புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

சிங்கள நோயாளிகளுக்கு இரு சிறுநீரகங்களையும் தானம் செய்த தமிழ்ப்பெண்ணின் மனிதாபிமானம்
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளிப்புச் செய்த விக்னேஸ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரின் சிறுநீரகத்தை இரு நோயாளர்களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
 
மூளை இறந்த நிலையில் மட்டக்களப்பு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தமிழ் பெண் ஒருவரின் இரு சிறுநீரகங்கள் சிறுநீரக நோயினால் பீடிக்கப்பட்டிருந்த இரு சிங்கள இனத்தவர்களுக்கு கண்டி ஆஸ்பத்திரியில் வைத்து பொருத்தப்பட்டுள்ளது.
சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சைகள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளதோடு, அவர்கள் சிறந்த தேகாரோக்கியத்துடன் இருப்பதாக சிறுநீரக மாற்றுச் சிகிச்சை நிபுணத்துவ மருத்துவர் டொக்டர் சாலிய பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மொனராகல, பெதியாய கிராமத்தில் வசித்த மூன்று பிள்ளைகளின் தாயான கோவிந்தசாமி விக்னேஸ்வரி (41 வயது) என்பவரின் இரு சிறுநீரகங்களே இவ்வாறு இரு உயிர்களை காப்பாற்றப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்குச் சென்ற மருத்துவர்கள் சத்திர சிகிச்சை மூலம் கோவிந்தசாமி விக்னேஸ்வரியின் இரு சிறுநீரகங்களையும் அகற்றி கண்டி ஆஸ்பத்திரிக்கு எடுத்து வந்து, சத்திர சிகிச்சைகள் மூலம் சிங்கள இனத்தவருக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பொத்துவில் கோயிலுக்கு பிள்ளைகளுடன் சென்ற வேளை இவர்கள் பயணித்த ஆட்டோ எருமை மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனது மனைவி படுகாயமடைந்ததாக சிறுநீரகத்தை அன்பளிப்புச் செய்த விக்னேஸ்வரியின் கணவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
மனைவியின் மூளை இறந்துள்ளதால் அவரை குணப்படுத்த முடியாது என மருத்துவர்கள் கூறியதால் அவரின் சிறுநீரகத்தை இரு நோயாளர்களுக்கு வழங்க முடிவு செய்ததாக அவர் கூறினார்.
இதன் மூலம், தனது மனைவிக்கு நன்மை கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்ட அவர், மண்ணோடு மண்ணாகும் உடலை இவ்வாறு நற்காரியத்திற்கு பயன்படுத்த முடிந்தது குறித்து மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டார்.
மனைவியின் சிறுநீரகங்கள் சிங்கள இனத்தவர் இருவருக்குத்தான் வழங்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். அது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். எமக்கு சிங்கள, தமிழ், முஸ்லிம் என பேதம் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

ad

ad