புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2014

ஐ.நா.வுக்கு மங்கள சாட்சியம் 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்ஸின் விசாரணைகுழு மற்றும் உள்ளூர் விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கப் போகிறார் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர விடுதலைப் புலிகளினது செயற்பாடுகள் குறித்தும் அவர்களுடைய சொத்துக்கள் தற்போது யாரிடமிருக்கின்றன என்பது குறித்தும் தெரிவிக்கப்போகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
நாட்டினதும் படையினரினதும் கௌரவத்தைக் காப்பாற்றவே தான் சாட்சியமளிக்க உள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் விரைவில் கே.பி குறித்தும் அவரது சொத்துக்கள் குறித்து பகிரங்கப்படுத்தப் போகிறார் எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
வடக்கு யுத்தத்தில் காணாமற் போனோர் தொடர்பில் ஆராய்வதாக கூறி ராஜபக்‌ஷ அரசாங்கம் ஜனாதிபதிஆணைக்குழுவை நியமித்தமை அந்த ஆணைக்குழுவுக்கு சர்வதேச நிபுணர்களை நியமித்தமை பாதுகாப்பு அமைச்சு மற்றும் பாதுகாப்புச் செயலாளரை பாதுகாக்கும் நடவடிக்கையே. 
 
இதன்படி பாதுகாப்பு அமைச்சருக்கும் பாதுகாப்பு செயலாளருக்கும் எதிராகவுள்ள பாரிய குற்றச்சாட்டிலிருந்து இவர்கள் தப்பி அதன் பொறுப்பை இராணுவ மேலதிகாரிகள் பலர் மீது சுமத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்தார். 
 
மேலும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட சர்வதேச நிபுணர்களின் நடவடிக்கையை தெளிவுபடுத்திய மங்கள ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோரை காப்பாற்றி இராணுவத்தினர் பலரை குற்றவாளிகளாக அவர்கள் அறிக்கை சமர்ப்பிப்பர் என தெரிவித்தார். மேலுள்ளவர்களை காப்பாற்றி இராணுவத்திலுள்ளவர்களை பலிகொடுக்கும் வரலாறு இவர்களுக்கு உள்ளதாக மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

ad

ad