புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

மத்­திய அரசின் அழுங்குப் பிடியை ஆட்டம் காண­வைத்த தமிழ்­நாடு-ஹரிகரன் 
இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில், மாநி­லங்கள் தலை­யீடு செய்­யவோ, அழுத்­தங்­களைக் கொடுக்­கவோ முடி­யாது என்ற, பா.ஜ.க. அர­சாங்­கத்தின் அழுங்குப் பிடியை ஆரம்­பத்­தி­லேயே ஆட்டம் காண வைத்து விட்­டது தமிழ்­நாடு. தமிழ்­நாட்டின் இந்த வெற்­றிக்குக் காரணம், இலங்­கையின் பாது­காப்பு அமைச்சு என்­பது, ஒரு விசித்­தி­ர­மான உண்­மைதான்.
தமிழ்­நாட்­டுக்கும், இலங்கைப் பாது­காப்பு அமைச்­சுக்கும் எந்­த­ள­வுக்கு எட்டாப் பொருத்தம் என்­பதை இங்கு விப­ரித்துக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை.
இலங்கை அர­சாங்­கத்தை, தமிழ்­நாடும், தமிழ்­நாட்டை இலங்கை அரசும் எந்­த­ள­வுக்கு மோச­மாக விமர்­சிக்க முடி­யுமோ, அந்­த­ள­வுக்கு மோச­மாக விமர்­சித்து வந்த வர­லாற்றை எவ­ராலும் இல­குவில் மறக்க முடி­யாது.
இங்­குள்ள தமி­ழர்­க­ளுக்­காக தமிழ்­நாட்டில் இருந்து கொடுக்­கப்­படும் குரலை, இலங்கை அர­சாங்­கத்­தினால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை. அது­போ­லவே, இலங்­கையில் தமி­ழர்கள் நடத்­தப்­படும் விதத்தை தமிழ்­நாட்­டினால் சகித்துக் கொள்ள முடி­ய­வில்லை.
இதுவே இரு தரப்­புக்கும் இடை­யி­லான விரி­சலின் அடிப்­படை. இந்த விரி­சலின் விளைவும், இலங்கைத் தமிழர் மீதான தமிழ்­நாட்டின் கரி­ச­னை­களும், புது­டில்லி மீதும் தாக்­கத்தைச் செலுத்­தி­யது.
குறிப்­பாக, மன்­மோ­கன் சிங் அர­சாங்­கத்தில் தி.மு.க. அங்கம் வகித்த போதும் சரி, அதி­லி­ருந்து வெளி­யே­றிய பின்னர் ஏற்­பட்ட சூழ­லிலும் சரி, தமிழ்­நாட்டின் அழுத்­தங்­க­ளுக்கு புது­டில்லி வளைந்து கொடுக்கும் நிலை காணப்­பட்­டது உண்மை.
எல்லாச் சந்­தர்ப்­பங்­க­ளிலும், அவ்­வாறு புது­டில்லி வளைந்து கொடுத்த­தாகக் கூற­மு­டி­யாது.
குறிப்­பாக, 2009ம் ஆண்டு போரை நிறுத்தும் விட­யத்தில், புது­டில்லி மீது கொடுக்­கப்­பட்ட தி.மு.க.வின் அழுத்­தங்கள் பய­ன­ளிக்­க­வில்லை.
அது­போல, இலங்­கை­யு­ட­னான இரா­ணுவ உற­வு­களை முறித்துக் கொள்­ளவும், பயிற்­சி­களை நிறுத்திக் கொள்­ளவும், தமிழ்­நாட்டின் அழுத்­தங்கள் அவ்­வ­ள­வாக கண்டு கொள்­ளப்­ப­ட­வில்லை. போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக, இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னத்தைக் கொண்டு வரும் முயற்­சி­க­ளிலும், புது­டில்­லியை தமிழ்­நாட்­டினால் வளைக்க முடி­ய­வில்லை.
என்­றாலும், 2012, 2013ம் ஆண்­டு­களில், இலங்­கைக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­பட்ட தீர்­மா­னங்­களை ஆத­ரிக்கச் செய்­வதில் தமிழ்­நாடு பெரும் வெற்­றியைப் பெற்­றது.
என்­றாலும், 2013ம் ஆண்டு வாக்­கெ­டுப்பில், இந்­தியா நடு­நிலை வகித்­தது.
அதற்குத் தமிழ்­நாட்டில் இருந்து முறை­யான அழுத்­தங்கள் கொடுக்­கப்­ப­டா­ததும் ஒரு காரணம் என்­பதை மறுக்க முடி­யாது.
ஜெனீவாவில் இலங்­கைக்கு எதி­ராகக் கொண்­டு­வ­ரப்­பட்ட இரண்டு தீர்­மா­னங்­க­ளையும் இந்­தியா ஆத­ரித்த போது, புது­டில்­லியின் கொள்கை வகுப்­பா­ளர்கள் மத்­தி­யிலும், இந்­தி­யாவின் தேசி­ய­வா­திகள் மத்­தி­யிலும் கடு­மை­யான எதிர்ப்புக் கிளம்­பி­யது.
