புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 ஆக., 2014

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண நீதிமன்றின் உதவி நாடப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
தேசிய இனப்பிரச்சினைக்கு எவ்வாறான ஓர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் உச்ச நீதிமன்றிற்கு சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் செப்டம்பர்
மாதம் அறிவிக்கப்பட உள்ளது. பிளவுபடாத இலங்கையில் சமஷ்டி முறைமையிலான தீர்வுத் திட்டமொன்றின் அவசியத்தை வலியுறுத்துவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய அரசாங்கத்தின் ஒற்றையாட்சி முறைமை தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என தெரிவித்துள்ளது. மாறாக பிளவுபடாத இலங்கைக்குகள் அதிகாரங்கள் பகிர்ந்தளிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என குறிப்பிட்டுள்ளது. தீர்வுத் திட்டம் தொடர்பிலான ஆங்கில பரிந்துரையின் தமிழ் மொழிபெயர்ப்பில் குறிப்பிடப்பட்ட சில வசனங்கள் தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது என தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும், ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி முறைமையை வலியுறுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இணைப்பாட்சி என்ற தமிழ்ப் பதம் சமஷ்டி முறைமையே வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.
 

ad

ad