புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014


தி மு க இல் சதுரங்க வேட்டை கலங்கி ஓடும் தி மு க வினர் 

""ஹலோ தலைவரே..  சட்ட மன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்துகூட கிடைக்கலை. இருக்கிற எம்.எல்.ஏக்களையும் கூட்டத் தொடரிலிருந்து சஸ்பெண்ட் பண்ணிட்டாங்க. எம்.பி. தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி கிடைக்கலை. அப்படி யிருந்தும்
தி.மு.க சைடிலிருந்துதானே தொடர்ச்சியா பரபரப்பு நியூஸ் கிடைச்சிக்கிட்டிருக்குது!''

""ஆமாப்பா.. ஆளுங்கட்சி சைலன்ட்டா 2016 சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளைப் பார்க்குது. தி.மு.க.வில்தானே ஒவ்வொரு நாளும் உள்கட்சிக்குள்ளே புதுப்புது குழப்பம் உருவாகுது. மீடியாக்களிலும் அது சம்பந்தமாகத்தான் விவாதிக்கப்படுது. அமைப்புச்செயலாளர் கல்யாணசுந்தரத்தோட ராஜினாமா கடிதம், அதைத் தொடர்ந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து அவர் சஸ்பெண்ட், புது அமைப்புச்செயலாளரா ஆர்.எஸ்.பாரதி நியமனம்னு தி.மு.க.தானே ஹாட் நியூஸ் கொடுக்குது.'' 

""தி.மு.க.வில் உள்ள கிளைக்கழக நிர்வாகிகள் வரை தெரிஞ்சவர் கல்யாண சுந்தரம். கட்சியின் அமைப்புச்செயலாளரா இவரும் டி.கே.எஸ்.இளங்கோவனும் இருந்தாங்க. எம்.பி. தேர்தலுக்கு முன்னாடி கோபாலபுரம் வீட்டுக்கு விறுவிறுன்னு வந்து கலைஞர் கிட்ட சண்டை போட்ட மு.க. அழகிரி, இந்த கல்யாணசுந்தரம் பற்றித்தான் கடுமையா குற்றம் சாட்டி அவர் மேலே பாயப் பார்த்தாரு. அமைப்புச் செய லாளர்ங்கிறதால கட்சி நிர்வாகிகள் சம்பந்தப் பட்ட விவரங்களை யெல்லாம் கையில் உள்ள ஃபைலில் வச்சிருப்பாரு கல்யாணசுந்தரம். மதுரையில் உள்கட்சித் தேர்தலை கல்யாணசுந்தரம் ஒழுங்கா நடத்தலைங்கிறது தான் அழகிரியோட குற்றச் சாட்டு. அது சம்பந்தமா, தன் கையிலிருந்த ஃபைலை புரட்டி கல்யாணசுந்தரம் ஏதோ சொல்லப் போகத்தான் அழகிரி ரொம்ப உஷ்ணமானாரு.''

""கல்யாணசுந்தரம்தான் மு.க.ஸ்டாலினோட தீவிர ஆதரவாளர்னு கட்சி நிர்வாகி கள் எல்லோருக்கும் தெரியுமே?''

""அந்த ஸ்டாலினே அமைப்புச் செயலாளர்களை மாற்றணும்னு சொன்னதும் உண்டு. கட்சித் தேர்தல் நடந்துக்கிட்டிருக்கிற இந்த நேரத்துல, உறுப்பினர் அட்டை ஒழுங்கா போய்ச் சேரலைன்னும் பணம் வாங்கிக்கிட்டு வேலை பார்க்குறாங்கன்னும் தனக்கு நெருக்கமான வட்டாரங்களில் ஸ்டாலின் அதிருப்தியா சொல்லி யிருக்காரு. உறுப்பினர் கார்டை யும் முறைப்படி கொடுக்கிற தில்லை. போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களையும் சரியா கொடுக்கிறதில்லை. ஒரு தரப்பு கிட்டே காசு வாங்கிக்கிட்டு இன்னொரு தரப்புக்கு விண்ணப்பம் கொடுக்காம இருக்காங்க. இந்த கல்யாணசுந்தரம் பற்றி எனக்கு எழுத்துப்பூர்வமா நிறைய புகார் வந்திருக்குதுன்னு சொன்ன ஸ்டாலின், கலைஞர் கவனத்துக்குப் போக வேண்டிய புகார்களை யெல்லாம் இன்னொரு அமைப்புச் செயலாளரான டி.கே.எஸ். இளங்கோவன் மறைச்சிடுறாருன்னும் சொல்லியிருக்காரு.''