காரணம், அது தவ­றான முடிவு என்றும், தமிழ்­நாட்டின் அழுத்­தங்­க­ளுக்கு அப்­போ­தைய அரசு அதிகம் வளைந்து கொடுப்­ப­தா­கவும் விமர்­ச­னங்கள் எழுந்­தன.
எந்­த­வொரு நாட்­டையும் இலக்கு வைத்து, கொண்டு வரப்­படும் தீர்­மா­னங்­களை ஆத­ரிப்­ப­தில்லை என்­பதே இந்­திய வெளி­வி­வ­காரக் கொள்கை என்றும், அதனை புது­டில்லி மீறி­ விட்­ட­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன.
2013ம் ஆண்டு தீர்­மானம் கொண்டு வரப்­பட்­ட­போது, புது­டில்லி மீது தமிழ்­நாட்டின் அழுத்­தங்கள் அதி­க­மாக இருக்­க­வில்­லை­யென்­ப­துடன், தமிழ்­நாட்­டுடன் பேரம் பேச வேண்­டிய அவ­சி­யமும் மன்­மோ­கன் சிங் அர­சுக்கு இல்­லா மல் போனது.
அர­சியல் சூழலில் ஏற்­பட்ட இந்த மாற்­றங்கள், ஜெனீ­வாவில் இந்­தியா தனது முடிவை எடுப்­பதில் எந்த தாக்­கத்­தையும் செலுத்­த­வில்லை.
இதனால், இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் மீதான வாக்­கெ­டுப்பில் பங்­கேற்­காமல் தவிர்த்­தது இந்­தியா.
அதே­வேளை, சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தும் தீர்­மான வாசகம் மீது நடத்­தப்­பட்ட வாக்­கெ­டுப்பில், அதற்கு எதி­ரா­கவும் இந்­தியா வாக்­க­ளித்­தது. எந்­த­வொரு நாட்­டையும் குறி­வைத்துக் கொண்டு வரப்­படும் தீர்­மா­னத்தை ஆத­ரிப்­ப­தில்லை என்­பது இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்கை என்று அதனை நியா­யப்­ப­டுத்­தி­யது புது­டில்லி.
ஆனால், அதே இந்­திய வெளி­வி­வ­கார அமைச்­சுதான், 2012, 2013ம் ஆண்­டு­களில் கொண்டு வரப்­பட்ட இலங்­கைக்கு எதி­ரான தீர்­மா­னங்­களை ஆத­ரித்­தி­ருந்­தது.
அது­மட்­டு­மன்றி, பாலஸ்­தீனம் மீதான தாக்­கு­தலில் போர்க்­குற்­றங்கள் இழைக்­கப்­பட்­டுள்­ ளதா என்று இஸ்ரேல் மீதான சர்­வ­தேச விசா­ர­ ணையைக் கோரும் தீர்­மா­னத்தைக் கூட அண்­மையில் இந்­தியா ஆத­ரித்து வாக்­க­ளித்­துள்­ளது.
2012, 2013ல், இலங்கை விவ­கா­ரத்தில் இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்கை தடு­மா­றி­ய­தெனில், 2014ல் இஸ்ரேல் விவ­கா­ரத்­திலும்  அவ்­வாறே தடு­மா­றி­யது என்­பதை ஒப்புக் கொள்­ளத்தான் வேண்டும்.
எவ்­வா­றா­யினும், இலங்கை விவ­கா­ரத்தில், புது­டில்­லியின் முடி­வுகள் மீது தமிழ்­நாடு செல்­வாக்குச் செலுத்தும் நிலைக்கு, கடந்த மே மாதம், நடந்த நாடா­ளு­மன்றத் தேர்தல் முடிவு கட்­டி­யி­ருந்­தது.
அந்த தேர்­தலில் பா.ஜ.க. பெற்ற தனிப் பெரும்­பான்மை பலம், மாநி­லங்­களின் கருத்­துக்­க­ளுக்கு செவி கொடுக்க வேண்­டிய அவ­சி­யத்தை இல்­லாமல் செய்து விட்­டது.
மாநி­லங்­களின் தய­வின்றி ஆட்சி செய்யும் ஓர் அர­சாங்கம், தன்­னிச்­சை­யா­கவே முடி­வு­களை எடுக்­கலாம் என்ற நிலை ஏற்­பட்­டது.
இந்­தி­யாவின் வெளி­வி­வ­காரக் கொள்­கையில், தமிழ்­நாடோ, மேற்கு வங்­கா­ளமோ தலை­யிட முடி­யாது என்று பா.ஜ.க. தரப்­பினர் வெளிப்­ப­டை­யா­கவே கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­கின்­றனர்.
எனினும், மத்­திய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க. தலை­வர்கள் யாரும், அதனை வெளிப்­ப­டை­யாகக் கூறி­ய­தாகத் தெரி­ய­வில்லை.
ஆனால், அவர்­களை ஆட்­டு­விக்கும் அல்­லது ஆட்­டு­விக்க முற்­படும் பா.ஜ.க. கொள்கை வகுப்­பா­ளர்கள், அந்தக் கருத்தை வலி­யு­றுத்தி வரு­கின்­றனர்.
