புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2014

கோத்தபாய மீது அமெரிக்காவில் வழக்கு தொடர முடியும் 
இலங்கையில் இடம்பெற்ற இறுதிப்போரில் மனித உரிமை மீறல்கள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது வழக்குத் தொடர்வதற்கான சாந்தர்ப்பங்கள் உள்ளதாக அமெரிக்க பத்திரிக்கை  ஒன்றின் இணை ஆசிரியர் ராயன் குட்மேன் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார். 
 
அண்மையில் காங்கிரஸில் மேற்கொண்ட விளக்கம் ஒன்றில் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான குற்றச்சாட்டில் அமெரிக்க பிரஜை என்ற அடிப்படையில் கோத்தபாயவின் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் குறிப்பிட்டார். 
 
1966ம் ஆண்டு அமெரிக்காவின் போர்க்குற்ற சட்டத்தின்படி கோத்தபாய போன்ற அமெரிக்க பிரஜைகளுக்கு பொருத்தமாக இருக்கும் என்று அவர் வாதிட்டார். 
 
இந்த நிலையில் குற்றச்சாட்டுக்களுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லாது போனால் குறித்த அமெரிக்க சட்டத்தின்படி அமெரிக்காவின் நீதி திணைக்களம் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்று ராயன் குட்மேன் ஆலோசனை வெளியிட்டார். 
 
கோத்தபாய மீது குற்றம் சுமத்தக்கூடிய அமெரிக்க சட்டங்கள் குறித்து தெளிவுபடுத்திய ராயன் குட்மேன்.  
 
குற்றவியல் சட்டத்தின் கீழ் கோத்தபாய மீது சட்டநடவடிக்கை எடுக்க முடியாதுபோனால் குடியியல் சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் ராயன் சுட்டிக்காட்டியுள்ளார். 
 
இதற்காக வெளிநாட்டில் உள்ள அமெரிக்க பிரஜை ஒருவர் சித்திரவதையில் ஈடுபட்டால் (18 I.S. Code § 2340A) என்ற சட்டத்தின் அடிப்படையிலும், 
 
அமெரிக்க- இலங்கை இரட்டை குடியுரிமையைக் கொண்ட ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் {18 I.S. Code § 2332} என்ற சட்டத்தின் அடிப்படையிலும், 
 
உளவாளி என்ற குற்றச்சாட்டு தொடர்பில் (18 I.S. Code § 1512) என்ற சட்டத்தின் அடிப்படையிலும், 
 
சாட்சிக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டின் பேரில் {18 I.S. Code § 1513} என்ற சட்டத்தின் அடிப்படையிலும் கோத்தபாய மீது குடியியல் ரீதியான சட்ட நடவடிக்கையை எடுக்கலாம் என்றும் ராயன் குட்மேன் சுட்டிக்காட்டியுள்ளா

ad

ad