""அந்த கல்யாணசுந்தரம் இப்ப ஸ்டாலினை முதல்வர் வேட்பாளரா அறிவிக்கணும்னு சொல்லி ராஜினாமா கடிதத்தைக் கொடுத்ததால தானே கட்சித் தலைமை ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருக்குது?''

""தலைவரே.. இதைக் கொஞ்சம் டீடெய்லா பேசணும். அண்ணா அறிவாலயத்திலே மானேஜரா இருக்கிறவர் பத்மநாபன், டெபுடி மானேஜரா இருக்கிறவர் ஜெயகுமார். இவங்க இரண்டு பேரும் 30 வருசத்துக்கும் மேல கட்சி நிர்வாக வேலையைப் பார்த்துக்கிட்டி ருக்காங்க. அதுக்கு முன்னாடி தேவராஜ், சண்முகம்னு இரண்டு பேரு பார்த்துக்கிட்டாங்க. கட்சிநிதியை முழுமையா கையாள்வதும் பத்மநாபனும் ஜெயக்குமாரும்தான். கட்சியோட பொருளாளருக்கு அடுத்தபடி நிதி விவகாரங்களைத் தெரிஞ்சவங்க இவங்கதான். இதிலே பத்மநாபன் அவ்வளவா மற்ற விஷயங்களில் தலையிட மாட்டாரு. ஜெயக்குமார் தன்னோட செல்வாக்கை அடிக்கடி வெளிப்படுத்தக் கூடியவரு. கட்சி நிர்வாகிகள் பற்றிய விபரங்கள் அனைத்தும் இவருக்கு அத்துப்படி. சித்ரகுப்தன் ஏடு புரட்டுவது போல இவர் கையில் உள்ள ஃபைலில் நிர்வாகிகள் பற்றிய விவரங்கள் இருக்கும். முன்னே அமைப் புச் செயலாளரா இருந்த பொன்.முத்துராமலிங்கத்தால ஜெயக்குமாரை சமாளிக்க முடியாமத்தான் அந்தப் பதவியை ரிசைன் பண்ணினாரு.  ரொம்ப நாளாவே கல்யாணசுந்தரத்துக்கும் இதே நிலைமைதான். ஜெயக்குமாரோடு மோதல் தொடர்ந்துகிட்டே இருந்திச்சி. இந்த நேரத்தில்தான் கல்யாணசுந்தரத்துக்கு புதுசா ஒரு சிக்கல்.''

""என்ன விவகாரம்?''

""ராமநாதபுரம் மாவட்டம் திருப்புலானியைச் சேர்ந்த ஒரு சீனியர் கட்சிக்காரர் ஒரு வாரமா கலைஞரோட கோபாலபுரம் வீட்டுக்கு அலையா அலைஞ்சிருக்காரு. கடைசியா, கலைஞரோட உதவியாளர் சண்முகநாதன்கிட்டே தன்னோட நிலையை சொல்லி, கலைஞரை பார்த்துட்டுப்போயிடுறேன்னு கேட்டிருக்காரு. கலைஞர் வெளியே வந்தப்ப அவர்கிட்டே முறையிட்ட அந்த கட்சிக்காரரு, நான் 5 முறை ஒன்றிய செயலாளர் தேர்தலில் போட்டியிட முயற்சித்தும் விட மாட்டேங்குறாங்க. எங்க மாவட்ட கட்சிக்காரங்களில் நானும் ஒரு சீனியர். அப்படியிருந்தும் எனக்கு ஒன்றிய கழகத் தேர்தலில் போட்டியிடுறதுக்கு விண்ணப்பம் கொடுக்க மாட் டேங்குறாங்க. போட்டியிட வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் ஜெயிப்பேன். அந்தளவுக்கு ஆதரவு இருக்குது. அதற்கு விண்ணப்பம் கொடுக்கச் சொல்லுங்கய்யான்னு கதறியிருக்காரு. ஏற்கனவே இதுபோல நிறைய புகார்கள் கலைஞர் கவனத்துக்கு எழுத்துப்பூர்வமா வந்திருந்ததால, உடனே இந்த விஷயத்தில் கவனம் செலுத்தச்சொல்லியிருக்காரு. லோக்கலில் விண்ணப்பம் கிடைக்கலைன்னா தலைமைக் கழகத்தில் வாங்கிக்கலாம்னும், லோக்கலில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியலைன்னா தலைமைக்கழகத்தில் சமர்ப்பிக்கலாம்னும் பொதுச்செயலாளர் பேராசிரியர் அறிவிச்சாரு. ஆனா அந்த அறிவிப்பு நாலு நாள் கழிச்சிதான் கட்சி பத்திரிகையான முரசொலியில் வெளியானது.''

