புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஆக., 2014


Chandru Mohans Foto

வவுனியா திருநாவற்குள கிராமத்தில் கிராம சேவை உத்தியோகத்தராக கடமையாற்றி இடம் மாற்றம் பெற்றுச் சென்ற திரு.வி.முத்துராசா அவர்களினதும், ஓய்வு பெற்றுச் சென்றவர்களான செல்வி.கார்த்திகேசு பகவதி, திருமதி.லிங்கநாதன் குகனேஸ்வரி ஆகியோரினதும் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் முகமாகவும் , கிராமத்திற்கு புதிய கிராம சேவை உத்தியோகத்தராகக் கடமை ஏற்று வந்திருக்கும் திரு.சு.கோணேஸ்வரலிங்கம் அவர்களை வரவேற்கும் முகமாக இன்று(24/07) மாலை 5 மணிக்கு திருநாவற்குள பொதுநோக்கு மண்டபத்தில் தமீழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) லண்டன் கிளையைச்சேர்ந்த திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் பூரண பங்களிப்பில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக புளொட் முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் முன்னாள் உப நகர பிதாவுமாகிய திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கலந்து இன்றைய நிகழ்வுகளை சிறப்பித்தார்.

இவ் நிகழ்வில் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களினால் திருநாவற்குள உமாமகேஸ்வரன் முன்பள்ளி ஆசிரியருக்கான மாதாந்த ஊக்குவிப்பு தொகையினையும், இலவச வகுப்புகள் பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெறுகின்றமையினால் அதற்கான தளபாட வசதிகளை பெற்றுக்கொள்வதற்கான நிதியினை கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் திரு பாலேந்திரன் அவர்களிடம் நிகழ்வின் பிரதம அதிதி திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள் கையளித்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வுகளில் வரவேற்பு நடனம், கண்ணன் நடனம், குறவன்- குறத்தி நடனம் ஆகியவற்றினை பரதகலா வித்தகர், நுண்கலைமானி, நாட்டிய சிரோன்மணி, இளங்கலைச்சுடர் ஆசிரியர் திருமதி தர்சிகா பிரதீபன் அவர்களின் நெறியாள்கையில் வவுனியா நிருத்தியஸ்ருதி நாட்டிய கலாலய மாணவிகள் வழங்கிய நடனங்கள் அனைவரையும் மகிழ்வித்தமை குறிப்பிடத்தக்கது.

இவ் நிகழ்வில் உரை நிகழ்த்திய பிரதம விருந்தினர் திரு க.சந்திரகுலசிங்கம்(மோகன்) அவர்கள், கிராமத்தின் சேவையாளர்களை கௌரவிக்கும் இவ் நிகழ்வில் கலந்துகொண்டமை என்னை பெருமிதம் கொள்ள வைக்கிறது, சமூகத்திற்கான சேவையாளர்களான இவர்கள் யுத்த காலத்திலும் எல்லா பகுதிகளிலும் அர்ப்பணிப்புடன் செயலாற்றியமை வரவேற்கத்தக்கது. கிராமத்தில் உள்ள வீடுகள் வசதியாகவும் வீதிகள் பழுதடைந்து காணப்படுகிறது, மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட்டால் வீதிகளை புனரமைக்க முடியும். தொடர்ந்து கிளிநொச்சி முதல் வவுனியா வரை பல சமூக வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் பணி தொடர வாழ்த்துகிறேன். அவரின் அடுத்த மாபெரும் பணியாக திருநாவற்குள மாணிக்கதாசன் விளையாட்டு மைதானம் புனரமைக்கப் படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ் நிகழ்வில் கிராம அபிவிருத்திச்சங்க தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள், மாதர் கிராம அபிவிருத்திச்சங்க தலைவி, உறுப்பினர்கள், சிவன் கோவில் பரிபாலன சபையினர், கிறிஸ்தவ குழுமம், ஓய்வு பெற்ற அதிபர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள், மாணவர்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
 

ad

ad