அவர்கள் நெற்றியில் ரத்தம் வழிவதுபோல் குங்குமத் தீற்றல், எதிரே சின்னக் குண்டத்தில் நெருப்பு. அங்கே அரளிப் பூ வாடை அடித்தது.

நடுநாயகமாக உட்கார்ந்திருந்தவர், தனது இடது கை மணிக்கட்டை, மனிதக் கால் எலும்பை முட்டுக் கட்டையாக்கி அதன்மேல் வைத்திருந்தார். வலது கையால் அரளி மலரை மண்டையோடுகளின் மீது ஆக்ரோஷமாகத் தூவியபடி மந்திர உச்சாடனங்களை உச்சரித்தார். இன்னொருவர் ஒரு கோழிக்குஞ்சின் கழுத்தை அறுத்து ரத்தத்தை வடியவிட அதை அந்த நபர் உள்ளங்கையில் ஏந்தி, பற்களை நறநறவெனக் கடித்தபடி, மண்டையோடு களின் மீது தெளித்தார். செடி மறைவில் இருந்தபடியே எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த நமக்கு நம்மை அறியாமலே வேர்த்தது.


நடுவில் அமர்ந்திருந்த அந்த நபரின் முன் மண்டையோடுகளுடன் மண்ணால் செய்யப்பட்ட அகோரமான பொம்மையும் மதுப்புட்டிகளும் தேங்காய் எலுமிச்சை போன்றவைகளும் இருந்தன.

திடீரென எழுந்த அந்த நபர்... ""துர்சக்திகளே... ஏ கால பைரவா, அந்த நபர் சீக்கிரம் முடங்கணும். ரத்தம் கக்கணும். துடிக்கணும். தூக்கம் வராமல் அலறணும். ஓம்... ரீம்... க்ரீம்...'' என ஆரம்பித்து ஓங்காரமாக சொன்னபடியே, ருத்ர தாண்டவம் போல் சில நிமிடம் ஆடினார். மற்ற நிர்வாணிகளும் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தனர்.

பின்னர் அந்த நபர் சங்கை எடுத்து ஊத ஆரம்பித்தார். அது ஏற்படுத்திய திகிலோசையால் பிராந்தியமே அதிர்ந்தது. மரங்களில் தூங்கி வழிந்த பறவைகள் சடசடத்துப் பறந்தன. எங்கிருந்தோ நாய்கள் அழுதன.

கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மெல்ல அவர்களை நெருங்கினோம். குபீரென நம் பக்கம் திரும்பிய அந்த நபர்... சங்கூதுவதை நிறுத்திவிட்டு... ""ஆ... ஆ... யார் நீ?'' என்றார். மற்ற நிர்வாணிகளும் நம்மை வெறிப்பார்வை பார்த்தனர்.

""பத்திரிகைல இருந்து வர்றேன். உங்கக் கூட பேசணும்'' என்றோம். உடனே அவர்களின் கண்களில் இருந்த நெருப்பு அணைந்தது. நாம் கேமராவை எடுக்க... ""இரு... இரு...'' என அவ சரமாக எல்லோரும் கோவணம் கட்டிக் கொண்டனர். அருகே ஒரு பாழடைந்த கட்டிட மும் அதன் அருகே சுடு காட்டுச் சூழலுக்கு சம் பந்தம் இல்லாத "டி.என்.32 எக்ஸ் 8888' என்ற எண்ணுள்ள சிவப் புக் கலர் குவாலிஸ் காரும் நின்று கொண்டிருந்தது.

""பயமுறுத்துற இர வில் இந்த சுடுகாட்டில் என்ன பண்றீங்க? நீங்கள் லாம் யாரு?'' என்றோம் மெதுவாக.