""கலைஞர் சொல்லி பேராசிரியர் அறிவித்தே இத்தனை நாள் தாமதமா?''

""தலைமைக் கழகத்திலேயே விண்ணப்பத்தை வாங்கி, அங்கேயே சமர்ப்பிக்கலாம்னா அது மா.செ.க்களுக்கு ஆப்பாக அமைஞ்சிடும். இப்ப இருக்கிற மா.செ.க்கள் அப்படியே நீடிக்கணும்னு ஸ்டாலின் நினைக் கிறாரு. அப்படின்னா கிளை, ஒன்றியம், நகர நிர்வாகிகளெல்லாம் மா.செ.க் களுக்கு வேண்டியவங்களா இருந்தாதான் சரியா இருக்கும். போட்டி போடுறவங் களுக்கு விண்ணப்பம் கொடுத்தால் மா.செ.க்களுக்கு எதிரானதா அமைஞ்சிடும். மா.செ.க்களுக்கு வைக்கிற ஆப்பு, தனக்கு கொடுக்கப்படுற நெருக்கடின்னு ஸ்டாலின் நினைக்கிறதாலதான் முரசொலியில் அந்த அறிவிப்பு லேட்டா வந்திருக்குது. இந்த நெருக்கடியைத் தவிர்க்கணும்னு நினைச்சாரு ஸ்டாலின். அதுதான் அமைப்புச் செயலாளர் கல்யாணசுந்தரத்தோட ராஜினாமா லெட்டரா வெளிப்பட்டது.''

""புரியலையே?''

""ராஜினாமாவுக்கான காரணமா கல்யாணசுந்தரம் சொன்னதெல்லாம் மு.க.ஸ்டாலின் தன்னோட நெருக்கமான வட்டாரத்தில் தொடர்ந்து சொல்லிக் கிட்டிருப்பதுதான். 2016 சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் வேட்பாளரா தன்னை அறிவிச்சாதான் கட்சிக்காரங்க புத்துணர்ச்சியோடு செயல்படுவாங்கன்னும் பொது வான வாக்காளர்களை கவரமுடியும்னும் அவர் சொல்றாரு. வாரிசு அரசியல்ங்கிற பேச்சுதான் தி.மு.க.வுக்கு பெரிய பலவீனமா இருக்குதுன்னும் அதனால குடும் பத்திலிருந்து வேற யாருக்கும் எந்த முக்கியத்துவமும் கொடுக்கக்கூடாதுங்கிறதுதான் ஸ்டாலினோட நிலைப்பாடு. கனிமொழியையும் தயாநிதியையும் அரசியலிலிருந்து ஓரங்கட்டணும்ங்கிறதை அவர் வலியுறுத்திக்கிட்டுத்தான் இருக்காரு. எம்.பி. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்பதா சொல்லி அவர் ராஜினாமா கடிதம் கொடுத்தப்பகூட இதை வலியுறுத்தியிருந்தாரு. இப்ப கல்யாணசுந்தரமும் அதைத்தான் தன்னோட ராஜினாமா கடிதத்திலே குறிப்பிட்டிருக்காரு.''

""2ஜி வழக்குதான் எம்.பி. தேர்தலில் தி.மு.க வாஷ் அவுட்டானதுக்கு காரணம்னும் அதில் சம்பந்தப்பட்டவங்களை ஒதுக்கி வைக்கணும்னும் கல்யாணசுந்தரம் தன்னோட ராஜினாமா லெட்டரில் சொல்லியிருக்காரே?''

""ஆமா.. இதுவும் ஸ்டாலின் வலியுறுத்தும் அம்சம்தான். 2ஜி வழக்கில் சம் பந்தப்பட்ட ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி இவங்களை ஓரங்கட்டணும்னு ஸ்டாலின் வலியுறுத்துவதை கல்யாணசுந்தரம் தன்னோட லெட்டரில் குறிப்பிட்டிருக்காரு. அதோடு கூடுதலா, நிலமோசடி கேஸில் தொடர்புடைய நிர்வாகிகளோட பதவி களை பறிக்கணும்னும் சொல்லியிருக்காரு. ஆக, மு.க.ஸ்டாலினோட மன ஓட்டங்களை அப்படியே கல்யாணசுந்தரத்தோட லெட்டர் பிரதிபலிச்சிருக்கிறதால, அவர் சொல்லித்தான் இவர் எழுதியிருக்காருங்கிறது கலைஞரோட முடிவு. அதோடு, இந்த லெட்டரை சில மீடியாக்களுக்கு வேணும்னே ரிலீஸ் பண்ணியதால டென்ஷனான கலைஞர், கல்யாணசுந்தரத்தை நீக்கிட்டு ஆர்.எஸ்.பாரதியை அமைப்புச் செயலாளராக்கிட்டாரு. ஆர்.எஸ்.பாரதிக்கு நூற் றுக்கணக்கான போன்கால்கள். ஏகப்பட்ட வாழ்த்துகள். அழகிரியும் போன் பண்ணி வாழ்த்தியதோடு, நீயாவது ரப்பர் ஸ்டாம்பா இல்லாம இருன்னு சொல்லியிருக்காரு. பாரதியும், நான் எப்ப அந்த மாதிரி இருந்திருக்கேன்னு சிரிச்சிக்கிட்டே சொன்னாராம்.''

