புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஆக., 2014

இன்று முதல் குப்பைகள் அகற்றப்பட மாட்டாது; வசந்தகுமார்
-
news
நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இன்று முதல் கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட மாட்டாது என நல்லூர் பிரதேச சபை தலைவர் பா.வசந்தகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் அகற்றப்படும் கழிவுகள் இதுவரை காலமும், கோண்டாவில் டிப்போவிற்கு அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றிலேயே போடப்பட்டது.

இந்த நிலையில், மேற்படி காணியில் கழிவுகள் நிரம்பியதாலும், போதிய இடவசதி இல்லாமையாலும் மேலும் கழிவுகள் போடுவதற்கு காணி உரிமையாளர் மறுத்தமையாலும் அங்கு கழிவுகள் போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனடிப்படையில் கழிவுப் பொருட்களை போடுவதற்கான இடம் இல்லாத காரணத்தால் இந்த முடிவை எடுக்கப்பட்டது. இதேவேளை, ஏ9 வீதி, அரியாலை பகுதியில் அன்பளிப்பாக 2 பேர் 2 ஏக்கர் காணியை வழங்கியுள்ளனர். அதற்குள் கழிவுகள் போடுவதற்கும் , மீள்சுழற்சி செய்வதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பிரதேசம் நன்னீர் சேகரிப்புத் திட்டத்தின் கீழ் வரும் பிரதேசமென்றும் அந்தப் பகுதி வயல் நிலம் என்ற காரணத்தினால் அங்கு கழிவுகளைப் போடுவதற்கு கமநல சேவைகள் திணைக்களமும் வடமாகாண விவசாய அமைச்சும் மறுத்திருந்தது.

எனினும் தற்போதைய விபரங்களை தெரிவித்து விவசாய அமைச்சர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் ஆகியோருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளோம். எனினும் அதற்கு நீண்ட நாட்களாக பதில் ஏதும் வழங்கப்படவில்லை.

அகற்றிய கழிவுகளை போடுவதற்குரிய இடம் இல்லாமல் போனது. அதனையடுத்து இன்றிலிருந்து கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது. இருப்பினும் சந்தைக் கழிவுகள் மட்டும் அகற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad