புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 ஆக., 2014

காணாமற்போனோரின் உறவுகள்; இரகசியமாகச் சாட்சியமளிப்பர் 
ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இரகசியமாகச் சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள்
முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார் காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன்.
 
இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்த விசாரணைகள் வெளிநாடுகளில் பல்வேறு நகரங்களில் நேரடியாக இடம்பெற்று சாட்சிகள் திரட்டும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. அத்துடன் ஸ்கைப் உள்ளிட்ட நவீன தொடர்பு சாதனங்களின் ஊடாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 
 
அதனடிப்படையில் இலங்கையிலுள்ள காணாமற் போனோரின் உறவுகளும் நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக சாட்சியமளிப்பதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
 
இதற்குரிய நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்றும், இது இரகசியமாகவே மேற்கொள்ளப்படும் என்றும், எப்போது சாட்சியமளிப்பு இடம்பெறும் என்பதைப் பற்றி எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்படாதெனவும், காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழுவின் செயலாளர் சுந்தரம் மகேந்திரன் மேலும் தெரிவித்தார். 

ad

ad