புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2014

எனது கணவரை ஒரு முறையாவது காட்டுங்கள்;மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி உருக்கமாக வேண்டுகோள்
எனக்கு அரிசி வேண்டாம் பருப்பு வேண்டாம், வீடு வேண்டாம் எனக்கு எனது கணவர் தான்  வேணும். பொது மன்னிப்பு வழங்குவதாக கூறிதான்  இராணுவம் எனது கணவரை
சரணடைய வைத்தது. முள்ளிவாய்க்காலில் சரணடைந்த பாதிரியார் ஜோசெப் மைக்கல் உட்பட 40 பேருடன் தான் எனது கணவரும் சரணடைந்தார் எனக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் அவரை ஒரு முறையாவது காட்டுங்கள்  என கோரி ஆணைக்குழு முன்னால் விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி ஜானின் மனைவி கண்ணீர் விட்டு கதறி அழுதார்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பிலான சாட்சியப்பதிவின் இறுதிநாள்  பதிவு தற்போது மடு பிரதேச செயலகத்தில் நடைபெற்று வருகின்றது. அதன்போதே அவரது மனைவி ஆணைக்குழு முன் மேற்கண்டவாறு கூறி கதறி அழுதார்.

ad

ad