""மாவட்டவாரியா தொண்டர்களை சந்திக்கிறதுக்காக ஸ்டாலின் தன்னோட சுற்றுப்பயணத்தை தொடங்கிய ஆக. 7-ந்தேதி அமைப்புச் செயலாளர் மாற்றம் நடந்திருக் குதே, இதைப் பற்றி அவரோட ரியாக்ஷன் என்னவாம்?''

""ஸ்டாலினைப் பொறுத்தவரைக்கும் ரூட் க்ளியராக இருந்தால்தான் 2016-ல் ஆட்சியைப் பிடிக்க முடியும்னு நினைக்கிறாரு. கட்சிக்குள் குடும்பத்தினர் வேற யாரும் இருக்கக்கூடாதுங்கிறதில் பிடிவாதமா இருக்காரு. அவரோட சகோதரி செல்வி, அவங்க கணவர் முரசொலி செல்வம் இவங்க ளெல்லாம் தன்னோட எதிர்காலத்துக்காக வியூகம் வகுப்பதை விட தயாநிதிக்கு மீண்டும் முக்கியத்துவம் கிடைப்பதற்கும் அழகிரியை மறுபடியும் கட்சிக்குள்ளே கொண்டு வருவதிலும் தான் கவனமா இருந்து செயல்படுறாங்கன்னு ஸ்டாலின் நினைக்கிறாரு. அதுபோல, 2ஜி வழக்கில் சிக்கியிருக்கிற கனிமொழி தனக்கும் நெருக்கடியை உண்டாக்கணும்னு டெல்லியில் மீடியாக்கள்கிட்டே பேசி, அமலாக்கத்துறை நெருங்குவதா கிளப்பி விட்டிருக்காருன்னும் ஸ்டாலினுக்கு கோபம் இருக்குது. இதற்கெல்லாம் முடிவு கட்டணும்னா, குடும்பத்து ஆட்கள் யாருக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்காமல், இப்ப பொருளாளரா இருக்கிற தனக்கு இதற்கும் மேலான பதவி கொடுத்து, முதல்வர் வேட்பாளரா முன்னிறுத்தினாதான் எந்தத் தலையீடுமில்லாம கட்சியை வழிநடத்த முடியும்னு அவர் நினைக்கிறாரு. நவம்பரில் கட்சி யின் அனைத்து மட்ட தேர்தலும் முடிந்து புதிய நிர்வாகிகள் விவரம் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்கப்படும். அதற்குள் இதெல்லாம் நடக்கணும்ங்கிறதுதான் ஸ்டாலினோட வியூகம்.''

""கலைஞர் குடும்பத்தில் இருக்கிறவங்க இதை எப்படி பார்க்குறாங்க?''

""போன ஞாயிற்றுக்கிழமையன்னைக்கு அழகிரியும் கனிமொழியும் மதுரையிலிருந்து ஒரே ஃப்ளைட்டில் சென் னைக்கு வந்தப்ப கட்சி நிலவரங்கள் பற்றி பேசப்பட்டிருக் குது. அதனால அவங்க மூவ் எப்படி இருக்கும்ங்கிற எதிர்பார்ப்பு கூடியிருக்குது. செவ்வாயன்று கலைஞர் சி.ஐ.டி. காலனி வீட்டுக்குப் போயிருந்த நேரம் பார்த்து சாயங்காலம் 6 மணி போல கோபாலபுரம் வீட்டுக்கு வந்த அழகிரி, அங்கிருந்த வேறு யார்கிட்டேயும் எதுவும் பேசாம, தயாளு அம்மாவை சந்திச்சிட்டு, கலைஞர் அங்கே வர்றதுக்குள்ள திரும்பிட்டாரு. தயாளு அம்மா வும் அடிக்கடி வந்து பார்த்துட்டுப்போகும்படி சொல்லியிருக்காங்க. சென்னை யில் உள்ள மகன் துரைதயாநிதி வீட்டில் மனைவி காந்தியோடு தங்கி யிருக்கிற அழகிரி, அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் இளையமகள் அஞ்சுவோடும் குடும்பத்தோடும் ஆலோசனை நடத்துறாராம். மதுரையில் உள்ள தன் ஆட்களைத் தொடர்பு கொண்டு, 10 நாளில் நல்ல சேதியோடு திரும்புவேன். அதுக் குள்ள நீங்க மலேசியா, தாய்லாந்துன்னு போயிட்டுவாங்கன்னு சொல்லியிருக்காரு. அவங்களும் பறந்துட்டாங்க.'' 

