புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2014


தனது பராமரிப்பில் வளர்த்த இளைஞரை அவரது நேபாள பெற்றோரிடம் பிரதமர் நரேந்திர மோடி ஒப்படைத்துள்ளார்.
கடந்த 1998ஆம் ஆண்டு ராஜஸ்தானில் வேலை செய்து கொண்டிருந்த நேபாள சிறுவன் ஒருவன், தனது நாட்டிற்கு செல்வதற்காக ரயில் ஏறும்போது, தவறுதலாக
குஜராத் மாநிலம், அகமதாபாத் செல்லும் ரயிலில் ஏறிவிட்டார். இதையடுத்து மொழி தெரியாமல் ஆமதாபாத்தில் தவித்துக் கொண்டிருந்த ஜீத் பகதூர் என்ற அந்த சிறுவனை, அப்போது பா.ஜ.க. பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த நரேந்திர மோடி தனது பராமரிப்பில் வளர்த்து வந்தார்.
நரேந்திர மோடியின் வீட்டில் வளர்ந்து வந்த அந்த சிறுவன் தற்போது அகமதாபாத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. படித்து வருகிறான். இதையடுத்து மோடி பிரதமராக பதவியேற்றவுடன், ஜீத் பகதூரின் பெற்றோர் குறித்து விசாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அந்த சிறுவனின் காலில் உள்ள 6வது விரலைக் கொண்டு நேபாளத்தில் உள்ள அவரின் பெற்றோரை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இந்நிலையில், 2 நாள் அரசு பயணமாக இன்று (3ஆம் தேதி) நேபாளம் சென்ற நரேந்திர மோடி, தன்னுடன் 26 வயதான ஜீத் பகதூரையும் அழைத்து சென்று, நேபாள தலைவர் காட்மாண்டுவில் அவருடைய பெற்றேரிடம் ஒப்படைத்தார்.

இதுகுறித்து ஜீத் பகதூர் கூறுகையில், ''நரேந்திர மோடி என்னை தனது சொந்த சகோதரனைப் போன்று பார்த்துக் கொண்டார். ஒரு வி.ஐ.பி.யுடன் வாழ எனக்கு கிடைத்த வாய்ப்பு ஒரு பெரிய அதிர்ஷ்டம். இருப்பினும், நான் ஒரு வி.ஐ.பி.யுடன் வாழ்கிறோம் என்று நினைக்கவில்லை. இனிமேலும், நான் இந்தியா வந்து எனது கல்வியை தொடரவே ஆசைப்படுகிறேன்'' என்றா

ad

ad