அந்த நபர் பேச ஆரம்பித்தார். ""என்னைத் தெரியாதா? நான்தான் அகோரி மணிகண்டன். பில்லி சூனிய உலகை ஆளும் அரசர்களில் நான் ஒருவன். என்னோட இருக்கும் இவங்கள்லாம் என் சீடர்கள். சிவனடியா ராக இருந்த நான், என் பதினைஞ்சாவது வயசில் ஒரு பெண்ணைக் காத லிச்சிக் கல்யாணம் பண் ணிக்கிட்டேன். எனக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்தது. என் மனைவி என்னை விட்டுப் பிரிந்து போய்விட்டாள். மனதில் ஒரு வித வெறி. நிம்மதியா வாழ விடாத இந்த சமூகத்தில், ஒரு சிலரின் நிம்மதியை யாவது குறைக்கணும்னு நினைச்சேன். பில்லி சூனியத் தைக் கத்துக்க காசிக்குப் போனேன். அங்க மூணு வருஷம் இருந்தேன். இறந்த மனித உடல்கள்தான் எனக்கு சாப்பாடு. அதிலும் கல்யா ணம் ஆகாத, வாரிசுகள் இல்லாத சடலங்களைத்தான் அகோரிகளான நாங்க சாப் பிடுவோம்'' என்றவர், அங்கே எரிந்து கொண்டிருந்த ஒரு சிதையை ஒரு கணம் உற்றுப் பார்த்தார்.

நம் கண்ணெதிரி லேயே நெருப்பில் இருந்து சடலத்தை எடுத்து சாப்பிடப் போகிறாரோ என்ற அச்சம் வந்தது. நாக்கு வறண்டது.


நம் மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட அந்த அகோரி மணிகண்டன் ""அது வயதான சடலம்'' என்றார். ""சரி, பில்லி சூனிய விவகாரத்துக்கு வாங்க'' என்றோம்.

அகோரி மணிகண்டனோ ""பில்லி சூனிய குருநாதர்கள் எனக்கு 5 பேர். ஒருத்தர் மனி தர்களுக்கு சூனியம் வக்கிற தைச் சொல்லிக் கொடுத்தார். இன்னொருத்தர் பேய்களை விரட்டும் வித்தையைக் கத்துக் கொடுத்தார். இன்னொருத்தர் சாமியாடிகளை ஓட்டச் சொல் லித் தந்தார். கை கால் முடங்கிப் படுக்க வைக்கிற வித்தையை இன்னொருவர் சொல்லிக் கொடுத்தார். எதிரி களை ரத்தம் கக்கிச் சாக வைக்கும் மிக உக்கிரமான வித்தையை இன்னொரு குருநாதர் கத்துக் கொடுத்தார்.

இப்படி சகல வித்தை களையும் நான் கற்று 9 வருஷம் ஆகுது. மது, மாது, கார், பங்களான்னு உலகில் இருக் கும் எல்லா சொகுசுகளையும் அனுபவிக்க எனக்குத் தடை இல்லை.

ஒருத்தரின் கை, காலை முடக்கணும்னா நான் 27 நாள் இந்த பூஜைல உட்காரணும். ஒருத்தர் உயிரை எடுக்க ணும்னா ஒரு மண்டலம், அதான் 48 நாள் இப்படி நான் பூஜை பண்ணியாகணும். நான் கால பைரவனின் ஆசி பெற்ற வன். வராகிக் கடவுளின் அருள் எனக்கு உண்டு. அதனால் என்னை யாரும் எதுவும் செய்யமுடியாது. நான் ஆலம் பட்டியில் "அகோரி காளி மாந்ரீகப் பள்ளி'யை நடத்திக் கிட்டு இருக்கேன். இதுவரை 150 பேருக்கு பில்லி சூனியத் தைக் கத்துக் கொடுத்திருக் கேன். 108 காளி கோயிலை தமிழ்நாடு முழுக்கக் கட்டி, அதன் பவர் மூலம் எல்லாவற் றையும் நான்செய்வேன்'' என் றார் அழுத்தமாக. அவரது சீடர்கள் அவர் சொல்வதற் கெல்லாம் தலையாட்டினர்.

""யாரோ ரத்தம் கக்கணும் துடிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தீங்களே?'' என்றோம்.