இலங்கை விவ­கா­ரத்தில் தமிழ்­நாடும், பங்­க­ளாதேஷ் விவ­கா­ரத்தில் மேற்கு வங்­கா­ளமும் தான், புது­டெல்லி மீது அழுத்­தங்­களைக் கொடுத்து வரு­கின்­றன.
இந்த இரண்டு தரப்­பு­க­ளையும் உதறித் தள்­ளி­விட்டு, இரு­நா­டு­க­ளு­டனும் உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்­பது, பா.ஜ.க. கொள்கை வகுப்­பா­ளர்­க­ளி­னது கருத்­தாகும்.
அண்­மையில் கொழும்பில், பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நடந்த ஞாப­கார்த்த கருத்­த­ரங்கில் உரை­யாற்­றிய, பா.ஜ.கவின் தற்­போ­தைய தலை­வர்­களில் ஒரு­வ­ரான, சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி, இந்­திய - இலங்கை உற­வு­க­ளி­லி­ருந்து தமிழ்­நாட்­டையும், தமிழர் பிரச்­சி­னை­யையும் துண்­டிக்க வேண்­டு­மென்று குறிப்­பிட்­டி­ருந்தார்.
இது பா.ஜ.க. தரப்­பி­லுள்­ள­வர்­களின் மனோ­நி­லையை தெளி­வா­கவே படம்­பி­டித்துக் காட்­டி­யது.
இனிமேல், அதா­வது நரேந்­திர மோடி அர­சாங்கம் பத­வியில் இருக்கும், அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளிலும், இந்­திய வெளி­வி­வ­காரக் கொள்­கையில் மாநி­லங்­களின் தலை­யீடு இருக்­காது என்றே கரு­தப்­பட்­டது.
அவ்­வாறு தலை­யி­டு­வ­தற்கு அல்­லது செல்­வாக்குச் செலுத்­து­வ­தற்கு புது­டில்லி இட­ம­ளிக்­காது என்­ப­தற்­கான சமிக்­ஞை­களே வெளிப்­பட்­டன.
எனினும், இலங்கை பாது­காப்பு அமைச்சின் ஒரு நட­வ­டிக்கை, தமிழ்­நாட்டின் கரி­ச­னை­க­ளுக்கும் கவ­லை­க­ளுக்கும் காது கொடுக்க வேண்­டிய நிலையை புது­டில்­லிக்கு ஏற்­ப­டுத்­தி­விட்­டது.
பாது­காப்பு அமைச்சின் இணை­யத்­த­ளத்தில் வெளி­யான கட்­டுரை தனியே, இலங்கை மீது அழுத்­தங்­களைக் கொண்டு வர­வில்லை.
புது­டில்­லிக்கும், அழுத்­தங்­களை ஏற்­ப­டுத்தி அதனைத் திக்­கு­முக்­காடச் செய்­து­விட்­டது.
கட்­டுரை விவ­காரம், தமிழ்­நாட்டில் கொந்­த­ளிப்பை ஏற்­ப­டுத்­திய போது அதனை வேடிக்கை பார்த்த இந்­திய அர­சாங்­கத்­தினால், அந்த விவ­காரம் நாடா­ளு­மன்­றத்தில் பெரும் சர்ச்­சை­யாக வெடித்­த­ போது, மௌன­மாக இருக்க முடி­ய­வில்லை.
அந்தப் பிரச்­சி­னைக்கு முடிவு கட்­டு­வ­தற்­காக, தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொள்ள வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­பட்­டது பா.ஜ.க. அர­சாங்கம்.
தமிழ்­நாட்டின் அழுத்­தங்­க­ளுக்குப் பணிந்து. அதன் கோரிக்­கை­களை நிறை­வேற்ற வேண்­டிய நிலைக்கு உள்­ளா­கி­யது.
பாது­காப்பு அமைச்சு மன்­னிப்புக் கோரிவிட்டது, அதனுடன் எல்லாம் முடிந்து போயிற்று என்று கூறி, இந்த விவகாரத்தில் அடிபணியாமல் இருந்திருக்க முடியும்.
ஆனால், பா.ஜ.க. அரசாங்கத்தினால் அவ்வாறிருக்க முடியவில்லை.
தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று, புதுடில்லிக்கான இந்தியத் தூதுவரை அழைத்துக் கண்டித்துள்ளது.
இது, வெளிவிவகாரக் கொள்கையில், தலையிடும் உரிமை மாநிலங்களுக்கு இல்லை என்ற பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டுக்கு முரணானது.
இந்த முடிவை எடுத்ததன் மூலம், உணர்வுபூர்வமான பிரச்சினைகளில், மாநிலங்களின் கருத்துக்கு மத்திய அரசு செவிசாய்த்தேயாக வேண்டும் என்று உணர வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இனிமேல், இந்திய – இலங்கை உறவுகளுக்குக் குறுக்கே தமிழ்நாட்டினால் எதையும் செய்ய முடியாது என்ற, இலங்கை அரசாங்கத்தின் நினைப்பிலும், இது மண்ணை அள்ளிப் போட்டு விட்டது.
ஹரிகரன்

ad

ad