புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2014

ஆண்மை பரிசோதனைக்கு தடை  கேட்டு  நீதிமன்றில் நித்தியானந்தா 

 லாஸ்ட் புல்லட்!


ஆண்மை பரிசோதனைக்குத் தடைகேட்டு சுப்ரீம் கோர்ட் சென்றது நித்யானந்தா தரப்பு. அங்கு பெண் நீதிபதி ரஞ்சனா பிரசாத், நீதிபதி என்.வி.ரமணா பெஞ்ச் இதனை விசாரித்தது. அப்போது, நித்யானந்தாவுக்கு ஏற்கனவே ஆண்மை பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என அவரது தரப்பு சொன்னது. 18-ந் தேதி ராம்நகர் கோர்ட்டில் நித்யானந்தா ஆஜராகவேண்டும் என்ற சுப்ரீம்கோர்ட் ஆண்மை பரிசோதனைக்குத் தற்காலிகத் தடை விதித்தது. கர்நாடக போலீஸ் தரப்பினர், நித்தி கைதானபோது வழக்கமான சோதனைகள்தான் நடந்ததே தவிர, ஆண்மை சோதனை நடக்கவில்லை. இதை சுப்ரீம் கோர்ட்டில் கூறி, உரிய உத்தரவு பெற்று ஆண்மை பரிசோதனையை விரைவில் நடத்துவோம் என்கிறார்கள் நம்பிக்கையுடன்.
தமிழகத்தில் காங்கிரஸை வலுப்படுத்தும் வகையில் புதிய தலைவரை நியமிப்பது பற்றி டெல்லியில் ஆகஸ்ட் 5 அன்று நடந்த ஆலோசனையில் பங்கேற்ற ஏ.கே.அந்தோணி, குலாம்நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் தலைவர் பதவிக்கு சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், வசந்தகுமார், திருநாவுக்கரசர் ஆகிய 4 பேர் கொண்ட பரிந்துரைப் பட்டியலை சோனியாவிடம் அளித்துள்ளனர். இதையறிந்த ஜி.கே.வாசன் சோனியாவை சந்திக்க அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு காத்திருக்கிறார். இந்த நால்வர் பற்றிய புகார்ப் பட்டியலைத் தயாரித்துள்ள வாசன், தமிழக காங்கிரசின் தலைவர் பதவி தனக்கு வேண்டும் அல்லது தனது ஆதரவாளரான ஞானதேசிகனே நீடிக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்.

ad

ad