""அதுவா. அது ஒரு பெட் சமாச்சாரம், பில்லி சூனியம் பொய்யின்னு சொல்றவங்களை, ஐயோ பில்லி சூனியம் உண்மை தான்னு அலற வைக்கப் போறேன். இதுக்காக பகல் 12.30-ல் இருந்து 1.30 வரை யும் இரவு 12-ல் இருந்து 1 வரையிலும் அதிகாலை 3-ல் இருந்து 4 வரையிலும் இந்த பில்லி சூனிய பூஜையை நடத்திக்கிட்டு இருக்கேன். நான் தொடங்கிய பூஜை ஏறத்தாழ முடியும் தருவாயில் இருக்கு. அதுக்கு ஒரு பொருள் வேணும். அதுக் காகக் காத்திருக்கேன்'' என்றார் அகோரி.

""அது என்ன?'' என்றோம்.

அகோரியோ ""தலைச் சன் பிள்ளையின் எலும்பு வேணும். அது இன்னும் கிடைக்கலை'' என இருட்டை மேலும் பயமாக்கினார். பின் அவரே ""இந்த பூஜை தொடங் கியதில் இருந்து இரவு நேரங் களில் எரியும் சடலங்களை மட்டும் சாப்பிடுகிறேன். மற்ற நேரங்களில் தியானம் பண்ணு வேன். காசியில் இருந்து வரும்போதே 5 கிலோ கஞ்சாவைக் கொண்டு வந்துட்டேன். சரி தியானம் பண்ற நேரமாச்சு'' என்ற அகோரி, அங்கே ஒரு சமாதி மேடையில் விரிப்பு போல் பரப்பப்பட்ட சாம்பலில் அமர்ந்தார்.

""தம்பி. இது என்ன தெரியுமா? தற்கொலை பண்ணிக்கிட்ட ஒரு பெண்ணோட சாம்பல். இதுதான் தியானத்தை பவராக்கும்'' என்று அகோரி சொல்ல, குபீரென முகம் வியர்த்த நாம் மெல்ல அங்கிருந்து நகர்ந்தோம்.

யார் இந்த அகோரி மணிகண்டன்? என ஏரியாவாசியும் பொன்மலை மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளருமான கார்த்தியிடம் நாம் விசாரித்தபோது, ""இவரோட சொந்த ஊரே இந்த செந்தண்ணீர்புரம்தான். இவர் அப்பா பேரு ராஜகோபால். அம்மா பேரு மேரி. சரியா இவரை இவங்க குடும்பம் வளர்க் கலை. 11 வருஷத்துக்கு முன்ன, இங்க இருக்கும் பிள்ளையார் கோயில் உண்டியலைத் திருடி, தப்பிச் சென்ற குற்றவாளி இவர். இவர் அகோரி அவதாரம் எடுத்து பூஜையில் பயன்படுத்தும் கஞ்சா போன்றவை கூட சட்ட விரோதமானவை. ஒரு முஸ்லிம் பிரமுகரோட பெட் கட்டி இப்படி ஒரு பூஜையை இவர் தொடங்கி, மத மோதலுக்கு அஸ்திவாரம் போடுறார். ஆனா, காவல்துறை இவர்மேல் நடவடிக்கை எடுக்காம வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு. நிர்வாணமா இவர் பூஜை பண்றதோட, சுடுகாட்டுக்கு அருகில் இருக்கும் குடியிருப்பு வழியா நள்ளிரவில் நிர்வாணமா ஓங் காரக் கூச்சலோட தினமும் ஓடி, பொதுமக்களை யும் அச்சுறுத்திக் கொண்டிருக்கார். போலீஸ் நடவடிக்கை எடுக்காட்டி பொதுமக்களே சட்டத் தை கையில் எடுத்துடுவாங்க'' என்றார் காட்டமாய்.

நிர்வாண அகோரி சாமியாரால் திக் திக்கில் இருக்கிறது திருச்சி.

ad

ad