புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஆக., 2014

ஒட்டுசுட்டானில் தாயை கொன்று பிடித்து வரப்பட்ட இரண்டு சிறுத்தைப் புலி குட்டிகள் வடக்கு விவசாய அமைச்சரால் மீட்பு
முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து வடமாகாண விவசாய அமைச்சரினால் மீட்கப்பட்ட அரியவகை சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டு இன்றைய தினம் வடக்கு மற்றும்
மேற்கு மாகாணங்களுக்கான வன உயிரிகள் பாதுகாப்பு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக அறிவிக்கப்பட்டிருக்கும் சிறுத்தைப் புலிகள் வடமாகாண காடுகளில் வாழ்கின்றன. இவையே இலங்கையின் காட்டு ராஜாக்கள் என வர்ணிக்கவும் படுகின்றன.
இவ்வாறான சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டை வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் நேற்றைய தினம் முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலிருந்து மீட்டுள்ளார்.
குறித்த சிறுத்தைப் புலி குட்டிகள் இரண்டையும், அடையாளம் தெரியாத நபர்கள் ஒட்டுசுட்டான் பகுதி காடுகளிலிருந்து பிடித்துவந்து விற்பனைக்காக பேரம்பேசிக் கொண்டிருந்த நிலையில், விவசாய அமைச்சருக்கு குறித்த விடயம் அறிவிக்கப்பட்டு அவரினால் குறித்த சிறுத்தைப் புலிக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
மீட்கப்பட்ட புலிகள் இரண்டும் இன்றைய தினம் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனின் அலுவலகத்தில் வைத்து வடக்கு மற்றும் மேற்கு மாகாணங்களுக்கான வன உயிரிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் வைத்தியர் சந்தண ஜயசிங்கவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த புலிக்குட்டிகள் இரண்டையும், பொறுப்பேற்றுக் கொண்ட வன உயிரிகள் பாதுகாப்பு திணைக்களத்தினர் குறித்த புலிக்குட்டிகளில் ஒன்று ஆண் மற்றையது பெண் எனவும், இவை பிறந்து 3 மாதங்கள் இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
இவற்றின் தாய் புலியை பொறிவைத்து கொலை செய்ததன் பின்னரே குட்டிகளை பிடித்து வந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதுடன், வடக்கு காட்டுப் பகுதி தொடர்பில் எதிர்காலத்தில் தாம் அக்கறை காட்டுவதாகவும் தெரிவித்திருக்கின்றனர்.

ad

ad