""கனிமொழி, தயாநிதி, ராசா தரப்பில் என்ன ரியாக்ஷன்?''

""கல்யாணசுந்தரத்தோட லெட்டரில் தங்களைக் குறிப்பிட்டிருப்பதில் கனிமொழி, தயாநிதி எல்லோருமே அப்செட். அவர் மேலே கலைஞர் எடுத்த நடவடிக்கையில் கொஞ்சம் திருப்தி. அவ்வளவுதான். ஆ.ராசாவும், நான் டெல்லியில் வழக்கை எதிர்கொண்டுக்கிட்டிருக்கேன். அதோட விவரங்களையும் புத்தகமா போட்டு தளபதிகிட்டே கொடுத் துட்டேன். என்னை ஏன் இதில் இழுத்துவிடுறாங்களோன்னு கவலைப்பட்டிருக்காரு. நிலஅபகரிப்பு வழக்கு பற்றி கல்யாணசுந்தரம் குறிப்பிட்டிருப்பதால ஸ்டாலின் ஆதரவு மா.செக்கள் உள்பட பல நிர்வாகிகளும் கோபமா இருக்காங்க. இதெல்லாம் பொய் வழக்குன்னு கட்சியே போராட்டம் அறிவித்தது. அப்புறம் எதுக்கு இதை காரணம் காட்டணும்? அதுவும், வீட்டுக்குள்ளே லிஃப்ட் வசதி வச்சி கட்டியிருக்கிற கல்யாணசுந்தரம் பேசலாமா? நாளைக்கு வேணும்னே தளபதி ஸ்டாலின் மேலே பொய்யா ஒரு நிலஅபகரிப்பு கேஸ் போட்டா இவர் லெட்டரில் சொல்ற காரணம் எடுபடுமான்னு கேட்குறாங்க.''

""ஸ்டாலின் குரலா ஒலித்த கல்யாண சுந்தரத்தோட லெட்டர் மூலமா தி.மு.க உள்கட்சி விவகாரம் மறுபடியும் பரபரப் பாயிடிச்சு. இது எப்போது முடிவுக்கு வருமாம்?''

""அந்தக் கவலையோடு பேசுற கட்சியில் எந்தப் பலனும் பார்க்காத விசுவாசிகள்கிட்டே பேசியதில் கிடைச்சதை நான் சொல்றேன். 91 வயசிலும் சளைக்காம உழைக்கிறவரு கலைஞர். அடுத்த முறை ஆட்சி அமைக்கும் வாய்ப்பு அமைஞ்சா அவர் தன்னோட இறுதிக்காலத்தை கௌரவமா அனுபவிப்பாரு. பேசவே முடியாத நிலையிலும் மூணு வருசம் ஆட்சியை நடத்தினாரு எம்.ஜி.ஆர். பேசவும் எழுதவும் செய்கிற கலைஞரால் சக்கர நாற்காலியிலே இருந்தபடி நிர்வாகம் செய்ய முடியாதா? கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின் தான்ங்கிறது உறுதியாயிடிச்சி. அவர் தரப்பு பொறுமையா இருந்தாலே சாதிச்சிடலாம். அ.தி.மு.க படுஸ்பீடா தேர்தல் களப் பணி களை கவனிக்கிற நேரத்தில் தி.மு.க இப்படி குடும்பக்குழப்பத்திலேயே இருந்தா எம்.பி. எலக் ஷன் மாதிரிதான் சட்டமன்றத் தேர்த லும் பாதிக்கும். அப்பாவும் மகனும் ஒண்ணா உட்கார்ந்து வெளிப்படையா பேசினா எல்லாம் சரியாயிடும். அது நடக்கணுமேன்னு கவலையோடு சொல்றாங்க.'' 

ad

ad